திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர்!

48

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர்!

சென்னை அடுத்துள்ள திருவொற்றியூரில் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. இங்கு வடிவுடையாம்பிகை உடன் படம் பாக்கநாதர், ஆதிபுரீஸ்வரர் என்ற பெயரில் சிவன் அருள் பாலிக்கிறார். இங்கு சுவாமிக்கும் மூன்று அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து பவுர்ணமியில் வணங்கினால், சகல பிரச்சனைகளும் தீரும். மேலும் திருமணம், புத்திர பாக்கிய தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு சுயம்பு மூர்த்தியாக சிவன் அருள்பாலிக்கிறார்.

எல்லாம் இரண்டு திருவெற்றியூர் தலத்தில்…மூலவர் ஆதிபுரிஸ்வரர், ஒற்றிஸ்வரர், என இரண்டு, வடிவுடையாம்பிகை, வட்டபாறையம்மன் என இரண்டு அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம் பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு, காரணம் காமீகம் என இரண்டு ஆகம பூஜைகள் என இரண்டுகள் இத்தலத்தில் இரண்டு என்று எண்ணிக்கை பிரதானம் பெற்றிஇருக்கிறது.

இங்கு சிவன் பாணலிங்க வடிவில் உயரமாக காட்சி தருகிறார். அம்மனின் 51-சக்தி பீடங்களில் இது இஷீ சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவார பாடல் பெற்ற 274 சிவலாயங்களில் இது 253-வது மாணிக்க தியாகர் சப்தவிடங்கத் தலங்களில் இத்தலம் ஒன்றாகும் தியாகராஜர் பிரசித்தி பெற்ற மூர்த்தி என்பதால் இவரது பெயரிலே இத்தலம் அழைக்கப்படுகிறது.

உயிரை விட துணிந்த சிற்பி பிரளய காலத்தில் உலகம் அழிவுற்று, மீண்டும் புதிதாக உலகம் தோன்றும். அப்போதெல்லாம் பிரம்மா தோன்றி, உயிர்களைப் படைப்பார். ஒரு பிரளயகாலம் வந்தபோது, உலகம் அழிவதை பிரம்மா விரும்பவில்லை. எனவே, உலகம் அழியாமல் காக்கும்படி சிவனை வேண்டி யாகம் நடத்தினார். யாகத்தின் மத்தியில் அக்னி வடிவில் தோன்றிய சிவன், அவரது வேண்டுதலை ஏற்றார். பின், பிரம்மாவின் வேண்டுதலுக்காக லிங்க ரூபமாக எழுந்தருளினார். யாக குண்டம் கோயிலாக உருவானது.

பிரளயம் நீங்கி, உலகம் மீண்டும் துவங்கிய வேளையில் இங்கு எழுந்தருளியதால் இத்தலத்து சிவன், ‘ஆதிபுரீஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். பிரளய வெள்ளத்தை ஒற்றச் செய்து (விலகச்செய்தல்) அருளியதால் தலம் ‘திருவொற்றியூர்’ என்று பெயர் பெற்றது. சென்னை சுற்றுவட்டாரத்தில் மூன்று அம்பிகையர் இச்சா, கிரியா, ஞான சக்திகளாக இருந்து அருளுகின்றனர்.

பல்லாண்டுகளுக்கு முன்பு மேலூர் திருமணங்கீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக சிற்பி ஒருவர், பெரிய பாறையைக் கொண்டு சென்றார்.
வழியில் அந்த பாறை வெடித்து மூன்று பாகங்களாகச் சிதறியது. கலங்கிய சிற்பி, தன் உயிரை விடத்துணிந்தார். அப்போது அம்பிகை அவருக்கு காட்சி தந்து, தன்னை மூன்று வடிவில் சிலையாக வடித்து மேலூர், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகிய தலங்களில் பிரதிஷ்டை செய்யும்படி கூறினாள்.

அதன்படி சிற்பி மூன்று சிலைகள் வடித்து இக்கோயில்களில் பிரதிஷ்டை செய்தார். இதில் இத்தலம் ஞானசக்திக்குரியதாகும். இக்கோயிலில் மேலூரில் திருவுடைநாயகி இச்சா சக்தியாகவும், திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் தலத்தில் கொடியிடைநாயகி கிரியா சக்தியாகவும் அருளுகின்றனர்.

இந்த மூன்று அம்பிகையரையும் பவுர்ணமியன்று காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளில் வழிபடுவது விசேஷ பலன்களைத் தரும். அன்று இந்த மூன்று கோயில்களும் நாள் முழுதும் திறந்திருக்கும். இத்தலவிநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். அம்பாள் வடிவுடைநாயகி, வட்டப்பாறையம்மன் இருவரும் தனித்தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதிகளில் காட்சி தருகின்றார் தியாகராஜர்.