32 செல்வங்கள் தரும் 64 அம்மன்கள்!
32 அறச் செயல்களின் பட்டியல்:-
1.ஆதுலர்க்குச் சாலை (ஏழைகள் ஆதுலர்)
2.ஓதுவார்க்கு உணவு (மாணவர்களுக்கு)
3.அறுசமயத்தோர்க்கு உண்டி (உணவு)
4.பசுவிற்கு வாயுரை (உணவு)
5.சிறைக் கைதிகளுக்கு உணவு
6.ஐயமிட்டு உண் (பிச்சை போடுதல்)
7.திண்பண்டம் நல்கல் (விழாக் காலங்களில் பொங்கல், வடை)
8.அறவைச் சோறு (அன்னதானம்)
9.மகப்பெறுவித்தல் (பிள்ளை பெறுதல்)
10.மகவு வளர்த்தல் (பிள்ளைகளை வளர்த்தல்)
11.மகப்பால் வார்த்தல் (அவர்களுக்கு பால் வழங்கல்)
12.அறவைப் பிணஞ்சுடல் (அனாதைகள் இறுதிச் சடங்கு)
13.அறவைத் தூரியம் ( தூரியம் மேள வாத்தியம் அளித்தல்)
14.சுண்ணம் அளித்தல்
15.நோய்க்கு மருந்து வழங்கல்
16.வண்ணார்
17.நாவிதர்
18.காதோலை
19.கண்ணாடி
20.கண்மருத்து
21.தலைக்கு எண்ணெய்
22.பெண்போகம்
23.பிறர்துயர் காத்தல்
24.தண்ணீர் பந்தல்
மடம் அமைத்தல்
26.குளம் வெட்டல்
27.பூங்கா வைத்தல்
28.ஆவுறுஞ்சுதறி (பசு முதலிய பிராணிகளுக்கு நீர்)
29.விலங்கிற்குணவு
30.ஏறுவிடுத்தல் (இனப்பெருக்கத்த்துக்கு காளைகள்)
31.விலை கொடுத்துயிர் காத்தல்
32.கன்னிகாதானம்
எட்டு மங்களச் சின்னங்கள்:
சாற்றுங்கவரி நிறைகுடந்தோட்டிமுன் றர்ப்பணமா
மேற்றிய தீபம் முர்சம் பதாகை யிணைக்கயலே
நாற்றிசை சூழ்புவி மீதஅட்ட நன்குழையின்
மேற்றிதழ் வேற்றடங்கட்செய்ய வாய்ப்பைம்பொன்ந்த் மெய்த்திருவே
கவரி, நிறைகுடம் (பூர்ணகும்பம்), தோட்டி(அங்குசம்), தர்ப்பணம் (கண்ணாடி), தீபம், முரசம், பதாகை (கொடி), இணைக்கயல் ( இரட்டை மீன்)– ஆகியன அட்டமங்கலம் எனப்படும்.
வேண்டுநற்சுற்ற மிராசாங்க மக்கள்மேவு பொன்மணி
யாண்டிடுந்தொண்டு நெல்வாகன மாமிவையட்டசெல்வங்
காண்டவி சீதல் கால்கெழு நீரொடு முக்குடி
நீராண்டளித் தேபுனலாட்டனல் லாடை யணிதல்பினே
நல் சுற்றம், ராஜாங்கம், பிள்ளைகள் தங்கம், அணிவதற்குரிய ஆடை, ஆளுதர்க்குரிய அடிமை, நெல் முதலிய தானியம், வாஹனம் – இவையே அட்ட ஐஸ்வர்யம் (எட்டு செல்வங்கள் ) எனப்படும்.
16 பேறுகள்:
அழகு, வலிமை, இளமை, நன் மக்கள், நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், நிலம், பெண், தங்கம், அறிவு, உற்சாகம், கல்வி, வெற்றி, புகழ், மரியாதை, தானியம் (உணவுப் பொருட்கள்).
துதி, வாணி, வீரம், விசயம், சந்தானம், துணிவு, தனம், அதி தானியம், சவு பாக்கியம், போகம், அறிவு, அழகு, புதிதாம் பெருமை, அறம் குலம் நோயின்மை, பூண் வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே” — (காளமேகப் புலவர்)
பொருள்: மதுரையில் எழுந்தருளிய இறைவா! புகழ் , கல்வி, வீரம், வெற்றி, பிள்ளைப் பேறு, துணிவு, செல்வம், மிகுந்த நெல் முதலிய தானியம், நலம், போக, அறிவு, அழகு, புதிது புதிதாக ஏற்படும் சிறப்புகள், தர்ம சிந்தனையுடைய நல்ல குடிப்பிறப்பு, நோயில்லாத வாழ்வு, நீண்ட வயது ஆகிய பதினாறு பெரும் பேறுகளையும் தந்தருள்வாயாக!
