ஆடி அமாவாசை ஸ்பெஷல் !

278

*திருநாவுக்கரசருக்கு கயிலாய தரிசனம் வரலாறு*

காளஹஸ்தி தரிசனம் முடிந்ததும் அங்கேயிருந்து திருக்கோகர்ணத்தைத் தரிசித்தார்.. அப்படியே வடநாட்டிலுள்ள தலங்களையும் தரிசிக்க ஆவலானது.. அத்தோடு கயிலாயமாமலையையும் தரிசிக்க முடிவெடுத்தார்..

வயதான காலத்தில் உடன் வந்தவர்களை மறுத்து விட்டு ஸ்வாமிகள் தன்னந்தனியராக
நடந்தார்…

கயிலாய மாமலையில் ஏறும் போது மிகவும் சிரமத்துக்கு ஆளானார்.. கால்கள் தேய்ந்து
போயின.. கைகளை ஊன்றி தவழ்ந்து சென்றார்.. முழங்கால்களும் தேய்ந்து முறிந்தன..
அதன்பிறகு ஊர்ந்தபடியே மலைச் சரிவில் பயணித்தார்…

என்ன கஷ்டம்!.. என்ன கஷ்டம்!.. இருந்தாலும் வயதான பெரியவருக்கு தான் எவ்வளவு
தைரியம்

இதோ இருக்கிற தஞ்சாவூர்..ல இருந்து திருவையாறு வர்றதுக்குள்ள.. நாம நொந்து
நூலாகிப் போறோம்!.. கடுமையான பனிமலையில் தன்னந்தனியா வயசான
அதுவும் ஊர்ந்தபடியே போனாங்களே… எல்லாம் நமக்காகத் தானே.. அவ்வளவு
கஷ்டத்தையும் ஏத்துக்கிட்டாங்க…

அப்பர் ஸ்வாமிகளுக்கு முன்னே.. காரைக்காலம்மையாரும் இப்படித் தான் கயிலாய
மலையில கஷ்டப்பட்டு தலையை ஊன்றிப் போனாங்க!.

அப்பர் ஸ்வாமிகள்.. மானசரோருவ ஏரிக் கரைக்கு வந்துட்டாங்க.. அதுக்கு
மேலே அவரால் நகரக்கூட முடியலே.. இருந்தாலும் மனமுருகிப் பதிகம் பாடினார் –
ஸ்வாமிகள்…

அதெல்லாம் முடியாது.. கயிலை தரிசனம் செய்யாம இங்கேருந்து போக மாட்டேன்…ன்னு
விடாப்பிடியா இருந்தார்….

பக்தனோட மன உறுதி பரமனுக்கு சந்தோஷமா இருந்தது.. நீ வந்து என்ன தரிசனம்
செய்றது… நானே வந்து உனக்கு தரிசனம் தர்றேன்.. அப்படின்னு முடிவு செஞ்சார் –
ஈஸ்வ ரன்….

ஐயா.. இதோ இந்த தடாகத்தில் மூழ்குங்க… நீங்க நினைச்ச மாதிரி சிவ தரிசனம் காணலாம்..
அப்படின்னு சொன்னார்..

அதைக் கேட்ட அப்பர் ஸ்வாமியும் அந்த ஏரியில் இறங்கி தண்ணீரில் மூழ்கினார்.. அப்பர்
ஸ்வாமி எழுந்தபோது காட்சி கொடுத்த இடம் தான் திருவையாறு..

சிவனும் சக்தியும் இந்த உலகத்தில் உள்ள உயிர்த் திரளா ஆனந்தத் திருக்காட்சி
கொடுத்தாங்க.. யானையாக, பசுவாக, மானாக, கிளியாக புறாவாக, கோழியாக, பன்றியாக
இப்படி சகல உயிர்களிலேயும் சிவ சக்தி தரிசனம் கண்டார் அப்பர் ஸ்வாமிகள்..

அதனால தான் கண்டறியாதன கண்டேன்!.. என்று பாடி உருகினார்…

“மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதுஞ்சுவடு படாமல் ஐயாற டைகின்றபோது
காதல் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்..
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்!..”

ஈஸ்வரன் துறவியாக உருமாறி வந்தார். தரிசனமும் தந்தார்.