Thursday, October 19, 2023
HomeAanmeega Thagavalgalபிதுர் தோஷம் நீக்கும் ஆவூர் பஞ்ச பைரவர்கள்!

பிதுர் தோஷம் நீக்கும் ஆவூர் பஞ்ச பைரவர்கள்!

பஞ்ச பைரவர்கள் – பிதுர் தோஷம் நீக்கும் “ஆவூர் பஞ்ச பைரவர்கள்”!

கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. (ஆ என்றால் பசு).

இத்திருத்தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது.

இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த “பிதுர் தோஷ நிவர்த்தியாகும்”. பிதுர் சம்பந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த பைரவரை வணங்கி பூஜையில் ஈடுபட்டால் உடனடி பலன் கிடைக்கும். சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள்.

ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் “பிதுர் தோஷமே”. பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.

நமது நீண்டகால ருணம்கடன் பிரச்சனை/தீராத நோய் தீர ஸ்ரீ காலபைரவர் வழிபாடு! நமக்கு வர வேண்டிய நியாயமான பணம் யாரேனும் தர மறுத்தால் கூட அதுவும் வந்து விடும், நன்றாக நினைவில் கொள்ளுங்கள், நமக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பணம், சொத்து திரும்ப கிடைக்கும்! அது அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கொடுத்த பேராசைக்கு கொடுத்த பணம்?

ஸ்ரீ காலபைரவர் காயத்ரி:

ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே ! சூல ஹஸ்தாய தீமஹி ! தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!
ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே ! சூல ஹஸ்தாய தீமஹி ! தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!
ஒம் ஷ்வானத் வஜாய வித்மஹே ! சூல ஹஸ்தாய தீமஹி ! தன்னோ பைரவ : ப்ரசோதயாத் !!

இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 9 முறை அல்லது 9ன் மடங்கில் சொல்லுங்கள் செவ்வாய்க்கிழமை அன்றும் தேய்பிறை அஷ்டமி அன்று 108 முறை கட்டாயம் சொல்லுங்கள் நல்ல பொழுது பிறக்கும் பைரவர் பாதங்கள் போற்றி போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை

பைரவர் பாதங்கள் போற்றி போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 4 =

Most Popular