வாஸ்து சாஸ்திரப்படி நம் வீட்டில் என்னென்ன செடிகளை வைக்கலாம்?
துளசி:
- முக்கியமாக அனைவருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய செடிதான் இந்த துளசி. இந்த துளசி செடியானது மகாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படுகிறது.
- வாஸ்து செடியான துளசியினை வீட்டில் வளர்த்து வரலாம். துளசி சாப்பிட்டு வ்ருவதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
வாடாமல்லி:
மலர் வகைகளில் வாடாமல் இருக்கும் தன்மை கொண்ட பூ வாடாமல்லி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வாஸ்து ரீதியாக வாடாமல்லி செடியினை வீட்டில் வளர்த்து வந்தால் நேர்மறை எண்ணங்கள் வரும்.
கோழிக்கொண்டை:
- வாஸ்து சாஸ்திரம்படி வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகளுள் ஒன்று இந்த கோழிக்கொண்டையும். வாடாமல்லி போன்றே இந்த செடியும் வாடாத நிலை கொண்டவை.
- இந்த கோழிக்கொண்டை செடியினை வீட்டில் வளர்த்து வர வீட்டு பூஜை அறைக்கு மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு தேவைப்படும் மாலைகளுக்கு இந்த பூவினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
பொன் அரளி:
மஞ்சள் நிறத்தினை உடைய பொன் அரளி பூ செடியினை வளர்த்து வந்தால் வீட்டில் உள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கி செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
சங்கு பூ:
- சங்கு பூ செடிகளில் 2 வகை உள்ளன. ஒன்று நீல நிறமும், மற்றொன்று வெள்ளை நிறத்தை சேர்ந்தவையாகும்.
- சங்கு பூவானது வீட்டிற்கு மிகவும் அழகு சேர்க்கக்கூடிய பூவாகும். நீளம், வெள்ளை நிறம் கொண்ட சங்கு பூ சிவன் மற்றும் விநாயக பெருமானுக்கு உகந்த மலராகும். இந்த பூவினை வீட்டில் வளர்த்து வரலாம்.
மூங்கில்:
வாஸ்து முறையான மூங்கில் செடியினை வீட்டில் வளர்த்து வந்தால் நம் உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும். மேலும் மூங்கில் செடியினால் வீட்டில் செல்வம் அதிகமாக இருக்கும்.
கற்றாழை:
கற்றாழையில் நாம் எண்ண முடியாத அளவிற்கு மருத்துவ குணங்கள் உள்ளன.
கறறாழை செடியினை வீட்டில் வளர்த்து வந்தால் வாஸ்து ரீதியான அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விடும்.
செம்பருத்தி:
தலைமுடி சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த செடி இதுதான்.
மேலும் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த செம்பருத்தி செடியினை வீட்டில் வளர்த்து வர செவ்வாய் தோஷம் நீங்கும்.
மணி பிளாண்ட்:
மணி பிளான்ட் செடியினை வளர்த்து வர கடன் தொல்லை நீங்கி வீட்டில் செல்வ வளம் அதிகரித்து காணப்படும்.
