அக்னி நக்ஷத்திரம் ஸ்பெஷல் ! May 4 to May 28 !

569

சித்திரை மாதத்தில் புத்தாண்டு விழா,
ஆதிசங்கரர் ஜெயந்தி,
ராமானுஜர் ஜெயந்தி,
மச்சாவதார ஜெயந்தி,
வராக ஜெயந்தி,
நரசிம்ம ஜெயந்தி,
வாசவி ஜெயந்தி,
ரமணர் ஆராதனை விழா,
காமன் பண்டிகை,
ஸ்ரீரங்கம் கஜேந்திர மோட்சம்,
தேர்த் திருவிழா,
சமயபுரம் மாரி பூச்சொரிதல் விழா,
காரைக்குடி கொப்புடையம் மன் தேர்த் திருவிழா,
சித்திரை அன்னா பிஷேகம்,
சப்த ஸ்தான விழா,
ராசிபுர திருமணம்,
தேர்விழா,
மகாலட்சுமி அவதார தினம்,
பாபநாசம் சிவ- பார்வதி திருமணக் கோல காட்சி,
தங்கத்தேர்,
சித்திரகுப்த பூஜை,
குருவாயூர் விஷுக்கனி,
நெல்லுக்கடைமாரி செடல் விழா,
கூத்தாண்டவர் விழா,
கன்னியா குமரியில் சூரிய அஸ்தமனம், சந்திர உதயம் கண்டு நிலாச்சோறு என்ற சித்திரான்னம் உண்ணும் விழா,
அட்சய திரிதியை கனகதாரா யாகம்,
மகாலட்சுமி எட்டு நாள் காட்சி தரும் விழா
என எல்லாமே நன்மை தரும் விழாக்களைக் காணலாம்.

அக்னி நட்சத்திரம் என்ற கொடிய வெயில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 21 நாட்கள் நம்மை வாட்டி வதைக்கும்.

கத்திரி வெயில் என்று கூறும் சித்திரை மாத இறுதி பத்து நாட்களும்; வைகாசி மாத முதல் பத்து நாட்களும் இருக்கும். சில வருடங்களில் 25 நாட்கள்கூட இருக்கும்.

இந்நாட்களில் சூரியனுக்கு மிக அருகே பூமி இருக்கும்.கார்த்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி.கார்த்திகை நெருப்பைக் கக்கும் நட்சத்திரம்.எனவே இதை அக்னி நட்சத்திரம் என்கிறோம் ..

முன்னொரு காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் ஏற்பட்டது. அக்னி தேவன் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும்.
எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.

காண்டவ வனத்தில் உள்ள அரக்கர்களும் கொடிய விலங்குகளும் தாவரங்களும் சாந்தமான விலங்குகளும் தங்களை அக்னி தேவனின் அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வருணதேவனிடம் முறையிட்டன. “அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்’ என வருணன் கூறியதையறிந்த அக்னி கிருஷ்ணரிடம் ஓடி, “நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என்னைக் காப்பாற்றுங்கள்’ என முறையிட்டான்.

திருமால் அர்ச்சுனனைப் பார்க்க, அர்ச்சு னன் வான் நோக்கி அம்புகளை எய்து சரக்கூடு கட்டி, மழை நீர் வனத்தில் விழாமல் தடுத்தான்.
அக்னி வனத்தை எரிக்கலானான்.

அப்போது கண்ணன், “அக்னியே’! உனக்கு 21 நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் உன் பசியையும் பிணியையும் போக்கிக் கொள்’ என்றார்.

அதன்படி அக்னி 21 நாட்கள் வனத்தை எரித்து விழுங்கிய நாட்கள் தான்
அக்னி நட்சத்திர நாட்கள் …

அக்னி நட்சத்திர நாட்களில் முருகனையும்;
பரணிக்கு உரிய துர்க்கை,
ரோஹிணிக்கு உரிய பிரம்மன்,
கார்த்திகையின் அதிதேவதை அக்னி ஆகியோரையும் வழிபடலாம்.

அகமும் புறமும் குளிரும் வண்ணம் தருமம் செய்து, கடவுள்
அருளைப் பெறலாம்.