ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற மங்களகரமான நிறங்கள்!
சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளினை அடிப்படையாகக் கொண்டது தான் வாரத்தின் ஒவ்வொரு நாளும். இந்த கோள்கள் அதிக சக்தி வாய்ந்தவை. அதோடு நமது வாழ்வை பல்வேறு விதமாக பாதிக்க கூடியதும் கூட. இந்த கோள்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான வண்ணங்களும் இருக்கும். இந்த கோள்களின் வண்ணங்களைக் கொண்டு ஒவ்வொரு நாளுக்கும் வண்ணங்கள் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு கோளுக்குரியதாகக் கருதப்படுகிறது.
எனவே, அந்தந்த நாளுக்குரிய வண்ணத்தை அணிந்து அந்தந்த கோளினை வணங்கி நல்ல பலன்களை அடைந்து அந்த நாளை சிறப்பாக்க வேண்டும்.
திங்கள்: சந்திரன்
திங்கள் சந்திரனைக் குறிக்கும் சொல். இது வெள்ளை நிறத்துடன் தொடர்புடையது. எனவே வெள்ளை நிற உடைகளை அணிவது நல்ல அதிர்ஷ்டத்தை தரும். இந்த உடைகள் வெள்ளை நிற நகைகள் அதாவது முத்து, வைரம் ஆகியவற்றினையும் குறிக்கும்.இன்று சந்திரனை வழிபட வேண்டும்.
செவ்வாய்: செவ்வாய்
சிவப்பைச் சார்ந்த நிறங்களைக் குறிக்கும் சிவப்பு வண்ண உடைகளையும், சிவப்புக்கல் அல்லது பவளம் ஆகிய நகைகளையும் அணிந்து செவ்வாய் கிரகத்தினை வழிபட வேண்டும்.
புதன்:
பசுமையைக் குறிக்கும் புதன்கிழமையில் பச்சை நிறம் முக்கியத்துவம் பெறுகிறது. பச்சை நிற உடைகள், மரகதம் உள்ளிட்ட பச்சை நிறக் கற்கள் ஆகியவற்றை அணியலாம்.இன்று புத கிரகத்தினை வழிபட வேண்டும்.
வியாழன்: குரு
மஞ்சள் வியாழக்கிழமைகளில் மஞ்சள் நகைகள் மற்றும் தங்க நிற உடைகளை அணிவது மங்களகரமாக இருக்கும்.இன்று நவக்கிரக குருவை வழிபட வேண்டும்.
வெள்ளிக்கிழமை: சுக்கிரன்
இளம் சிவப்பு (பிங்க்) வெள்ளிக்கிழமைகளில் இளம்சிவப்பு நிறத்தை தேர்வு செய்யுங்கள்.இந்த பிங்க் நிறத்தில் உடைகள், மாணிக்கம் உள்ளிட்ட சிவப்பு நிறக்கற்களை கொண்ட நகைகள் ஆகியவற்றை அணியலாம்.இன்று சுக்கிரனை வழிபட வேண்டும்.
சனிக்கிழமை: சனி
கருப்பு சனிக்கிழமை கருப்பு நிறம் சிறந்தது. அதேப்போல் நீலம், ஊதா மற்றும் வாடாமல்லி நிறங்களையும் அணியலாம். நீலக்கல் உள்ளிட்ட இந்த நிறங்களை ஒத்த கற்களைக் கொண்ட நகைகளையும் அணியலாம். சனிக்கிழமை நாளன்று சனிக்கிரகத்தை வழிபட வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை: சூரியன்
சூரியனுக்குரிய நிறங்கள் இந்த நாளில் சூரியனை ஒத்த நிறங்கள் சிறந்தவை. ஆரஞ்சு நிறம் எதிரிகளை விலக்க வல்லது மற்றும் உடனடியாக பலன் தர வல்லது. விஷம் உள்ளிட்ட ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கவல்லது. எனவே அன்று ஆரஞ்சு நிற உடைகள் மற்றும் நகைகளை அணிவது பொருத்தமானதாக இருக்கும். இன்று சூரிய கிரகத்தை வழிபட வேண்டும்.