தங்க ஆபரணங்களின் அற்புதமான சக்தி பற்றி தெரியுமா?
- நவக்கிரகங்களில் பூரண சுப கிரகம் என்று சொல்லப்படும் குரு பகவானின் அம்சம்.
- சஹஸ்ரார சக்கரத்தி இயக்கும். தீய சக்திகளை விலக்கும்.
- தங்க மோதிரத்தை பெண்கள் இடது கை மோதிர விரலிலும், ஆண்கள் வலது கை மோதிர விரலிலும் அணிய வேண்டும். அதிர்ஷ்டமும், குழந்தை பாக்கியமும் அள்ளித்தரும்.
- மோதிர விரலில் தங்க மோதிரம் அணிவதால் தடைகள் விலகுவதோடு தெய்வீக சிந்தனையும் மேலோங்கும்.
- உடலில் வெப்பத்தையும், விஷத் தன்மையையும் நீக்கும் தன்மை தங்கத்திற்கு உண்டு.
- காய்ச்சல் மற்றும் சளித்தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் தங்க மோதிரத்தை சுண்டு விரலில் அணிந்து கொண்டால் பாதிப்பு குறையும்.
- பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவத்திற்கு பிரச்சனை வந்தால் தங்க மோதிரத்தை நடு விரலில் அணிந்து கொள்ளலாம்.
- மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க மோதிரத்தை ஆட்காட்டி விரலில் அணிந்து கொள்ளலாம்.
- தம்பதிகளுக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்க கழுத்தில் தங்க நெக்லஸ் அணிந்து கொள்ளலாம்.
- வயிறு தொடர்பாக நோய்கள், உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க நகைகள் அணிந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- மேஷம், கடகம், சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்கள் தங்கம் அணிந்து கொண்டால் வாழ்க்கையில் உயர்வும் அதிர்ஷமும் உண்டாகும்.
- தங்கம் அணிந்து கொண்டு மது அருந்தவோ அல்லது அசைவம் சாப்பிடவோ கூடாது. அதையும் மீறி செய்தால் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியின்மை உண்டாகும்.
- கர்ப்பிணிப் பெண்களும், வயதானவர்களும் குறைவான அளவில் தங்க நகைகள் அணிந்து கொண்டால் உடலுக்கு நலம் தரும்.
- சனி பகவானின் அம்சமான தொழில்களான எண்ணெய், நிலக்கரி, கரி, இரும்பு, பழைய பொருட்கள் விற்பனை தொடர்பான தொழில் செய்பவர்கள் தங்கம் அணிவதை தவிர்க்க வேண்டும்.
- தங்கத்தை கனவில் கண்டால் பணம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- தங்கத்தை இடுப்பிற்கு கீழே அணியக் கூடாது. மகாலட்சுமி மற்றும் குரு பகவானின் அம்சம் என்பதால் இடுப்பிற்கு கீழ் அணிந்தால் துரதிர்ஷம் உண்டாகும்.
- குழந்தைகள் தங்கத்தை சிகப்பு கயிற்றோடு கோர்த்து அணிவது நல்லது.
- பழமையான தங்க நாணயங்களை கனவில் கண்டால் வேலை அல்லது தொழிலில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
