Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalதை வெள்ளிக்கிழமையும் மாவிளக்கு வழிபாடும்!

தை வெள்ளிக்கிழமையும் மாவிளக்கு வழிபாடும்!

தை வெள்ளிக்கிழமையும் மாவிளக்கு வழிபாடும்!

தை மாத வெள்ளிக்கிழமையின் சிறப்புகள்:

தை மாத வெள்ளிக்கிழமைகளில் வீட்டுக்கருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்வது மிகச்சிறப்பான பலன்களை தரும். முடிந்தால், செந்நிற மலர்கள் சூட்டி வழிபடச்டு, செவ்வரளி மாலை சார்த்துவது மிகவும் விசேஷம். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். அதேபோல ஒவ்வொரு மாதமும் வரும் எல்லா செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய அற்புதமான நாட்கள். அதிலும் தை மாதம் வரும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில், மகாசக்தி குடிகொண்டிருக்கும் தலங்களில் பெண்கள் முதலான பக்தர்கள் பலரும் வணங்கி வழிபடுகிறார்கள்.

வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோயிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களையும் கண் திருஷ்டி முதலானவற்றையும் நீக்கியருளும் என்பார்கள். எனவே வெள்ளிக்கிழமை , அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். துர்க்கை சந்நிதியில் நெய் மற்றும் எலுமிச்சை தீபமேற்றி வழிபடலாம்.

தை வெள்ளி க்கிழமை அன்று என்னனென்ன ஸ்லோகம் பாராயனம் செய்யலாம்:
தை மாதத்தின் வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு விசேஷம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்த தை வெள்ளியில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. பொதுகாக தை வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வழிபாடு செய்தால் கோடீஸ்வர யோகம் தேடி வரும் என்று சொல்வார்கள்.

பலன்கள்:

வீட்டிலுள்ள திருஷ்டி, எதிர்மறையான எண்ணங்கள் முதலானவை நீங்கும். மங்கல காரியங்களை விரைவில் நடத்தித் தருவாள் அன்னை பராசக்தி. தை முதல் வெள்ளி தொடங்கி, அடுத்தடுத்து வரும் தை வெள்ளியிலும் அம்மன் தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். இதன் கூடவே, மாவிளக்கு ஏற்றி சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஒவ்வொரு வாரமும் ஏதேனும் பிரசாதம் வழங்குவதால், தனம் தானியம் பெருகி சிறப்புடன் வாழ அம்பிகை அருள் புரிவாள்.

மாவிளக்கின் மகத்துவம்:

இடித்த பச்சரிசி, வெல்லப்பாகு, கொஞ்சம் ஏலக்காய், எள் முதலானவற்றைக் கலந்து மாவாக்கி, அதில் விளக்கு ஏற்றி வழிபடவேண்டும். உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது அன்னமே. வெல்லத்தின் குணம் மதுரம் .அதாவது இனிமை.மதுரமான அம்பிகை மதுரமானவள். ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள். அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம். நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோம். ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார். அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது. மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றுகிறோம்.

குலதெய்வம் தெரிந்தவர்கள், இந்த தை வெள்ளி க்கிழமை அன்று வீட்டிலேயே ஆத்மார்த்தமாக குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவு செய்யலாம். அதேபோல் குலதெய்வம் தெரியாதவர்கள், நம் வீட்டுக்கு அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று மாவிளக்கு ஏற்றி வழிபடலாம். மாவிளக்கில் கொஞ்சமாக நெய் விட்டு தீபமேற்றுவது, இல்லத்தில் உள்ள தரித்திர நிலையைப் போக்கி, ஐஸ்வர்ய பாக்கியங்களை அள்ளித்தரும்.

நம்மையே விளக்காகவும், மனதை நெய்யாகவும், அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வ வழிபாடு இது. அம்மன் கோவிலில் தை வெள்ளி க்கிழமை அன்று மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்த மாவிளக்கு வழிபாடு செய்ய வேண்டும். பெரும்பாலான வீடுகளில் ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு போடுவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள். இதே போல், கோவில்களில் பக்தர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு செவ்வாய் அல்லது வெள்ளி க்கிழமை தினத்தில் அம்பிகைக்கு மாவிளக்கு ஏற்றி கூட்டு வழிபாடு செய்யும் வழக்கமும் உண்டு.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 13 =

Most Popular