Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalஎந்த நாளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

எந்த நாளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

எந்த நாளில் விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

இறைவனை விரதமிருந்து வழிபடுவது சிறப்பை தரும். எந்த கிழமைகளில் யாருக்கு என்ன விரதமிருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை அறிந்து வழிபடுவது இன்னும் சிறப்பு.

ஞாயிற்றுக்கிழமை:

ஞாயிற்றுக்கிழமை கதிரவனுக்கு உகந்த நாள். இந்த நாளில், காலையில் எழுந்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டு ஆதித்திய ஹ்ருதயம் பாராயணம் செய்து வழிபடலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோவிலுக்குச் சென்று வழிபடுவது நல்லது.

பலன்கள்: ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்தால் தீராத நோய்கள் அகலும்.

திங்கட்கிழமை:

திங்கட்கிழமை ஈசனுக்கு உகந்த நாள். இதை சோமவார விரதம் என்பார்கள். கார்த்திகை மாத சோமவாரத்தில் விரதம் இருந்தால் மிகுந்த நற்பலன்களை தரும்.

பலன்கள்: திங்கட்கிழமை விரதம் இருந்தால் கணவன் – மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

செவ்வாய்க்கிழமை: 

மௌன அங்காரக விரதம் இருக்க அருமையான நாள். செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் விரதத்தின் தன்மை பொறுத்து தோஷம் நீங்கும். செவ்வாய்க்கிழமை முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று கந்தக் கடவுளை வழிபடுவது நல்லது.

பலன்கள்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால் கடன் பிரச்சனை தீரும். மேலும் தீர்க்க சுமங்கலி யோகம் கிடைக்கும்.

புதன்கிழமை:

புதன்கிழமை விரதம் இருந்தால் கல்வி, புகழ், செல்வம் கிடைக்கும். இந்த நாளில், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். புதன்கிழமை நரசிம்மர் கோவிலுக்கு சென்று பானகப் பிரசாதம் வழங்கி வழிபடுவது சிறப்பு.

பலன்கள்: புதன்கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும்.

வியாழக்கிழமை:

வியாழக்கிழமை குருக்கு உகந்த நாள். நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டக்கடலை மாலை அணிவித்து வணங்க வேண்டும்.

பலன்கள்: இந்த நாளில் விரதமிருந்தால் குருவின் அருளால் திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் கிட்டும். சகல காரியங்களும் கைகூடும்.

வெள்ளிக்கிழமை:

வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். சுக்கிர வார விரதம் இருப்பதற்கு அருமையான நாள். சிவாலயத்தில் உள்ள உமாதேவிக்கு பூஜை செய்து பாயசம், வடை நைவேத்யம் செய்து வழிபடலாம்.

பலன்கள்: வெள்ளிக்கிழமை விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.

சனிக்கிழமை:

சனீஸ்வர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள். இந்த நாளில், கோவிலுக்குச் சென்று, ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு எள்தீபம் ஏற்றி வழிபடுவது, மிகுந்த பலனைத் தரும். மேலும் கருப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுவது இன்னும் சிறப்பு.

மேலும் திருமாலுக்கு உகந்த நாள். திருப்பதி வெங்கடாசலபதிக்கு உகந்த நாள். பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். சனிக்கிழமையில் காக்கைக்கு அன்னமிடுவது நல்லது. கேது தசை நடப்பவர்கள் சனிக்கிழமையில் விரதமிருப்பது அவசியம். மௌன விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு.

பலன்கள்: சனிக்கிழமையில் விரதம் இருந்தால் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். செல்வம் பெருகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =

Most Popular