Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalமகாமேரு வைத்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்!

மகாமேரு வைத்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்!

மகாமேரு வைத்து வழிபடுவதால் உண்டாகும் பலன்கள்!

ஒன்பது கட்டுகள் கொண்ட இந்த மகாமேரு தான் அம்பாள் உறையும் இடமாகும். சாதாரண கோடுகளும் முக்கோணங்களும் தான் நம் கண்களுக்கு தெரியும். ஆனால் இதில் தான் அனைத்து சக்திகளும் அடங்கியிருக்கின்றன. மகாமேரு ஆவரணங்கள் என்று சொல்லக்கூடிய ஒன்பது சுற்றுக்கள் இருக்கின்றன. இவற்றின் நடுவில் திரிகோணத்தின் மத்தியில் தான் ஸ்ரீ சக்கர நாயகி என்று போற்றப்படும் பராசக்தியானவள் பிந்து என்கிற புள்ளியாகக் காட்சித் தருகிறாள்.

சப்தத்திற்கும் ஒரு உருவம் உண்டு. எனவே, ஒலிக்கும் ஒலிகள் அனைத்தையும் முறையாக ஒழுங்குப் படுத்தி சீராக்கி – வடிவமாக ஓம் என்பது தான் மகாமேரு.
சக்தி வழிபாட்டின் மிக முக்கியமான பரிகார தேவதைகள் 64 (அறுபத்து நான்கு யோகினிகள்). இது அன்னையிடம் இருந்து தோன்றிய அபரிமிதமான சக்திகளாகும். சஷ்டி என்றால் 6 (ஆறு) சதுர் என்றால் 4 (நான்கு) இவ்வாறாக 64 கோடி யோகினியரால் பூஜிக்கப்படுபவள் என்பதே உண்மை. இந்த எண்ணிக்கை அறுபத்து நான்கை மையப்படுத்தி ஸ்ரீ மகாமேரு பாற்கடலை கடைந்தனர்.

இதனால் வெளிவந்த அனைத்து சக்திகளும் இதனுள் அடக்கம் ஆயிற்று. மனிதன் தன்னை கட்டுப்படுத்தி சித்தபுருஷாக வளர்ந்து அன்னையின் அருளை உணரும் ஆன்மீக நிலையின் முடிவே, ஸ்ரீ மகாமேருவின் தத்துவமாகும்.அதுமட்டுமின்றி இதில் மும்மூர்த்திகளும் வாசம் செய்கின்றனர்.வீட்டின் பூஜையறையில் வைத்து பூஜை செய்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.தொழில் செய்யும் இடங்களில் வைத்து வழிபட்டால் தொழில் விருத்தி கிடைக்கும்.பணக்கஷ்டம் நீங்கும்.

ஆணவம் vs ஆன்மா:
1. ஆணவம் தனக்கு மட்டும் சேவை செய்ய முயலும். ஆன்மா மற்றவர்களுக்கும் சேவை செய்ய முயலும்.
2. ஆணவம் எப்பொழுதும் வெளிப்புறமாக அங்கீகரிக்க முயலும். ஆன்மா எப்பொழுதும் உள் நம்பகத்தன்மையையாய் இருக்க முயலும்.
3. ஆணவம் வாழ்க்கையை போட்டி மனப்பான்மையோடு பார்க்கும். ஆன்மா பரிசாய் கொடுத்த வாழ்க்கையாய் பார்க்கும்.
4. ஆணவம் தன்னை மட்டும் பாதுக்காக முயலும். ஆன்மா மற்றவரையும் பாதுக்காக முயலும்.
5. ஆணவம் வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்கும். ஆன்மா உள்தோற்றத்தை பார்க்கும்.
6. ஆணவம் பற்றாக்குறையை உணரும்.ஆன்மா மிகுதியை உணரும்.
7. ஆணவம் அழியும். ஆன்மா அழியாது.
8. ஆணவம் காமத்தை ஈர்க்கும். ஆன்மா அன்பை ஈர்க்கும்.
9. ஆணவம் ஞானத்தை தேடும். ஆன்மா ஞானமாகவே இருக்கும்.
10. ஆணவம் பரிசை மட்டும் அனுபவிக்கும். ஆன்மா வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும்.
11. ஆணவம் பல வலிகளுக்கு காரணமாக இருக்கும். ஆன்மா மனக்காயங்களை ஆற சிகிச்சை முறைக்கு காரணமாக இருக்கும்.
12. ஆணவம் இறைவனை நிராகரிக்கும். ஆன்மா இறைவனை சரணடையும்.
13. ஆணவம் பூர்த்தி செய்ய முயலும். ஆன்மா அழியாமல் முழுமையாய் இருக்கும்
14. ஆணவம் என்பது நான் ஆன்மா என்பது நாம்.

RELATED ARTICLES

Most Popular