Monday, October 16, 2023
HomeAanmeega Thagavalgalநரசிம்மரை வழிபட கிடைக்கும் நன்மைகள்!

நரசிம்மரை வழிபட கிடைக்கும் நன்மைகள்!

நரசிம்மரை வழிபட கிடைக்கும் நன்மைகள்!

  1. நரசிம்மரை வழிபட வழிபட எதிரிகளை வெல்லக் கூடிய பலம் கிடைக்கும்.
  2. 108 திவ்ய தேசங்களில் சிங்கவேள்குன்றம் என்பதும் ஒன்றாக கருதப்படுகிறது. இங்குள்ள பதிகங்கள், பாசுரங்கள் என்று அனைத்திலும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
  3. நரசிம்மருக்கு சிங்கபிரான், நரசிங்கம், அரிமுத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆளனரி என்று பல பெயர்கள் உண்டு.
  4. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.
  5. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.
  6. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.
  7. நரசிம்மனின் தேஜஸ், காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
  8. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை ஏழு உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.
  9. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.
  10. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.
  11. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.
  12. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.
  13. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்குச் செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.
  14. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.
  15. நரசிம்மரை வழிபடும் போது “நரசிம்ஹாய நம’’ என்று சொல்லி ஒரு பூவைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தைகளையும் கற்ற பலன் உண்டாகும்.
  16. “அடித்த கை பிடித்த பெருமாள்’’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.
  17. நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.
  18. எல்லாவற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ‘ம்ருத்யுவேஸ்வாஹா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.
  19. மங்களகிரி கோயிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.
  20. யோகா சொல்லி கொடுக்கும் நரசிம்மர் கோயில்கள் பல உண்டு. ஆமை அவதாரத்தில் உள்ள ஸ்ரீகூர்மம் கோயில் எதிரிலும் ஒரு யோகானந்த நரசிம்ம சுவாமி கோயில் உண்டு. வேதாத்ரி என்ற ஊரில் பஞ்ச நரசிம்ம மூர்த்திதான் மூலவர்.
  21. திருமாலின் 10 அவதாங்களில் பரசுராமன் மற்றும் பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதன் காரணமாக அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் வணங்கப்படுவதில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை வணங்குகிறார்கள்.
  22. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.
  23. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்து அவரை சமாதானப்படுத்தினார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப்பட்டுள்ளது.
  24. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.
  25. சிங்கப் பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சந்நதிகள் குகைக் கோவில்களாக உள்ளன.
  26. ஆந்திர மங்களகிரி நாம் கொடுக்கும் பானக நைவேந்தியத்தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக்கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
  27. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், லட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.
  28. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் மரபு.
  29. எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்’’ என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் வழிபடலாம்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 5 =

Most Popular