ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு செவ்வாய் வழிபாடு!

89

ரத்த அழுத்தம் பிரச்சனைக்கு செவ்வாய் வழிபாடு!

மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுவது செவ்வாய் பகவான். செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை. முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமை செவ்வாய். செவ்வாய்க்கு மங்களன், பூமி காரகன் என்று பெயர் உண்டு. ஒருவர் வீடு கட்ட வேண்டுமென்றால் செவ்வாய் கிரகத்தின் அனுகூலம் இருக்க வேண்டும்.

தமிழ்க் கடவுளான முருகப் பெருமான் செவ்வாய்க்குரியவர். இவரை வணங்கி தொடங்கும் எந்த செயல்கள் யாவும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க் கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். செவ்வாயையும், முருகப் பெருமானையும், பூமா தேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கலப் பொருள் வாங்கினால் பன்மடங்கு பெருகுவதோடு, எல்லாச் சிறப்புகளும் நம்மைத் தேடி வரும் என்பது ஐதீகம்.

செவ்வாய் புனித நாள்:

பெருமாளின் மனைவியான பூமா தேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய். பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவனும், மின்னலைப் போன்ற ஒளி கொண்டவனும், குமரனும், சக்தி ஆயுதம் தாங்கியவனும், பெருமை மிக்க மங்களனுமாகிய செவ்வாயைப் போற்றுகிறேன் என்று பெரியவர்கள் போற்றி வழிபடுகின்றனர். பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடலாம்.

மங்களம் தரும் செவ்வாய்:

செவ்வாய் வருவாய் என்று சொல்வார்கள். செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடமும் வைத்தாலும் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றிக் கொடுக்கும். இந்த நாளில் மங்களப் பொருட்களை வாங்குவதும், சுப நிகழ்ச்சி நடத்துவதும் நம்மை சுமக்கும் பூமி தாய்க்கு நாம் நன்றி கடன் செலுத்தலாம்.

செவ்வாய் வழிபாடு:

இந்த கிழமையில் பிறந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் கூறுகின்றன. ஜாதகத்தில், செவ்வாயின் பலத்தை பொருத்தே நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல் துறையினர், பொறியியல் வல்லுநர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும். ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாக உள்ளது. செவ்வாயை வழிபட்டால் ரத்த அழுத்தம், உஷ்ணம், கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

செவ்வாய் வழிபாடு:

செவ்வாய் கிழமைக்கு என்று ஒரு வேகம் உண்டு. செவ்வாய்க்கிழமை அன்று பரிகாரம் செய்தால் அதற்கு பலன் கிடைக்கும். செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பொழுது விரதம் இருந்து வந்தால் 9 வாரத்தில் உங்களுக்கு நல்லது நடக்கும். வியாபாரம் செய்பவர்கள் கண்டிப்பாக செவ்வாய் வழிபாட்டை செய்து வந்தால் வியாபாரம் பெரிய அளவில் விருத்தி செய்யலாம். நல்ல தைரியத்தை கொடுத்து நாம் எடுத்து வைக்கும் எல்லா வியாபாரமும் வெற்றியைத் தரும்.

ஒன்பது செவ்வாய்க்கிழமை விரதம்:

செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் குளித்து அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்துக்கு சென்று வழிபட வேண்டும். பிறகு வீட்டுக்கு திரும்பியதும், வெறும் பால் அல்லது பழ சாறு மட்டும் அருந்தி, விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப்பெருமானுக்குரிய ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்யலாம். மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இப்படி 9 செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால், செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கிவிடும்.

தோஷம் நீங்க விரதம்:

செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்சனைகள் உள்ளவர்களும் செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் சதுர்த்தி விரதம் இருப்பவர்களுக்கு தோஷம் நீங்கி திருமண பாக்கியம் கிடைக்கும்.

செவ்வாய் தோஷம் குறைக்கும் விரதம்:

செவ்வாய் சகோதரர்களுக்கு காரகம் பெற்றவன். செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது. ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்து இருந்தால், அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக் கொடுப்பார்.

சொந்த வீடு யோகம்:

சிறுவாபுரி முருகனை ஒன்பது செவ்வாய்க் கிழமைகளில் வணங்கி வர, வாழ்வில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். நிலம் வாங்கி, வீடு கட்டும் கனவு நிஜமாகும். சிலர் சொந்தமாக ப்ளாட்கூட வாங்கி இருக்கின்றனர், ஒன்பது செவ்வாய்க் கிழமைகள், தொடர்ந்து கோயிலுக்கு சென்று, அவரை வணங்குவதால் ஜாதக ரீதியான கோளாறுகள் தணிந்து, கட்டுப்பாட்டுக்கு வரும். சொந்த வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். தினமும் கந்த சஷ்டி கவசம் படித்தால் செவ்வாய் தோஷத்திற்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம் கிடைக்கும்.