Monday, October 23, 2023
HomeAanmeega Thagavalgalதாலி மாற்றும் போது இதெல்லாம் செய்யவே கூடாது!

தாலி மாற்றும் போது இதெல்லாம் செய்யவே கூடாது!

தாலி மாற்றும் போது இதெல்லாம் செய்யவே கூடாது!

திருமண விழாவில் முக்கியமாக நடக்க கூடிய நிகழ்ச்சியே தாலி அணிவது தான். ஏனென்றால் திருமணமான பெண்களுக்கு தாலி என்பது முக்கியமான ஒன்று. இந்த தாலி நல்ல முகூர்த்தத்தில், மேளதாளத்தோடு, பெரியோர்களின் ஆசியோடு கட்டப்படுகிறது.

பெண் என்பவள் தன் திருமாங்கல்யத்தை பொக்கிஷமாகவே கருதுகின்றாள். சிலர் திருமாங்கல்யத்தை மஞ்சள் கயரில் அணிகின்றனர். மேலும் சிலர் தங்கத்தில் அணிகின்றனர்.

மஞ்சள் கயரில் தாலிக்கொடியை போட்டு இருப்பவர்கள் எந்த கிழமைகளில் அதை மாற்றி கொள்ளலாம் மற்றும் எங்கு வைத்து மாற்றிக்கொள்ளலாம் என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வருடத்திற்கு இரண்டு முறை:

பொதுவாக தாலிக்கயிற்றை வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே மாற்றிக்கொள்ள வேண்டும். தாலிக்கயிறை நாம் அடிக்கடி கழுத்தில் இருந்து மாற்றக்கூடாது. கயிறு மங்கும் தன்மை வந்தால் மட்டுமே அதை மாற்ற வேண்டும். தாலிக்கயிற்றை மதிக்கும் நாம் திங்கள், செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டும் தான் மாற்றவேண்டும். சிலர் வெள்ளிக்கிழமைகளில் மாற்றலாம் என்று சொல்கின்றனர். அப்படி செய்ய கூடாது. அது சிறந்தது அல்ல. தாலியை வெள்ளிக் கிழமைகளில் ஒரு போதும் மாற்றக்கூடாது.

மற்றவர்கள் யாரும் பார்க்கக்கூடாது:

தாலி கயிறை மாற்றும் போது யாருமே பார்க்கக்கூடாது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. பெற்ற தாய் கூட பார்க்க கூடாது என்பது தான் உண்மை. பிறருடைய உதவி இல்லாமல் தான் அவரவர்களுக்கு அவரவர்கள் தாலி மாற்றி கொள்ளவேண்டும்.

தெரியாதவர்கள் அம்மாவின் துணையுடன் ஒரு முறை மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்த முறை யாருடைய உதவியும் இல்லாமல் மாற்றி கொள்ளுங்கள்.

கர்ப்பமாக இருக்கும் பெண்கள்:

முந்தைய காலத்தில் பெண்கள் மஞ்சள் கயிற்றில் தாலி அணிவார்கள். பெண்கள் தினமும் அந்த தாலி கயிற்றுக்கு மஞ்சள் தேய்த்துக் குளிப்பார்கள். சிலர் அந்த முறையை இன்னும் செய்கின்றனர். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அவரது தாலியை மாற்றக்கூடாது.

திருமணமான சில மாதங்களில் கர்ப்பம் தரித்தவுடன் மஞ்சள் பூசிய தாலிக்கயிறு, தாய்க்கும் சேய்க்கும் பாதுகாக்கும் கிருமிநாசினியாக இருந்தது. தாலிக்கயிற்றில் இருக்கும் மஞ்சள் பெண்களின் மார்பகத்தில் எந்த ஒரு நோயையும் அண்ட விடாமல் பாதுகாத்தது.

தாலிக்கயிற்றை மாற்ற பொதுவான நாள்:

அனைவரும் பொதுவாக தாலிக்கயிற்றை மாற்றும் நாள் ஆடி மாதம் 18ம் தேதி ஆடிப்பெருக்கு அன்று தான். ஆடிப்பெருக்கு அன்று எந்தவிதமான நாள் நட்சத்திரம் கிழமைகளையும் பார்க்காமல் தாலிக்கயிற்றை மாற்றிக்கொள்ளலாம். புதியதாக திருமணம் ஆனவர்கள் ஆடி 18 அன்று தாலியை மாற்றிக் கொள்வது மிகவும் நல்லது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three + three =

Most Popular