மகாலட்சுமி அருள் பெற இதை செய்ய வேண்டும்!
மகாலட்சுமியை வீட்டுக்கு வரவழைக்கும் வாஸ்து முறைகள் என்னவென்று பார்க்கலாம் வாங்க..
சுத்தம் சுகம் தரும் என்றெல்லாம் சொல்வார்கள் அல்லவா, அது போன்று எப்போதும் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தூய்மை இல்லாத இடத்தில் மகாலட்சுமி வரமாட்டார். எனவே நீங்கள் செல்வ வளம் பெருக வேண்டும் என்று எண்ணினால் கண்டிப்பாக அனைத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வடக்கு திசை மகாலட்சுமிக்கு உரிய திசை என்பதால் அந்த திசையில் குப்பை சம்பந்தமான பொருட்களை வைக்க வேண்டாம். மேலும் அந்தப் பகுதிகள் காலியாக இருந்தால் உங்களுக்கு பண பிரச்சனை இடையில் ஏற்படாது.
அதுபோலவே பெண்கள் சமையல் அறையில் விழும் பாத்திரங்களை உடனுக்குடன் தேய்த்து கழுவி வைத்து விட வேண்டும். அப்படியே ஒன்றாக போட்டு அசுத்தமாக வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் கட்டாயம் லட்சுமி வாசம் செய்வது தடைப்படும். மாலை நேரத்தில் கட்டாயம் விளக்கு ஏற்றி சுவாமியை துதிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது உங்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிச்சயமாக கிடைக்கும். அதுபோல உங்கள் வீட்டில் துளசி மாடம் இருந்தால் அவசியம் துளசிக்கும் விளக்கை ஏற்றி வழிபடுங்கள். ஏனென்றால் துளசியில் வாசம் செய்வது தான் மகாலட்சுமி.
வீட்டில் நல்லதையே பேசுங்கள், நல்லதையே நினையுங்கள்.இதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் போது அதிகளவு நன்மைகள் உங்கள் வீட்டுக்கு கிடைப்பதோடு உங்களது ஆரோக்கியமும் வளர்ச்சியும் பன்மடங்கு அதிகரிக்கும். இதை மனதில் கொண்டு நீங்கள் செயல்பட்டால் கட்டாயம் லட்சுமி உங்கள் வீட்டில் வாசம் செய்வாள் செல்வ செழிப்பு மேலோங்கும். மாலை நேரத்தில் கட்டாயம் விளக்கு ஏற்றி சுவாமியை துதிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது உங்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிச்சயமாக கிடைக்கும். அதுபோல உங்கள் வீட்டில் துளசி மாடம் இருந்தால் அவசியம் துளசிக்கும் விளக்கை ஏற்றி வழிபடுங்கள். ஏனென்றால் துளசியில் வாசம் செய்வது தான் மகாலட்சுமி.
மகாலட்சுமி துதி:
ஒருமால் உளமகிழ் ஒருத்தி போற்றி
திருமா மகள் நின் செவ்வி போற்றி
ஒருமா மணியா ஒளிர்வாய் போற்றி –
பிரியாது அவனுளம் பேணுவாய் போற்றி
வருமாசு அகற்றுசெம் மணியே போற்றி
திருமகளான மகாலட்சுமியை போற்றும் துதி இது. இந்த துதியை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் 9 முறை கூறி துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவும், மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாகவும் வீட்டில் மகாலட்சுமி படத்திற்கு தீபம் ஏற்றி, இந்த துதியை தேவியை மனதில் நினைத்து 27 முறை கூறி சொல்லி வந்தால் உங்கள் தொழில், வியாபாரங்களில் தங்கு தடையற்ற பண வரவு அதிகரிக்கும். பொன், பொருள் ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வீட்டில் பொருளாதார கஷ்ட நிலை நீங்கி, செல்வ வளம் கூடும்.
வீட்டில் நல்லதையே பேசுங்கள், நல்லதையே நினையுங்கள். இதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் போது அதிகளவு நன்மைகள் உங்கள் வீட்டுக்கு கிடைப்பதோடு உங்களது ஆரோக்கியமும், வளர்ச்சியும் பன்மடங்கு அதிகரிக்கும். இதை மனதில் கொண்டு நீங்கள் செயல்பட்டால் கட்டாயம் லட்சுமி உங்கள் வீட்டில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.
