Wednesday, November 1, 2023
HomeAanmeega Thagavalgalமாவிளக்கின் தாத்பரியம் என்னவென்று தெரியுமா?

மாவிளக்கின் தாத்பரியம் என்னவென்று தெரியுமா?

மாவிளக்கின் தாத்பரியம் என்னவென்று தெரியுமா?

மாவிளக்கு வழிபாடு என்பது தமிழகத்தில் அனுஷ்டிக்கப்படும் அம்மன் வழிபாடு முறைகளில் ப்ரசித்தி யான ஒன்று. பண்டிகை காலத்தில் மாக்கோலம் இடுதல், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற வழக்கங்கள் நாம் பாரம்பரிய வழிபாட்டு மரபில் உள்ளது. ஆனால், தற்பொழுது மாக்கோலம் இடும் பழக்கம் குறைந்து கொண்டு வருவது வருந்தத்தக்க விஷயமாகும்.

இன்றும் அம்மன் கோவில்களில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி தங்கள் கோரிக்கைகளை அம்பாளிடம் முறையிடுகின்றன. அம்பாளும் தன்னை நாடி வரும் பக்தர் களுக்கு சகல செல்வங்களையும் தந்து அருள்பாவிக்கிறாள். நோய்கள் தீர மாரியம்மன்,காளி போன்ற தெய்வங்களுக்கு மாவிளக்கு ஏற்றி நோத்திக் கடன் செய்வர். ஆறு,குளம் உள்ள ஊர்களில் இருக்கும் அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது இரட்டிப்பு பலனைத் தரும்.

இடித்தெடுத்த பச்சரிசி,வெல்லம்,ஏலக்காய் போன்ற கலவையை விளக்கு வடிவில் செய்து தீபம் ஏற்றுவதே மாவிளக்கு ஆகும். உலகிலுள்ள உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்குவது அன்னமே. வெல்லத்தின் குணம் மதுரம்.அதாவது இனிமை.மதுரமான அம்பிகை மதுரமானவள்.ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் மதுரமான அம்பிகையே உறைகிறாள்.

அக்னி பகவான் நெய்யில் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம்.நெய்யை வார்தே ஹோமங்கள் வளர்க்கிறோம். ஹோமங்கள் மூலம் நாம் சமர்ப்பிக்கும் பொருட்களை அக்னியே உரிய தேவதைகளிடம் சேர்க்கிறார். அக்னி பகவானின் சக்தி நெய்யில் அடங்கியுள்ளது. மாவிளக்கில் ஜோதியாக நின்று ஒளிரும் ஜோதி ஸ்வரூபமாக அம்பிகை நம் இல்லங்கள் தோறும் அருள்புரிவதற்காகவே மாவிளக்கு ஏற்றுகிறோம்.

நம்மையே விளக்காகவும், மனதை நெய்யாகவும், அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வ வழிபாடு இது. அம்மன் கோவிலில் மட்டுமல்லாமல் அவரவர் குலதெய்வத்திற்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும். பெரும்பாலான வீடுகளில் ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் மாவிளக்கு போடுவதை சம்பிரதாயமாக வைத்திருக்கிறார்கள்.

அம்மனுக்கு மட்டுமல்லாமல் முக்கோடி கிருத்திகை எனச்சொல்லப்படும் ஆடிக்கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை, தைக்கிருத்திகை நாட்களில் முருகனுக்கும் இப்படி மாவிளக்கு ஏற்றி வழிபடுவது சிலரின் வழக்கம். இப்படி வீடுகளில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் வறுமை நீங்கும். அதேபோன்று புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு வீடுகளில் மாவிளக்கு போடுவதும் உண்டு. கோவில்களில் பக்தர்கள் ஒரு குழுவாக சேர்ந்து ஒரு குறிப்பிட்ட தினத்தில் அம்பிகைக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =

Most Popular