சனிபகவானுக்கு பிடித்தவர்களும் பிடித்தமான இடங்களும் எதுவென்று தெரியுமா?
சனிபகவானின் பார்வை பட்டால் அனைத்தும் பாழாகும் என்று சொல்பவர்களே அதிகம். ஆனால் நல்ல எண்ணம் கொண்டவர்களுக்கும், நல்ல குணம் படைத்தவர்களுக்கும் சனிபகவான் கண்டிப்பாக நன்மையே செய்வார். திடீரென்று பிரச்சனை ஏற்படும், வேலை போகும் பணப் பிரச்சனை ஏற்படும், கஷ்டங்கள் தேடி வரும். ஏன் நமக்கு திடீரென்று பிரச்சனை வருகிறது எனப் பலருக்குச் சந்தேகம் தோன்றும்.
உண்மையில் அது சனிபகவானின் வேலைதான், திடீரென்று எந்த காரியமும் நிகழாது. நாம் செய்த செயல்கள், வரும் காலங்களில் பிரதிபலனாக அமையும். நன்மையாக இருந்தாலும் சரி, தீமையாக இருந்தாலும் சரி நாம் செய்தவை பின் தொடர்ந்து வரும். மெதுவாக நகர்ந்து சொல்லக்கூடியவர் சனிபகவான். ஒருவரின் ராசியில் இரண்டரை ஆண்டுக் காலம் தங்கியிருந்து அவர்களின் செயலுக்கு ஏற்ப பலன்களை அள்ளிக் கொடுக்கக் கூடியவர். சனிபகவானுக்குப் பிடித்த இடங்கள் பல உள்ளன, அவற்றை இங்கே காண்போம்.
சுத்தமில்லா இடங்கள்:
சுத்தம் இல்லாத வீடுகளே அவருக்கு மிகவும் பிடிக்கும். தீய வார்த்தைகளைப் பயன்படுத்துபவர்களைப் பிடிக்கும். எப்போதும் சோகமாக இருக்கும் இடம் பிடிக்கும். உடலில் சுத்தம் இல்லாமல் இருப்பவர்களை அவருக்கு மிகவும் பிடிக்கும், உடனே அவர்களைப் பிடித்துக் கொள்வார்.
ஈரமான துணியை உடுத்தியவர்களைப் பிடிக்கும். ஈரத்தோடு வீட்டிற்குச் செய்பவர்களைப் பிடிக்கும். துவைக்காத துணியை முடித்துக் கொள்பவர்கள் மீது அவருக்கு அதீத பிரியம், உடனே வந்து பிடித்துக் கொள்வார். தலைக்கணத்தோடு செயல்படுபவர்களை அவருக்கு மிகவும் பிடிக்கும், பின்னர் அவர்கள் ஒன்றும் இல்லை என்று சொல்லுமளவிற்குத் தண்டனைகளைக் கொடுப்பார்.
சனிபகவானுக்கு பிடித்தவர்கள்:
ஆசையால் மற்றவர்களைத் துன்பப்படுபவர்களுக்கு மோசமாகத் தண்டனை கொடுப்பார். மற்றவர்களை வாழவிடாமல் தொந்தரவு செய்பவர்களைத் தண்டிப்பது அவருக்கு மிகவும் பிடிக்கும். மற்றவர்களின் மனைவி மீது ஆசை கொள்பவர்களை முதலில் செயலை செய்ய விட்டு பின்னாளில் அவமானப் படுத்தி தண்டனை கொடுப்பார்.
பெரியவர்களுக்கு அடங்காதவர்கள், அவர்களும் பேச்சைக் கேட்காதவர்கள், உடன் பிறந்தவர்களுக்குத் துரோகம் செய்பவர்கள் போன்றோர்களின் சனி வஞ்சம் வைத்துப் பகை தீர்ப்பார். தவறுகளுக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கு அதே வாழ்க்கையைக் கொடுத்து பாடம் புகட்டுவார்.
யோசிக்கும் சனிபகவான்:
உழைப்பின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சனி பகவான். உழைக்கும் தொழிலாளியைச் சனிபகவான் கண்டுகொள்வதில்லை. அதேபோல் மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ வைப்பவர்களைச் சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். சில பக்தர்களை நெருங்குவதற்குச் சனி பகவான் யோசிப்பார். ருத்ராட்சம் அறிந்தவர்களிடம் சனிபகவான் செல்வதில்லை. தனக்குப் பிடித்துவிட்டால் அதீத பலன்களை சனி பகவான் அள்ளிக் கொடுப்பார்.
