Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalவீட்டில் சோழியை வைப்பதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்குமா?

வீட்டில் சோழியை வைப்பதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்குமா?

சோழியை வீட்டில் வைப்பதால் மகாலட்சுமியின் அருளை பெறமுடியுமா?

சோழிகள் பெரும்பாலும் பிரசன்னம் பார்ப்பதற்காகவும் விளையாடுவதற்கும் பயன்படுத்தப் படுகின்றது. சோழியை சுழற்றி போட்டு, நம்முடைய வாழ்க்கையில் என்ன நடக்கும் என்ன நடக்காது என்பதை, சோழி பிரசன்னத்தால் சிலர் மிகச்சரியாக கூறிவிடுவார்கள். இது அந்த காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வந்தது, நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

சோழியில் மொத்தமாக 130 வகை சோழிகள் இருப்பதாக நூல்களில் கூறப்பட்டுள்ளது. எல்லா வகை சோழியையும் நம் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். சோழி நம் வீட்டில் இருந்தாலும் அது நம் வீட்டிற்கு நல்ல பலனைத் தரும். எப்படிப்பட்ட வாஸ்து தோஷமாக இருந்தாலும் அதை நீக்கக்கூடிய சக்தியானது இந்த சோழிக்கு உள்ளது. பொதுவாகவே கடலிலிருந்து எடுக்கப்படும் எந்த பொருட்களாக இருந்தாலும் அதை மகாலட்சுமிக்கு இணையாக கூறுவார்கள்.

உங்களது வீட்டில் அதிர்ஷ்டம் நிறைந்திருக்க இந்த சோழியை வைத்து ஒரு பரிகாரத்தை செய்யலாம். இப்படி செய்யும்பட்சத்தில் மகாலட்சுமி மனநிறைவோடு வீட்டில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம். இப்படி செய்தால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும், அதிர்ஷ்டமும் நிறைந்திருக்கும் என்பது உறுதி. நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.

சோழிகளை நாம் நிறைய முறை பாத்திருப்போம். ஆனால் அதனை பூஜையறையில் வைப்பது லட்சுமி அருளை பெற்றுத்தரும் என்பதை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. சோழிகள் கடலில் இருந்து கிடைக்கும் ஒருவகை சங்கு ஆகும். லட்சுமி தேவியின் பிறப்பிடமும் கடல்தான் என்று நம்பப்படுகிறது. எனவே வீட்டில் சோழிகள் வைத்திருப்பது லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

சங்கு மாலை:

வீட்டில் ஏற்படும் சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்ய இதோ ஓர் எளிய வழிமுறை உங்களது வீட்டில் எப்போதும் சண்டையும் சச்சரவுகளும் வந்து நிம்மதியும் சந்தோஷமும் துளியும் இல்லாமல் இருக்கிறதா?

கவலையை விடுங்க!

அந்த சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்ய இதோ ஓர் எளிய வழிமுறை:சங்கு மாலையை வாசலில் வைத்துப் பாருங்கள். சண்டையும் சச்சரவுகளும் தொலைந்து நிம்மதியும் சந்தோஷமும் நிரந்தரமாக வாசம் செய்து சுபிட்சம் ஏற்படும். சங்கில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள் மும்மூர்த்திகளும் அதில் வாசம் செய்கிறார்கள் அதுமற்றுமின்றி வாசலில் குலதெய்வம் வாசம் செய்கிறாள்..

RELATED ARTICLES

Most Popular