Thursday, October 19, 2023
HomeAanmeega Thagavalgalகுடும்ப பிரச்சனைகள் சரியாக வழிபட வேண்டிய கோயில்!

குடும்ப பிரச்சனைகள் சரியாக வழிபட வேண்டிய கோயில்!

குடும்ப பிரச்சனைகள் சரியாக வழிபட வேண்டிய கோயில்!

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை என்ற ஊரில் உள்ள கோயில் பிரசன்ன விநாயகர் திருக்கோயில். இந்தக் கோயிலில் பிரசன்ன விநாயகர் (மேட்டு விநாயகர்) மூலவராக காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் உற்சவரும் விநாயகப் பெருமானே. வன்னி, வில்வம் மற்றும் அரச மரமே கோயிலில் தல விருட்சமாக திகழ்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஏகாதசி, ஆடிப்பெருக்கு, அனுமன் ஜெயந்தி, திருக்கார்த்திகை, தை, ஆடி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தைப்பூசம், மகா சிவராத்திரி, மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

இந்தக் கோயிலில் பக்தனிடம் காணிக்கை தரும்படி வேண்டி விநாயகர் கோயில் கொண்டுள்ளார். திப்பு சுல்தானால் வழங்கப்பட்ட ஆதி விநாயகர், காசி விஸ்வநாதருக்கு பின்புறம் அரசமரத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். இங்குள்ள விநாயகர் ராஜகம்பீர கோலத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

அரை சக்கர வடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் சக்கரபுரி என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்புமலை என்றும் அழைக்கப்பட்ட இந்த ஊர் நாளடைவில் உடுமலைப்பேட்டை என்றானது. இந்தக் கோயிலில் வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கும். குடும்ப பிரச்சனை தீரும். கல்வியில் சிறந்து விளங்கலாம்.

பிரார்த்தனை நிறைவேறியதும், விநாயகப் பெருமானுக்கு உகந்த கொழுக்கட்டை நைவேத்தியம் படைத்து, பால் அபிஷேகம் செய்து சூரைத்தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இத்தலத்தில் உள்ள விநாயகர் 6 அடி உயரத்தில் ராஜகம்பீர கோலத்துடன் காட்சி தருகிறார். மூஷிக வாகனம் பெரிய வடிவத்தில் இருப்பதும், முன் மண்டபத்தின் மேற்கூரையில் 12 ராசிகளை குறிக்கும்படியான சிற்பம் பொறிக்கப்பட்டிருப்பதும் சிற்பக்கலையின் சிறப்பை உணர்த்துகிறது.

கோயில் ராஜகோபுரத்திற்கு நேரே காசி விஸ்வநாதர், மூலவர் இடத்தில் காட்சி தருகிறார். அவருக்கு இடது புறத்தில் காசி விசாலாட்சி, அருகில் தம்பதி சமேதராக முருகன், முகப்பில் வன்னி மரத்தின் அடியில் பிரம்மன், வடமேற்கில் கண்ணபுர நாயகி உடனாய சவுரிராஜபெருமாள், அவருக்கு இடது புறம் ஆஞ்சநேயர் ஆகியோர் தனி சன்னதி கொண்டுள்ளனர்.

ஒரு காலத்தில் வனமாக இருந்த இந்தப் பகுதியை திப்பு சுல்தான் ஆட்சி செய்து வந்தார். இயற்கையாக பெரிய குளம் ஒன்றுடன், அரைவட்ட மலையினால் சுற்றியபடி இந்தப் பகுதி பாதுகாப்புடன் அமைந்திருந்தது. இதனால், எதிரிகள் யாரும், எளிதில் நெருங்க முடியாததால் திப்பு சுல்தான் தனி ராஜ்ஜியம் கொண்டு ஆட்சி செய்து வந்தார்.

ஒரு நாள், அவரது கனவில் தோன்றிய விநாயகப் பெருமான் உனது நாட்டைக் காக்கும் எனக்கு காணிக்கை கூட செலுத்தாமல் இருக்கிறாயே! அதைக்கேட்ட திப்பு சுல்தான் காணிக்கை கேட்ட விநாயகருக்காக அவரையே காணிக்கையாக வைத்து ஊரின் மேற்கு பகுதியில் குளக்கரையில் கோயில் அமைத்தார். பிற்காலத்தில் ஆட்சி செய்த பலராலும், இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டு ஊரின் மத்தியில பெரிய அளவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 4 =

Most Popular