நம் வீட்டு பூஜை அறையை எப்படி வைத்துக் கொண்டால் நன்மை நடக்கும்?
பூஜை அறையில் எந்த உருவங்களை வைக்க வேண்டும் எந்த உருவங்களை வைக்க கூடாது என சில சாஸ்திர கருத்துக்கள் உள்ளன. அதை முறைப்படி பின்பற்றினால் எப்போதும் நன்மையே நடக்கும். பூஜை அறையில் நாம் வணங்கும் சாமி படங்களை வைத்து தான் நாம் வாழ்க்கையின் தரமும் உயரும்.
எந்தக் கோயிலுக்கு போனாலும் சில பொருட்களை சுவாமி படங்கள், விக்கிரகங்கள், சிலைகளை பூஜை அறையில் வாங்கி வைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. இந்தமாதிரி, வாங்கி வைத்தவுடன் நிறைய கஷ்டங்கள் வரும். ஏன் நமக்கு இப்படி கஷ்டம் வருது. நல்லாதானே இருந்தோம் ஏன் இந்த திடீர் மாற்றம்.
பூஜை அறையில் நிறைய சுவாமி படங்களை கொச கொசன்னு வைத்திருப்பார்கள். பொதுவாக, பூஜை அறையில் விநாயக பெருமான், ஒரு விக்கிரகம், ஒரு மகாலட்சுமி இப்படிதான் இருக்க வேண்டும். நிறைய வீடுகளில் நான்கு லட்சுமி விக்கிரகமும், ஐந்து லட்சுமி ஓவிய படமும், சுத்தி விநாயகர் படமும் ஐந்தாறு விக்கிரகமுமாக இருக்கும். இந்தமாதிரி இருந்தால் ஒரு அலங்காரம் பொருள் மாதிரி காட்சியளிக்கும்
இப்போது வீட்டில் வைக்க கூடாத சில சாமி படங்களை பற்றி பார்க்கலாம்…
சனீஸ்வர பகவானின் படங்களை இல்லங்களிலோ அல்லது பூஜை அறையிலோ வைக்கக் கூடாது. நவ கிரகங்களின் படங்களை பூஜை அறையில் வைத்து எப்போதும் பூஜை செய்யக் கூடாது. நடராஜரின் உருவ படத்தை வீட்டில் வைக்க கூடாது. கடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவணம் கட்டிய முருக பெருமானின் படத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது.
கோபமாக இருக்கக் கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது. தலைக்கு மேல் வேல் இருக்கும் முருகனின் படத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது. ருத்ர தாண்டவமாடும் உருவம், கொடூர பார்வை உள்ள உருவம், தவம் செய்வது போன்ற மற்றும் தலை விரி கோலங்களில் உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது. இது மட்டுமில்லாமல் வீட்டில் உடைந்த சிலைகள், சிதைந்த சாமி சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது. அதேபோல் கோபமாக இருக்கக் கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது.
எந்தெந்த சுவாமி படங்களை வைக்க வேண்டும்?
பூஜை அறையில் மகா மங்கள தெய்வங்களான முழு முதற்கடவுளான விநாயக பெருமான், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ மகாலட்சுமியுடன் கூடிய பகவான் நாராயணன், அம்பிகையுடன் , கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது ராதையுடன் கூடிய கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, பால திரிபுரசுந்தரி மற்றும் லலிதாம்பாள், அஷ்டலட்சுமி ஆகிய அம்பிகை படங்களும், குரு சாய்ராம், ராகவேந்திரர், யோகி ராம் சுரத்குமார் அல்லது நீங்கள் வணங்குகிற குரு இருக்க வேண்டும்.
அதற்கு அடுத்தாற்போல், கல்வி ஞானத்துக்கு அதிபதியான சரஸ்வதி மிகமிக முக்கியமாக இருக்க வேண்டும். குலம் காக்கும் குல தெய்வம் படம் அது உக்கிரமாக இருந்தாலும் நிச்சயமாக இருக்க வேண்டும். ஆதலால், வீட்டின் பூஜை அறையில் சாந்தமாக, லட்சுமி கடாட்சம் உள்ள சாமி படங்களை தான் வைத்து வழிபட வேண்டும். ஏனெனில் அப்போது தான் வீட்டில் வளமும், சந்தோஷமும் குடிக்க கொள்ளும்.
