வீடு வாஸ்துபடி உள்ளதா என்பதை அறிந்து கொள்வது எப்படி?
திசைகாட்டியின் உதவியுடன் திசைகளை அறிந்து கொள்ள வேண்டும். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத்தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும்.
எனவே தான், புதிய வீடு வாங்கினாலும் சரி, வீடு கட்டி குடி போனாலும் சரி, வாசல் கதவு தென்மேற்கு திசையை நோக்கி இருக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். இது நமக்கு கஷ்டம் மற்றும் துரதிஷ்டங்களை தரும். வீட்டின் கதவு இந்த திசையில் இருந்தால் 2 அனுமன் கடவுளின் படம் இருக்கும் டைல்ஸ் கல்லை வாசலுக்கு வெளியில் பதித்து விட வேண்டும்.
கோயில் தான் அனைத்து வாஸ்து சாஸ்திரங்களுக்கும் சக்கரவர்த்தி. அதனால், பூஜையறையை வடகிழக்கு திசையில் அமைத்திட வேண்டும். அனைத்து நன்மைகளும் வந்து சேரும். மேலும், வணங்கும் போது கிழக்கு திசையை நோக்கி வணங்க வேண்டும்.
சமையலறை தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். அப்படி அமைந்தால் வீட்டில் பணம், உடல் நல பிரச்சனைகள் ஏற்படும். ஒருவேளை வடகிழக்கு திசையில் சமையல் அறை இருந்தால் 3 வெண்கல பாத்திரத்தை தலைகீழாக உட்கூரையில் தொங்கவிட வேண்டும். ஆனால், அது அடுப்பை நோக்கி தொங்க கூடாது.
முதன்மை படுக்கையறை தான் உறுதிப்பாடு என்ற கதவுக்கு சாவி. அது தென்மேற்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் தூங்கும் போது தலை, தெற்கு அல்லது மேற்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், கண்டிப்பாக வடகிழக்கு திசையில் தூங்க கூடாது.
குளியலறை மற்றும் கழிப்பறையில் நரகத்தின் சக்தி இருப்பதால், இந்த அறை மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்க கூடாது. அப்படியிருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் பிரச்சனைகள் இருக்கும்.
வீட்டின் மையப்பகுதி வீட்டின் மூக்கைப் போன்றது. ஆதலால் வீடு திறந்த வெளியாகவும், குப்பையாகவும் இருக்க கூடாது. இங்கே சுவர் இருந்தால் வயிற்று பிரச்சனை மற்றும் பணப்பிரச்சனை வரக் கூடும்.
வீட்டில் எந்த திசையிலாவது வளைவுகள் ஏதேனும் இருந்தால் அது வீட்டை பாதிக்கும். முக்கியமாக தென்மேற்கு வடக்கு, வடகிழக்கு, தென் கிழக்கு திசைகளில் இருந்தால், பெரிய பிரச்சனைகள் ஏற்படும். இதன் பின்னணியில் பல ரகசியங்கள் அடங்கியிருக்கிறது.
மிகவும் அடர்த்தியான வண்ணங்களைக் கொண்டு சுவற்றில் வர்ணங்களை பூசக் கூடாது. முக்கியமாக சிவப்பு நிறங்கள். இது நோய் உண்டாக்கும் சக்தியை தூண்டும்.
தண்ணீர் அல்லது நீரூற்றின் படங்களை படுக்கையறையில் மாட்டக்கூடாது. இது உங்களை வெகுவாக பாதிப்புக்குள்ளாக்கும்.
பூஜைப் பொருட்களை அல்லது கடவுள் படங்களை ஏதாவது உத்திரம் அல்லது நிலை அடுக்கின் கீழ் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால்; அது மன அழுத்தத்தைத் தரும்._
வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் கனமான பொருட்களான பீரோவை வைக்கக்கூடாது. அது நம் பண விரயத்துக்கு தடை போடும்!
போன்சாய் மரங்களை வீட்டினுள் வளர்க்காதீர்கள். அது நீங்கள் இருக்கும் துறையில், வளர்ச்சிக்குத் தடைபோடும்._
வீட்டு தரையை வாரம் இரண்டு முறை, உப்புள்ள கடல் தண்ணீரால் துடைத்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகள் ஓடியே போகும்.
வாக்குவாதங்கள் வீட்டை ஆக்கிரமித்து இருக்கிறதா? அப்படியானால் நல்ல பாடல்களை, தினமும் நான்கு அல்லது ஐந்து முறை ஒலிக்க விட்டால், வீட்டில் அமைதி நிலவும்.
