Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalஇதை செய்தால் செல்வம் சேரும்!

இதை செய்தால் செல்வம் சேரும்!

இதை செய்தால் செல்வம் சேரும்!

  1. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
  2. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பலவித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
  3. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பணவரவு ஏற்படும்.
  4. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக் கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.
  5. பூஜை காலை பொழுதில் செய்யக் கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.
  6. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது.பணம் ஓடிவிடும்.
  7. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்யபலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
  8. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்
  9. முழு பாசி பருப்பை வெல்லம்கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்துவர பணத்தடைநீங்கும்.
  10. வெள்ளிக் கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேக த்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
  11. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.
  12. தினசரி குளிக்கும் முன் பசுந் தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
  13. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்
  14. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப் பெட்டியில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.
  15. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள்.
  16. மகாலட்சுமிக்கு இளஞ் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசிய முண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
  17. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
  18. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
  19. ஐப்பசி மாத வளர் பிறையில் மகா லட்சுமியை வழிபட செல்வம் பெருகும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 16 =

Most Popular