Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalகோயில் மணி அடிப்பது போல் கனவு வந்தால் பலன்?

கோயில் மணி அடிப்பது போல் கனவு வந்தால் பலன்?

கோயில் மணி அடிப்பது போல் கனவு வந்தால் பலன்?

ஒவ்வொருவருக்கும் கனவு வரும். எல்லோருக்கும் பொதுவான கனவுகள் நம் அனைவருக்கும் ஒரே விதமாக, ஒரே மாதிரியாக வந்திருக்கலாம். அவற்றிற்கு எல்லாம் ஒரே மாதிரியான அர்த்தம் இருக்கலாம். பல கனவுகளுக்கு நம் முன்னோர்கள் விளக்கம் கூறியிருப்பார்கள். ஆனால், எல்லா கனவுகளுக்கும் அவர்களுக்கு விளக்கம் தெரிந்திருக்குமா என்று கேட்டால் இல்லை. சரி, நாம் காணும் கனவுகளுக்கு எல்ல பலன்கள் உண்டு என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

கடவுள் தொடர்பான கனவுகள் வருவதற்கு முக்கிய காரணம், உங்களையும் தாண்டி மற்றவர்களைப் பற்றி யோசிக்கும் பொழுது தான். அப்படி தோன்றும் கனவுகள் சில சம்பவங்கள் நடக்கப் போகிறது என்று முன் கூட்டியே உங்களுக்கு தெரிவிப்பதற்கு தான் வருகிறது என்று அப்போது நமக்கு தெரியாது. நம் வாழ்க்கையில் நடக்கும் நல்லது மற்றும் கெட்ட சம்பவங்களை உணர்த்தும் வகையில் வரும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு.

 

  1. கனவில் கோயில் வந்தால் இறைவனின் அருளால் நினைத்த காரியங்கள் விரைவில் நடந்து முடியும் என்பது அர்த்தம்.
  2. கோயிலுக்கு செல்ல முடியாமல் கூட்ட த்தில் சிக்கிக் கொள்வது போன்று கனவு வந்தால், எதிர்பாராத பிரச்சனையில் சிக்கிக் கொண்டு கஷ்டப்படுவீர்கள் என்று பொருள்.
  3. கோயிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போன்று கனவு வந்தால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.
  4. கோயிலில் நாம் மட்டுமே தனியாக இருந்து கோயில் நடை சாற்றப்படுவது போன்று கனவு வந்தால் தொழிலில் பிரச்சனை வரப் போகிறது என்று அர்த்தம்.
  5. எந்த கடவுளை கனவில் கண்டாலும், நமது பிரச்சனைகள் எல்லாம் விலகும்.
  6. சிவலிங்கம் கனவில் வந்தால் தினந்தோறும் தியானம் செய்யும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
  7. இறைவனுக்கு மாலை சாற்றுவது போன்று கனவு வந்தால், விரைவில் நல்ல வளர்ச்சியை அடையப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
  8. கோயில் மணி கனவில் வந்தால் நாம் நினைத்த காரியம் நடக்கும்.
  9. கோயில் மணி அடிப்பது போன்று கனவு வந்தால் பொருள் வரவு உண்டாகும்.
  10. கோயில் மணி அறுந்து விழுவது போன்று கனவு வந்தால் செய்யும் காரியங்களில் இடையூறு ஏற்படும்.
  11. கோயில் கோபுரம் கனவில் வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் என்று பொருள். மேலும், பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிவிட்டது என்று அர்த்தம்.
  12. கோயிலில் பிரசாதம் வாங்குவது போன்று கனவு வந்தால் நமக்கு நெருங்கிய சிலரால் மனக்கவலைகள் ஏற்படும்.
  13. கோயில் மணியோசை கேட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.
  14. கோயில் குளம் கனவில் வந்தால் நமது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
  15. மகா விஷ்ணுவை எந்த கோலத்தில் கனவில் கண்டாலும் செல்வ செழிப்பு ஏற்படும்.
  16. மகா விஷ்ணு கருடன் மீது அமர்ந்து வருவது போன்று கனவு வந்தால் நாம் தொடுத்த வழக்குகள் அனைத்தும் சாதகமாக முடியும் என்று பொருள்.
  17. காளி தேவி கனவில் வந்தால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
  18. கடவுள் விக்கிரகம் கனவில் வந்தால் அந்த கடவுளை தரிசனம் செய்வது உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்களது குடும்பத்திற்கும் நன்மை அளிக்கும்.
  19. திருநீறு பூசிக் கொள்வது போன்று கனவு வந்தால் நல்ல ஞானம் பிறக்கும்.
  20. சேதமடைந்த கோயில் கனவில் வந்தால் செய்யும் செயல்களில் தோல்வியும், பொருள் நஷ்டமும் ஏற்படும்.
  21. சாமி கும்பிடுவது போன்று கனவு வந்தால் செய்யும் செயல்களில் இடர்பாடுகள் ஏற்பட்டு அதன் பிறகு தெய்வ அருளால் முடிவில் நன்மையாக முடியும்.
  22. கோயிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க முடியாமல் வீடு திரும்புவது போன்று கனவு வந்தால் தீராத பிரச்சனை ஒன்று உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.
  23. இறைவன் உங்களிடம் பேசுவது போன்று கனவு கண்டால் இந்த ஜென்ம புண்ணியத்தை அடைந்ததாக அர்த்தம்.
  24. அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது போன்று கனவு வந்தால் எந்த தீமையும் அண்டாது என்பது பொருள்.
  25. அம்பாள் கனவில் வந்தால் அவளது பரிபூரண அருள் கிடைக்கும்.
  26. யானை உங்களை ஆசிர்வதிப்பது போன்று கனவு வந்தால் அனைத்து காரியங்களும் வெற்றியாக முடியும்.
  27. யானை துரத்துவது போன்று கனவு வந்தால் விநாயகருக்கு நேர்த்திக் கடன் பாக்கியிருக்கிறது என்று அர்த்தம்.
  28. விநாயகர் கனவில் வந்தால் உங்களது வாழ்க்கையில் இருந்த எல்லா பிரச்சனைகளும் நல்லபடியாக முடியும்.
  29. அய்யனார் கனவில் வந்தால் எல்லா சம்பத்துகளும் கிடைக்கும்.
  30. முருகப் பெருமான் உங்களது கனவில் வந்தால் எல்லா தோஷமும் நீங்கும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 7 =

Most Popular