Tuesday, October 17, 2023
HomeAanmeega Thagavalgalசமயபுரம் மாரியம்மனை துதித்தால் சங்கடங்கள் விலகும்!

சமயபுரம் மாரியம்மனை துதித்தால் சங்கடங்கள் விலகும்!

சமயபுரம் மாரியம்மனை துதித்தால் சங்கடங்கள் விலகும்!

சங்கடங்கள் போக்கும் சமயபுரத்தம்மன்… இல்லம் தேடிவரும் இறை தரிசனம்!
அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு வைத்திருக்கிறார்கள். கருவறையில் அம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள்.

சமயபுரம் மாரியம்மன் மகமாயி தாயே,
அகிலம் போற்றும் கண்ணபுரத்தாளின் அன்னையே,
ஆதி மகமாயி தாயே,
இனாம் சமயபுரத்தில் அமர்ந்தவளே,
ஈதை-யை (துன்பம்,வருத்தம்) வேரறுப்பவளே,
உலகநாயகிக்கு உலகை ஆளும் உரிமை கொடுத்தவளே,
ஊன்றுகோல் போல் எனக்கு இருப்பவளே,
எளிமையான ஆலயத்தில் அமர்ந்தவளே,
ஏழைகளின் ஏக்கங்களை தீர்ப்பவளே,
ஐசுவரியங்களை அள்ளி தருபவளே,
ஒரு பல்லாங்கு தூரத்திலிருந்து மகளின் அழகை ரசிப்பவளே,
ஓட்டு கொட்டகையில் குடிகொண்டவளே,
ஔவியம் த்தை(பொறாமை) அழிப்பவளே,
ஓம் சக்தி தாயே மகமாயி, ஓம்
ஓம் சக்தி தாயே மகமாயி, ஓம்
ஓம் சக்தி தாயே மகமாயி, ஓம்
ஓம் சக்தி தாயே மகமாயி, ஓம்
ஓம் சக்தி தாயே மகமாயி, ஓம்

இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்.

தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்குவது, சமயபுரம் திருக்கோயில். கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கே சமயபுரத்தின் கண்ணனூர் அருகில், பெருவளை வாய்க்காலின் கரையில் மகாசக்தி தலமாக விளங்குகிறது.

சமயபுரம் மாரியம்மன், ஆதியில் ‘வைஷ்ணவி’ என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருந்ததாகக் கூறுவர். இந்த அம்பாள் மிக உக்கிரக் கோலத்தில் திகழ்ந்ததால், பிறகு சமயபுரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டாள். இந்த மாரியம்மன் கோயிலின் வடக்கே செல்லாயி அம்மன் கோயில், போஜீஸ்வரன் கோயில், கிழக்கே உஜ்ஜயினி மாகாளி, முக்தீஸ்வரன் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.

அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக, கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு வைத்திருக்கிறார்கள். கருவறையில் அம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். அவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. சமயபுரம் மாரியம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் ஆகிய திருப்பெயர்களும் உண்டு.

குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள், கரும்புத்தூளி எடுப்பதாக அம்மனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். அம்மை நோய் கண்டவர்கள், இந்தத் தலத்தில் தங்கியிருந்து, அம்பிகையை வழிபட்டுக் குணம் பெறுவதற்கு வசதியாக, இங்கு தனி மண்டபம் ஒன்று உள்ளது. இந்த நோயாளிகளுக்குத் தினமும் அம்மனின் அபிஷேகத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் விரைவில் நோய் குணமடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். சமயபுரத்தம்மனை ஒருமுறை வேண்டினால் போதும், நமது சங்கடங்கள் அனைத்தும் விலகி ஓடும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 4 =

Most Popular