பங்குனி உத்திரம்: விரதமிருந்து முருகனை வழிபட புத்திர தோஷம், கடன் நீங்கும்!
சுபகிருது வருடத்தின் நிறைவு மாதமான பங்குனியில் நிறைந்த திருவிழாவாக பங்குனி உத்திர திருவிழா கொண்டாடப்படுகிறது . பௌர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வருவதால், அந்த நாள் பங்குனி உத்திர திருநாளாக கொண்டாடப்படுகிறது.
மனிதனின் ஆரோக்கியத்திற்கும், அறிவுக்கூர்மை, புத்துணர்ச்சிக்கும் முழு ஆதாரமான ஓசோன் காற்று நிறைந்த நாள் பௌர்ணமி நாளாகும் என்பது அறிவியல் ஆதாரமுள்ள உண்மை ஆகும். சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி குரு பூர்ணிமா, ஆடி திருவோணம் பண்டிகை, கார்த்திகை மாத திருக்கார்த்திகை, மார்கழி ஆருத்ரா, தைப்பூசம், பங்குனி உத்திரம். முருகனின் மனைவியான வள்ளி, அர்ஜுனன், ஐயப்பன் ஆகியோர்கள் பிறந்த தினம் பங்குனி உத்திரம் திருநாளாகும்.
சிவன் பார்வதி, முருகன் தெய்வானை, ரங்கநாதர் ஆண்டாள், சுந்தரேஸ்வரர் மீனாட்சி ஆகியோரின் திரு கல்யாணங்கள் நடைபெற்ற நாளும் உத்திர நாளாகும். மேலும் உத்திர விரதத் திருநாளுமாகும். பங்குனி உத்திர விரதமிருந்து மகாலட்சுமி திருமாலின் மார்பில் இடம் பெற்ற பொன்னாளும், காரைக்கால் அம்மையார் முக்தி அடைந்த தினமும் இந்த நாளாகும். இவ்வளவு சிறப்பு பெற்ற திருநாளில் முருகனுக்கு ஏன் இத்திருநாள் உகந்த நாளாக கொண்டாடப்படுகிறது என்றால் அதற்கும் புராண கால காரணங்கள் உண்டு.
வரம் பெற்ற அசுரர்கள் வரம்பு மீறி அட்டூழியங்கள் அகங்காரங்கள் செய்து அனைத்து உயிர்களையும் துன்புறுத்தி வந்ததனர். தாராகாசுணை காத்து வந்த கிரவுஞ்சன் என்னும் அரக்கன் மலையாக சாபம் பெற்றும், அட்டூழியங்கள் செய்து வந்தான் இவர்களைப் போன்ற அனைத்து அசுரர்களையும் இந்த திருநாளில் முருக பெருமான் போரிட்டு அவர்களை அழித்து வதம் செய்த நாளாகும். எனவே தான் மனித மனங்களிலும் நீங்க இடம் பெற்ற அசுர குணங்களை அழிக்க எம்பெருமான் முருகனை விரதமிருந்து வழிபட்டு வணங்குவோர்களுக்கு மனதில் படிந்துள்ள அனைத்து அசுர குணங்களையும் முருகப்பெருமான அருளால் நீங்க வைக்கும் திருநாளாகும்.
மேலும் இந்நாளில் அதிகாலை நேரத்தில் இருந்து விரதம் இருந்து மதியம் அல்லது மாலையில் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப முடிந்த அளவில் படையலிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம். தெய்வத் திருமணங்கள் நடந்தேறிய இந்த நாளில் திருமண தாமதங்கள் திருமண தடைகள் திருமண வாழ்க்கையில் பிரச்சினை உள்ளவர்கள் விரதம் இருந்து வழிபட திருமணத் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் உறுதியாக தீரும் என்பது ஆன்மீக நம்பிக்கை ஆகும்.
பங்குனி உத்திர நாளில் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபட புதிதிர தோஷம் நீங்கும், கடன், எதிரி தொந்தரவு நீங்கும். செவ்வாய் தோஷம் நீங்கும்.
