Thursday, October 19, 2023
HomeAanmeega Thagavalgalஇன்று 04.02.2021 தேய்பிறை அஷ்டமி..

இன்று 04.02.2021 தேய்பிறை அஷ்டமி..

ஆபத்தில் இருந்து காக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு..
மனிதர்களின் வாழ்க்கையில் கஷ்டங்கள் ஏற்ப டுவது இயல்புதான். அப்படி நமக்கு ஓர் கஷ்டம் ஏற்படும்போது நாம் சோர்ந்து விடவேண்டாம்; துவண்டுவிடவும் வேண்டாம். சிவபெருமானி ன் அம்சமாக தோன்றிய பைரவரை வழிபட்டு, ஆபத்துகளில் இருந்தும் கஷ்டங்களில் இருந்தும் விடுபடலாம்.
பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய் பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மாத பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.
ரௌத்திர வடிவான பைரவ மூர்த்தியின் அவ தாரம் எப்போது நிகழ்ந்தது?
அந்தகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் தேவர் களையெல்லாம் துன்புறுத்தி இன்பம். கண்டா ன். தேவர்களை மட்டுமல்லாமல் முப்போதும் சிவ சிந்தனையில் திளைத்திருக்கும் முனிவர் களையும் விட்டு வைக்கவில்லை.
தேவர்களையும் எப்போதும் தன்னை நினைத் திருக்கும் முனிவர்களையும் துன்புறுத்தும் அந் தகாசுரனை அழிக்க திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், தம்முடைய திருமுகங்களில் ஒன்றான தத்புருஷத்தில் இருந்து மகா பைரவ மூர்த்தி யை தோற்றுவித்தார்.
அவரே அந்தகாசுரனை வதம் செய்து தேவர்க ளையும் முனிவர்களையும் காப்பாற்றினார். மேலும் கர்வம்கொண்ட பிரம்மதேவரின் தலை யைக் கொய்தவரும் பைரவர்தான்.
ஒருமுறை தாருகாவனத்து முனிவர்களின் ஆ ணவத்தை அழிக்க நினைத்த சிவபெருமான், பிட்சாடன மூர்த்தியாக வடிவம் ஏற்றுச் சென் றார். அவரால் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத் தைத் தாங்கிக்கொள்ள முடியாத முனிவர்கள் சிவபெருமானை அழிக்க முயற்சித்தனர்.
கடும் கோபம் கொண்ட சிவபெருமான் காலா க்னியால் தாருகாவனத்தை அழித்தார். இத னால் உலகம் முழுக்க இருள் பரவி சூரியனும் மறைந்து போனது.
அப்போது பைரவ மூர்த்தியே எட்டுத் திசைகளி லும் தோன்றி ஒளியை உண்டாக்கினார். இப்படி எட்டுவிதமாகத் தோன்றிய பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று பூமியில் வணங்கப் படுகிறார்கள்.
ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைர வர், உன்மத்த பைரவர், சம்ஹா ர பைரவர், பீக்ஷன பைரவர், கபால பைரவர் என எட்டு பைரவர் மட்டுமின்றி ஆதிசைவர்கள் 64 வித மான பைரவர்களையும் வணங்கி வந்துள்ளா ர்கள் என புராணங்கள் கூறுகின்றன.
அஷ்டமி வழிபாடு, ஆபத்திலிருந்து காக்கும் என்பார்கள். அஷ்டமி வழிபாடு பைரவருக்கு இஷ்டமானது. பைரவர் சிவனின் 64 வடிவங்க ளில் மகாஞானியான, ரௌத்ர தோற்றம் கொ ண்டவர். எல்லா சிவா லயங்களிலும் பைரவர் இருப்பார். இன்னும் சொல்லப்போனால் பைரவரே கோயிலின் காவல் தெய்வமாகவும் இருப்பவர்.
எல்லா சிவாலயங்களிலும் ஆலயம் திறந்தவு டனும், இரவு கோயில் மூடப்படும்போதும் பைர வ பூஜை செய்வார்கள். சிவன் சொத்துக்களை காவல் காக்கும் அதிகாரியும் இவரே. நாயை வாகனமாகக் கொண்டு அனேகமாக திகம்ப ரராக காட்சி தருபவர்.
கால பைரவர், கோர பைரவர், உக்ர பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், ஜுர பைரவர் என பலவாறு ரூபம் கொண்டவர்.
சனீஸ்வரனின் குருவாகவும், காலத்தை கட்டு ப்படுத்தும் தேவனாகவும் இருப்பவர் பைரவர். பன்னிரண்டு ராசிகள், அஷ்ட திக்குகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்கள் என எல்லாவற்றை யும் கண்காணிக்கும் ஆதி தெய்வம் பைரவர். காசி நகரமே பைரவரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அதனால் தான் அங்கு இறப்ப வருக்கு மோட்சம் கிடைப்ப தாகவும் சொல்லப் படுகிறது.
நீலநிற மேனியரான பைரவர் பாம்பை முப்புரி நூலாகத் தரித்தவர். மண்டை ஓட்டு மாலை அணிந்தவர். சூலம், பாசம், மழு, கபாலம் ஏந்தியவர். திருமுடியில் பிறைநிலவு சூடியவர். பிரம்ம சிரச்சேதர், க்ஷேத்திரபாலகர், வடுகர், ஆபத்துதாரணர், காலமூர்த்தி, கஞ்சுகன், திகம்பரன் என்று பல திருப்பெயர்கள் பைரவ ருக்கு இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
அகங்காரத்தை அழிக்கும் கடவுளாகவும், சுக்கிர தோஷத்தை நீக்கும் இறைவனாகவும் பைரவர் விளங்குகிறார். அஷ்டமி நாளில் இவரை வணங்கினால் எண்ணியது நடக்கும். தடைகள் யாவும் விலகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி யாவும் பைரவரை வணங்கினா ல் நன்மையாக முடியும்.
தாமரை, வில்வம், தும்பை, செவ்வந்தி, சந்தன மாலைகள் பைரவ ருக்கு விருப்பமானவை. பரணி நட்சத்திரத்தில் பைரவர் அவதரித்தார். எனவே அந்த நட்சத்திர க்காரர்கள் இவரை வணங்கினால் நல்லது. பைரவருக்கு நள்ளிர வு பூஜையே உகந்தது எனப்படுகிறது. எனினு ம் உச்சி காலம் எனப் படும் நண்பகல் பூஜை சிறப்பானது.
அஷ்டமி நாளில் உச்சி வேளையில் பைரவரு க்கு சிவப்பு ஆடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, மாலை சூட்டி, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நல்ல வாழ்வு கிட்டும்.
எலுமிச்சம்பழத்தை பைரவ மூர்த்தியின் காலி ல் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போ னால் தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்தி ருக்கு ம் பீடைகள் ஒழியும். கெட்ட அதிர்வுகள் விலகும் என்று சொல்லப்படுகிறது.
மன அமைதியே இல்லாதவர்களுக்கு பைரவ ரே நல்ல துணை. செல்வவளம் பெருக சொர் ணாகர்ஷன பைரவரை வணங்கலாம். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தா ல் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கை யில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோ ர்கள் வாக்கு.
தேய்பிறை அஷ்டமி நாள் இன்று. துக்கங்கள் யாவையும் மாற்றி நிம்மதியை அருளும் பைரவ வழிபாட்டை இன்று மேற்கொள்ளலாம்.
அஷ்டமி திதிகளில் சுப காரியங்கள் (திரும ணம், கிரஹப் பிரவேசம், சொத்து வாங்குதல் உள்ளிட்டவை) மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த திதிகள் தெய்வீக காரியங்களு க்கு (தீட்சை பெறுவது மந்திரங்கள் ஜெபிப்ப்து, ஹோமங்கள் உள்ளிட்டவை) உகந்தவை.
தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் அவதார ம் எடுத்து மகாதேவர் என்கிற சிவபெருமான் பூமிக்கு வந்தார். இவரை வணங்கி தனக்கு அருளும், ஆசியும் வேண்டும் என்று, ஆயுளை யும் அழிவில்லா பொருளையும், ஆன்ம சாந்தி யையும் தரும் சனி தேவர் பணிந்தார்.
ஸ்ரீபைரவருக்குப் பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழி பட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல் லைகள் நீங்கும்.
இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், தொழிலில் வளர்ச்சி காணவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.
தேய்பிறை அஷ்டமியில் பைரவரை ஏன் வண ங்க வேண்டும் என்றால் அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்களை வழங்கி வருகின் றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்க ளின் நம்பிக்கை.
நாமும் அதுபோல் தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசி யும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும்.
தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு கால த்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழி பட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். மேலும், நமது ஏழு ஜென்மங்கள் மற்றும் ஏழு தலை முறை முன்னோர்களின் பாவ வினைகள் தீரத் துவங்கும். அப்படி பாவ வினைகள் தீரத்துவங் கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.
◆வர வேண்டிய பணம் வந்துவிடும்.
◆தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக் கும் சூழ்நிலை உருவாகிவிடும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
◆வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும், வலியும், வேதனையும் பெருமளவு குறையும்.
◆சனியின் தாக்கம் (ஏழரைச்சனி அஷ்டமச் சனி, கண்டச்சனி) தீரும்.
◆வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு வரு மானஅளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்.
◆பணம்சார்ந்த பிரச்சனைகளும் தீர்ந்து விடும்
பைரவரை வழிபட்டு எல்லா வளங்களும் பெறுக..
ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய….
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ…
ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + eight =

Most Popular