ஊத்துமலை_சேலம்…
சேலம்_மாவட்டம்_சீலநாயக்கன்பட்டி #ஊதிமலையில்….
#அகத்தியர்_பூஜித்த_ஸ்ரீ_சக்ரம்…
சேலம் ஊத்துமலை ; ஊத்துமலை அகத்தியர் தமிழிற்கு #இலக்கணம் எழுதிய இடம்..
இந்த மலையில் இரண்டு இடங்களில் குகை போன்ற அமைப்புகள் உள்ளது.
காலத்தால் இவை சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இவைகள் #சித்தர்_குகை , #கஞ்சா_சாமியார்_குகை ,
#அகத்தியர்_குகை எனும் பெயர்களால் உள்ளூர் மக்களால் அழைக்கப்படுகிறது.
இங்கே கல்திட்டை போன்ற அமைப்பும் காணப்படுகின்றன. அவைகள் ஆய்வுக்கு உரியதாக உள்ளது.
ஸ்தல மலை எனும் ஊத்துமலையில் சித்தர் அகத்தியர் பெருமான் மற்றும் அவரின் மனைவி லோபமுத்திரா , போகர், போகரின் சீடர் புலிப்பாணி, ரேணுகர், கபிலர் என சித்தர்களின் தவம் செய்த இடமாககருதப்படுகிறது.
ஸ்ரீவித்யா- ஸ்ரீ சக்கரம் உபாசனை பெற்ற பின்பு தம் கரங்களால் ஸ்ரீசக்கரம் அமைத்து பூசித்த அருமையான ஆலயம்..
ஒரே பாறை மீது புடைப்புச் சிற்பங்களாக மிக அழகாக செதுக்கப்பட்டுள்ள ஸ்ரீசக்ரம், சிவலிங்கம், நந்தி, ஆசிரமம், அகத்தியர், ரிசி பத்தினி, மற்றும் பல வகையான இயற்கைக் காட்சிகள். இடம் ஊத்துமலை, சேலம் மாவட்டம்.
#கபிலர்_தியான_குகை …
அகத்தியர், கபிலர் உள்ளிட்ட பல சித்தர்கள் தியானம் செய்த பாறை நீர் ஊற்றுடன் கூடிய அமைதியான
தியான குகை, கபிலர் தியான குகை. இடம் ஊத்துமலை, சேலம்..
ஊத்துமலை அகத்தியர் தமிழிற்கு இலக்கணம் எழுதிய இடமாக நம்பப்படுகிறது…
சேலத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் ஊத்துமலை உள்ளது..
தியான குகையில் அமாவாசை – பவுர்ணமி திதிகளில் அருமையான அனுபவங்களை பெறலாம்.. வந்து பாருங்கள்..
ஊத்துமலை சுமார் 2000 வருடங்களுக்கு மேல் உள்ளதாக நம்பபடுகிறது..
அகஸ்தியர் இங்கு வந்து மலையை குடைந்து ஸ்ரீ சக்ரம் உருவாக்கியிருக்கிறார். அதோடு அவருடைய #பத்னி_லோபாமுத்ரா_தேவியுடன் தான் இருப்பது போலவும் தண்ட கமண்டலுடன் வடிவமைத்திருக்கிறார்.
அகஸ்தியர் கபிலமுனி சுகபரம்ம ரிஷியும் வந்திருப்பதாக கல்வெட்டுகளில் உள்ளது. மேலும் சுகர் பிரம்ம ரிஷி இங்கு வந்த பிறகு சேலம் #சுகவனேஸ்வரரிடம் வந்திருந்து தன் சாபத்தை போக்கிக்கொண்டதாக சேலம் #சுகவனேஸ்வரர்_புராணம் கூறுகிறது.
இவர்கள் தவிர சப்த ரிஷிகள் மற்றும் கரடி சித்தர் போகர் போன்ற மஹரிஷிகளும் இங்கு வந்து தவம் செய்து உள்ளார்கள் என்று புராண கதையாக இங்கு சொல்கிறார்கள் அதற்கு சான்றாக சப்த ஏழு வித ஊற்றுகளும் இந்த ஊத்துமலையில் உள்ளது அதனால்தான் இந்த மலைக்கு ஊத்து-மலை ஊத்துமலை என்று பெயர் வழங்கலாயிற்று.
இந்த #ஏழு_ஊற்றுகளிலும் உள்ள #தண்ணீர்_நிறைந்த_மருத்துவ_குணங்கள்_கொண்ட_தண்ணீர் ஆகும். இந்த
#ஸ்ரீ_சக்ர_கோவிலுக்கு_மேல்_சென்றால் மலையின் உச்சி வரும் அங்கு
#பால_சுப்ரமணியர்_அருள்பாலிக்கிறார்.
