கனவில் காக்கை கண்டால் என்ன நடக்கும்?

204

 

தூக்கம் என்பதும் மனிதர்களுக்கான ஒரு தியானம் தான் என்பது ஞானிகள் மற்றும் சித்தர்களின் கருத்தாகும். அந்த தூக்கத்தில் கனவுகள் ஏதும் ஏற்படாத தூக்கமே சிறந்தது என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் பலருக்கும் தூங்குகின்ற போது தினந்தோறும் அல்லது வாரத்தின், மாதத்தின் குறிப்பிட்ட சில தினங்களில் கனவுகள் ஏற்படுவதை அனுபவத்தில் கண்டிருக்கலாம். அப்படி தூக்கத்தில் பல விதமான பொருட்களை காண்பவர்களுக்கு அதற்கேற்ற பலன்கள் பற்றி சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கின்றன. அத்தகைய கனவில் காக பறவையை கண்டால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நமது மத புராணங்கள் காக்கை பறவை என்பது நவக்கிரகங்களில் நீதி பகவான் மற்றும் ஆயுள் காரகனாக இருக்கும் சனீஸ்வர பகவானின் வாகனமாக கூறப்பட்டிருக்கிறது. மேலும் மறைந்த நமது முன்னோர்கள் காகங்களின் வடிவம் எடுத்து தினந்தோறும் நாம் காகங்களுக்கு வைக்கின்ற உணவை சாப்பிட்டு நம்மை ஆசீர்வதிப்பாராக ஒரு ஐதீகம் உண்டு.

சிலருக்கு கனவில் இத்தகைய காகம் பறவை கண்டால் ஒரு விதமான பயமும், பல சந்தேகங்களும் மனதில் ஏற்படுகின்றன. சாஸ்திர அறிஞர்கள் கூறும் போது நாம் உறங்கும் போது ஏற்படுகின்ற கனவில் காகப் பறவைகளை கூட்டமாக அமர்ந்திருப்பது போன்றோ அல்லது கூட்டமாக நமது தலைக்கு மேலே பறப்பது போன்றோ கனவு கண்டால் நமக்கு இன்னும் சில காலங்களில் மிகுதியான அதிர்ஷ்டம் மற்றும் யோகம் ஏற்படுவதைக் குறைக்க வல்ல ஒரு கனவு அறிகுறி தான் அது கூறப்படுகிறது. அதே நேரம் ஒற்றை காக்கையையோ, ஒற்றைக் காக்கை பறவையை நம்மை நோக்கி பறந்து வருவது போன்றோ அல்லது அந்த ஒற்றை காகம் நம்மை அலைகள் கொத்துவது போன்று கனவில் கண்டால் கனவு கண்ட நபருக்கு சனிபகவானின் சனி கிரக பாதிப்புகள் இன்னும் முழுமையாக தீரவில்லை என்பதை குறிக்கும் ஒரு அறிகுறி என கூறுகின்றனர். மேலும் இத்தகைய ஒற்றை காக்கை கனவில் வருவது அந்த நபருக்கு கண் திருஷ்டிகள் அதிகம் இருப்பதை கூறுகின்ற ஒரு அடையாளமாகவும், எதிரிகள் அவருக்கு செய்திருக்கின்ற செய்வினை மாந்திரீகம் ஏவல், குடும்பத்தில் ஏற்படவிருக்கின்ற பிரச்சனைகள் பற்றிய சூட்சம எச்சரிக்கை எனவும் கூறுகின்றனர். பொதுவாக காகங்கள் ஒரு தொல்லை தரும் பறவைகளாக கருதப்பட்டாலும் மாந்திரிக ஏவல்கள், தீய சக்திகள் போன்றவற்றை ஒழிக்கும் ஆற்றல் காக பறவைகளுக்கு உண்.டு எனவே உங்கள் தூக்கத்தில் ஏற்படும் கனவுகள் ஒற்றை காகத்தை கண்டால் அதற்கு மறுநாள் காலையில் குளித்து முடித்ததும் காகங்களுக்கு உணவிடுவது ஒரு சிறந்த பரிகாரமாகும். மேலும் தினமும் காலங்களுக்கு உணவிட்டு வருபவர்களுக்கு செய்வினை கண்திருஷ்டி மற்றும் துஷ்ட சக்திகள் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.