Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalநாம் காணும் கனவுகளுக்கு பலன்கள் உண்டா? – பகுதி 2!

நாம் காணும் கனவுகளுக்கு பலன்கள் உண்டா? – பகுதி 2!

நாம் காணும் கனவுகளுக்கு பலன்கள் உண்டா? – பகுதி 2!

கனவில் உயிரினங்கள் வந்தால் என்ன பலன்:

•யானை வந்தால் அரசாங்க உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும். யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும்.

•யானை ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும், மேலும் நல்ல காலம் பிறந்திருப்பதை உணர்த்துவதாகும்.

•குதிரை, கழுதையை கனவில் கண்டால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.பசு மாடு வாங்குவது போல் கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும்.

•பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும். மயிலினை கனவில் கண்டால் தம்பதியினரிடையே பரஸ்பரம் அதிகரிக்கும்.

•பாம்புகள் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால், முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும்.

திருமணம் பற்றிய கனவுகள் வருவதால் என்ன பலன்:

•காதலை வெளிப்படுத்துவது போல கனவு கண்டால் செய்யும் காரியம் வெற்றியாக அமையலாம்திருமண கோலத்துடன் இருப்பது போல் கனவு கண்டால் சமுதாயத்தில் நன்மதிப்பு கிடைக்கும்.
•அழகு இல்லாத பெண்ணை, மணமாகாத ஆடவன் கனவில் கண்டால், மிகவும் அழகான பெண் மனைவியாவாள்.
•கனவில் கிணற்றைக் காண்பது நல்லதாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும்.மங்கள பொருளுடன் பெண் வீட்டிற்குள் நுழைவது போல் கண்டால், நம் வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறாள் அல்லது திருமண முயற்சி கைக்கூடும்.

இறந்தவர்களைக் கனவில் கண்டால் என்ன பலன்:

•இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும்.
•பதவி உயர்வு கிடைக்கும். இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
•நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
•இறந்த தாய்-தந்தையர் கனவில் தோன்றினால், வர இருக்கும் ஆபத்தினை எச்சரிக்கை வந்துள்ளனர் என்று பொருள். இது ஒரு விதத்தில் நன்மையே.
•மனைவி இறந்துவிட்டாற்போல் கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க இருப்பதைக் குறிப்பிடும்.
•குழந்தைகள் இறப்பதுபோல் கனவு காண்பது அவருக்கு வர இருக்கும் பேராபத்தைக் குறிக்கும்.
•தற்கொலை செய்து கொள்வது போல் கனவு வந்தால் ஆபத்து நீங்கும்.

எந்த நேரத்தில் காணும் கனவு பலிக்கும்?

நேரத்தை பொறுத்தே சில கனவின் பலன்கள் அமையும். இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும், இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு எட்டு மாதத்திலும், மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு நான்கு மாதங்களிலும் விடியற் காலையில் அதாவது நான்காவது ஜாமத்தில் காணும் கனவு பத்து நாட்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் பலிக்கும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்படுகிறது.

அதாவது நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும்.இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கூறுவார்கள். கனவு சாஸ்திரமும் அப்படித் தான் கூறுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =

Most Popular