கிருத்திகை அமாவாசை

164

இளவேனில் எனும் வசந்த காலத்தைக் குறிப்பதுதான் வைகாசி மாதம். உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம் ஆகும். வைகாசி மாதத்தில் வரும் கிருத்திகை அமாவாசை மிகவும் விசேஷமான நாள் ஆகும். அதுவும் இன்று வெள்ளிக்கிழமையுடன் சேர்ந்து கிருத்திகை வருவது மிகவும் அபு ர்வமான ஒன்றாகும். அதுமட்டுமில்லாமல் முன்னோர்களின் ஆசி பரிபு ரணமாகக் கிடைக்கும் நன்னாளான அமாவாசையும் சேர்ந்து வருவது மிகவும் அபூர்வமாகும்.

அமாவாசை சிறப்புகள் :

பொதுவாக அமாவாசை என்பது பித்ருக்களுக்கான தினம் ஆகும். தந்தைக்கு உரிய கோள் ஆகக் கருதப்படும் சூரியனும், தாயாரைக் குறிக்கும் கோள் ஆன சந்திரனும் ஒரே ராசியில் ஒரே நட்சத்திரப் பாகையில் இணையும் நாளே அமாவாசை. அதனால்தான் அன்றைய தினம் நம் வீட்டில் முன்னோர்கள் நினைவாக இலைபோட்டு படையல் வைக்கிறோம். எள்ளும், தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்கிறார்கள்.

அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உள்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், காலச்சென்ற நம்முடைய முன்னோர்களும் பு லோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது சாஸ்திரங்கள் கூறும் உண்மைகள் ஆகும்.

சில சடங்குகளுக்கும் சில வழிமுறைகளுக்கும் அமாவாசை அன்று சிறந்தது. அதில் ஒன்று தான் பித்ரு தர்ப்பணம். முன்னோர்களில் மூன்று தலைமுறையினரையாவது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தால் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தொடர்ந்து இந்துக்களால் நம்பப்பட்டு வரும் ஐதீகம்.

நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். இன்று கார்த்திகை அமாவாசை திதி வழிபாடு செய்து கடவுளின் அருளையும், முன்னோர்களின் ஆசிர்வாதமும் பரிபு ர்ணமாக பெற்றுக்கொள்ளுங்கள்.

கிருத்திகை சிறப்புகள் :

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரம் அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. கிருத்திகை அன்று ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம்.

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள்.

மேலும் கிருத்திகை நட்சத்திரம் வெள்ளிக்கிழமையுடன் சேர்ந்து வந்துள்ளதால், முருகபெருமானுக்குரிய கந்த சஷ்டி கவசம் படியுங்கள். அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யுங்கள். அதோடு வெள்ளிக்கிழமையில் கிருத்திகை நட்சத்திரம் வந்துள்ளதால், ஞான குருவான கந்தனுக்குப் பிடித்த செவ்வரளி மாலையை சாற்றி வழிபடுங்கள். எழுமிச்சைப் பழ சாதம் செய்து ஏழைகளுக்கு வழங்குங்கள். இவ்வாறு வழிபாடு செய்து, ஞானகுருவான முருகனின் அருளையும், முன்னோர்களின் பரிபூரண ஆசீர்வாத்தையும் பெற்று வாழ்வில் வளம் பெறுங்கள்.