காசு கொடுக்காததால் பாட்டிக்கு பயந்த செல்லும் பெருமாள்!
திருப்பதி அருகில் மங்காபுரம் என்ற கிராமத்தில் மூதாட்டி இருந்தாள். கங்கம்மா என்ற அந்த மூதாட்டி சுண்டல் விற்கும் தொழில் செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து வாழ்க்கை நடத்தினார். கணவரும் இறந்துவிட்டார், பிள்ளைகளும் இல்லை ஏண்டா பிறந்தோம் என்று அடிக்கடி புலம்பி தவித்தாள்.
அந்த காலத்தில் திருமலைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக காட்டுப் பாதை வழியாகத்தான் செல்வார்கள். ஒரு நாள் அதிகாலைப் பொழுதில் பக்தர்கள் கூட்டமாக மலையேறிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களிடம் நீங்கள் எதற்காக மலைக்கு செல்கிறீர்கள் என்று கங்கம்மா பாட்டி கேட்டாள்.
என்ன பாட்டி இப்படி கேக்குறீங்க? மலையில் பெருமாள் இருப்பது தெரியாதா? என்று கேட்டனர். ஒரு பக்தர் மட்டும் பாட்டி, மலையில் பெருமாள் இருக்கிறார். அவரிடம் சென்று பிரார்த்தனை செய்தால், இப்படியொரு நிலை இனிமேல் இருக்காது. கோவிந்தா கோவிந்தா என்று தான் பெருமாளை அழைக்க வேண்டும்.
அப்படி சொல்வதன் மூலமாக செய்த பாவங்கள் யாவும் நீங்கும் என்று சொன்னார். இதைக் கேட்ட பாட்டியோ, அப்படியே மலை ஏறிச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தாள். எனக்கு இது போன்ற பிறவி வேண்டாம் என்று வேண்டினாள்.
இதையடுத்து அங்கேயே தங்கிவிட்டாள். அப்போது ஒரு வயதான ஒருவர் வந்து பாட்டி சுண்டல் கொண்டு என்று கேட்டார். அதற்கு பாட்டியும் சுண்டல் கொடுக்க, சாப்பிட்டு விட்டு வயதானவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பாட்டி, ஐயா சுண்டல் சாப்பிட்டதற்கு காசு கொடுங்க என்று கேட்டாள். அதற்கு வயதானவர், பாட்டி நான் ஒரு கடன்காரன். கல்யாணத்திற்கு கடன் வாங்கி, கடனுக்கான வட்டியைத் தான் கட்டி வருகிறேன். சுண்டலுக்கு காசு கொடுக்க கூட காசு இல்லை. நாளையும் இங்கே வருவேன். அப்போது காசு தருகிறேன் என்றார்.
சரி, என்று கூறி விட்டு விட்டாள் பாட்டி. ஆனால், வந்ததோ ஏழுமலையான் என்பதை கூட பாட்டியால் அறிந்து கொள்ள முடியவில்லை. அடுத்தநாள் வயதானவர் வரவேயில்லை. அவரை எதிர்பார்த்து காத்திருந்த பாட்டிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு கட்டத்தில் பாட்டி இறந்தும் விட்டாள். பாட்டிக்கு காசு தருவதாக சொல்லி காசு கொடுக்காமல் சென்றதால், தெற்கு மாட வீதியிலுள்ள அசுவ சாலையில் விழாக்காலங்களில் அவர் பவனியாக வரும் போது பாட்டிக்கு பயந்து கொண்டு மேளதாளம் இல்லாமல் ஒளிந்து கொண்டு செல்கிறார் என்று சொல்லப்படுகிறது.
