Saturday, October 28, 2023
HomeAanmeega Thagavalgalசெவ்வாய் தோஷம் நீங்க கும்ப விவாகம் செய்ய வேண்டும்!

செவ்வாய் தோஷம் நீங்க கும்ப விவாகம் செய்ய வேண்டும்!

செவ்வாய் தோஷம் நீங்க கும்ப விவாகம் செய்ய வேண்டும்!

செவ்வாய் கிரகத்தின் வேறு பெயர்கள்:

நவக்கிரகங்களில் மூன்றாவது கிரகம் செவ்வாய் ஆகும் . இந்த கிரகத்திற்கு அங்காரகன், சக்திதரன், குமரன், மகாகாயன், மங்கலன், தனப்ரதன் உள்பட பல பெயர்கள் உள்ளன. அங்காரகம் என்றால் நெருப்பு என்று பொருள். இந்த கிரகத்தின் அதிதேவதை சுப்பிரமணியர். உகந்த நாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய் ஏழு கதிர்களைக் கொண்டதாக உள்ளது. செவ்வாய்க்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை உஷ்ணம், அக்ருமுகம், வியாலம், துதிரானம், நிஸ்தரிசனம் ஆகியவையாகும்.

மங்கலம் தரும் செவ்வாய்:

முக்கோண மண்டபத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய், ரத்தத்திற்குக்காரகன். உயர்ந்தசக்தியை கையில்வைத்துக் கொண்டு மங்கலத்தைச் செய்பவன். செவ்வாய் கிரகம் ஒரு ராசியில் 1½ மாத காலம் சஞ்சாரம் செய்கிறது. செவ்வாய் கிரகத்தின் உலோகம் தாமிரமாகும். தேசத்தைப் பரிபாலனம் செய்வோருக்கும், தன்மானத்துடன் வாழ்வோருக்கும், நால்வகைப் படைகளை முன்னின்று இயக்குவோருக்கும் மூல பலமாக விளங்குவது இந்த செவ்வாய்க்கிரகம்தான்.

செவ்வாய் தோஷ ஜாதகம் என்றால் என்ன?

ஆண், பெண் ஜாதகங்களில் செவ்வாய், ஜென்ம லக்னத்தில் இருந்தாலோ, சந்திர லக்னத்தில் இருந்தாலோ, சுக்ரன் இருக்கும் இடத்தில் இருந்தாலோ, இரண்டாம் இடத்தில் இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோ‌ஷம் என்று பொருள். ஆலயத்திற்குச் சென்று நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய் கிரகத்தை வழிபடும் போது, அதற்காக காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும்.

செவ்வாய் காயத்ரி மந்திரம்:

‘ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பெளமஹ் ப்ரசோதயாத்’

இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து, அங்காரகனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் மங்கலம் உண்டாகும். உள்ளம் தூய்மை பெறும். உடல் உறுதியாகும். மனம் திடமாகும். வீரம் அதிகரிக்கும். தொண்டு மனப்பான்மை வந்து சேரும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும். பகை விலகும்.

செவ்வாய் தோஷம் பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோவிலில் பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம். செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்தால் செவ்வாய் தோஷங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறையும். விரதத்தின் போது, செவ்வாய் தோஷக்காரர்கள் துவரம் பருப்பை மட்டுமே உண்ணலாம்.

கும்ப விவாகம் என்றால் என்ன:

கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்.

செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும். செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தினக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணியலாம். இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 5 =

Most Popular