குசேல தினம் ஸ்பெஷல்

99

ஒருநாள் முனிவரின் மனைவி, இரண்டு குழந்தைகளையும் அழைத்து, சமையலுக்கு விறகு பொறுக்கிவர அனுப்பினாள். போகும்போது, இருவரும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் எனச் சொல்லி, வெல்லம் கலந்த அவலைக் ஒரே பொட்டலமாகக் கொடுத்தாள். விறகு வெட்டிக்கொண்டிருந்த நேரத்தில், பசியெடுக்கவே, குசேலர் பொட்டலத்தைப் பிரித்தார். சாப்பிட்டார்.
கிருஷ்ணரை அழைத்த அவருக்குரிய பங்கை கொடுத்திருக்க வேண்டாமோ ! ஆசையோ, பசியோ முழுமையாக சாப்பிட்டு விட்டான். அன்று கிருஷ்ணர் அதற்காக ஏதும் சொல்லவில்லை. பகவான், உடனே எதையும் தட்டிக் கேட்க மாட்டார். இப்போது அவருடைய நேரம் ! அன்று தர வேண்டிய தனக்குரிய பங்கை எத்தனையோ வருடங்கள் கழித்து, இன்று கட்டாயமாக பெற்றுக் கொண்டார். உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும், அடுத்தவன் பொருளை வலுக்கட்டாயமாக பறித்தால், அவன் இறந்தாலும் சரி… அவனுடைய வம்சத்தில் வருபவனாவது நிச்சயமாக அதற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும். ஒரு வழியாக குசேலர் அவந்தி வந்து சேர்ந்தார். அங்கு வைத்து ஏதும் தரமறுத்த அந்தக் கள்வன் கண்ணன், குசேலர் ஊருக்குள் நுழைந்ததும், அடையாளமே தெரியாமல் உருமாறி விட்டார். உடலெங்கும் நகைகள் பளபளத்தன. கிழிந்த வஸ்திரம் பட்டு வஸ்திரமானது. பகவானின் இந்த விளையாட்டில் அவருக்கு விருப்பமில்லை. இருந்தாலும், கிருஷ்ண நாமத்தை விடாமல் சொன்னபடி, வீட்டை தேடியலைந்தார். சுசீலை அவரை ஒரு மாடத்தில் நின்று அழைத்தாள். நம் வீடு இதுதான் ! இங்கே வாருங்கள் என்றாள். குழந்தைகள் தங்கம், வைரம், மாணிக்கச் சிறுதேர் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். இவ்வளவு வறுமையிலும், அவர் வீட்டில் கூலியை என்றாவது ஒருநாள் வாங்கிக் கொள்ளலாம் என்று வேலை செய்து வந்த வேலைக்காரியின் கழுத்திலேயே நூறு பவுனுக்கு குறையாமல் தொங்கியது. இப்படி அதிசயங்களை நுகர்ந்தபடியே, வீட்டுக்குள் நுழைந்த சுதாமர், நடந்ததை அறிந்தார்.
கிருஷ்ணா ! ஏ மாயவனே ! என் ஆத்ம நண்பனே ! அடேய் ! இந்த அழியும் செல்வத்தை நாடியா உன்னை நாடி வந்தேன். ஏ கயவனே ! என்னை ஏமாற்றி விட்டாயடா ! நான் உன்னிடம் செல்வத்தை கேட்டேனா ! என் பக்திக்கு மரியாதை அவ்வளவு தானா ! தாமோதரா ! புண்டரீகாக்ஷõ ! என் இதயத்தில் உறைபவனே ! பக்தன் என்றால் யார் தெரியுமா உனக்கு ? யார் ஒருவன் தன் கஷ்டத்தை கடவுளிடம் கூட சொல்லமாட்டோனோ, அதை அவன் கொடுத்த வரப்பிரசாதமாக எண்ணி, அதையும் அனுபவித்து ரசித்து வாழ்கிறானோ அவனே பக்தன். உன்னிடம் நான் தினமும் என்ன கேட்கிறேன் ! அழியா உலகான வைகுண்டத்தில் ஒரு இடம்….. உன் கமல பாத தரிசனத்தை தினமும் காணும் பாக்கியம்…. இந்த நிரந்தரச் செல்வத்தை நாடியல்லவா வந்தேன் ! பரந்தாமா ! இந்த செல்வம் எனக்கு வேண்டாமடா ! என்னை உன்னோடு சேர்த்துக் கொள், எனக் கதறினார். நண்பனின் கதறல் கண்டு கண்மணி கிருஷ்ணர் பொறுப்பாரா ! வந்து விட்டார் சங்கு சக்ர காதாதாரியாய் குசேலர் அவருடன் ஐக்கியமானார்.
பகவான் கிருஷ்ணரின் இந்த வரலாற்றை படித்தவர்கள் இதிலுள்ள கருத்துக்களை பின்பற்றி நடந்தால், இப்பிறவியில் எல்லா இன்பமும், இனி பிறப்பற்ற நிலையும் பெறுவது உறுதி.
ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !!!