Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalகடன் தொல்லையில் இருந்து விடுபட மைத்ரேய சுபமுகூர்த்தம்

கடன் தொல்லையில் இருந்து விடுபட மைத்ரேய சுபமுகூர்த்தம்

எளிதில் கடன் தொல்லையில் இருந்து விடுபட உதவும் மைத்ரேய சுபமுகூர்த்தம்

கடன் தொல்லையில் இருந்து விடுபட, உங்களுடைய ராசிக்கு ஏற்ற மைத்ரேய முகூர்த்த நேரம் எது என்று இப்பதிவில் பார்ப்போம்…

சித்தர்களால் நமக்கு சொல்லி வைக்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான நேரம் மைத்ரேய சுபமுகூர்த்த நேரம். பொதுவாகவே நம்மில் நிறைய பேருக்கு இந்த மைத்ரேய முகூர்த்தம் பற்றி தெரிந்திருக்கும். இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக ஒரு சிறிய குறிப்பு.

ஒருவருக்கு நிறைய பண பிரச்சனை உள்ளது. நிறைய இடத்தில் கைநீட்டி கடனை வாங்கி விட்டதால், அவரால் கடன் தொகையை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை. இதில் இருந்து எப்படி தப்பிப்பது. நீங்கள் யாரிடம் கடன் வாங்கி இருக்கீங்களா, அந்த நபருக்கு குறிப்பிட்ட இந்த மைத்ரேய முகூர்த்தத்தில் கடன் தொகையில் இருந்து ஒரு சிறிய தொகையை திருப்பிக் கொடுத்து விட்டால், நீங்கள் வாங்கிய கடன் சீக்கிரத்தில் படிப்படியாக குறைந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இது சித்தர்களால் நமக்கு சொல்லி வைக்கப்பட்டுள்ள ஒரு அற்புதமான நேரம்.

இந்த நேரத்தை தான் மைத்ரேய முகூர்த்தம் என்று சொல்லுவார்கள். ஒருவேளை நீங்கள் கடன் வாங்கிய நபர், கடன் தொகையை சிறு சிறு தொகையாக திருப்பிப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றால், இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் ஒரு சிறு தொகையை அவருடைய பெயரைச் சொல்லி ஒரு உண்டியலில் சேர்த்து வரலாம்.

அப்படி இல்லை என்றால் அவர் பெயரை ஒரு கவரின் மேல் எழுதி, அந்த கவருக்குள் உங்களுடைய பணத் தொகையை குறிப்பிட்ட இந்த நேரத்தில் போட்டு வரலாம். அதாவது அவர் கையில் கொடுக்கவில்லை. அவர் பெயர் எழுதிய கவரில் அல்லது உண்டியலில் ஒரு சிறு தொகையை வைக்கப் போகிறீர்கள். இது அவருக்கு கடன் தொகையை திருப்பிக் கொடுப்பதற்கு சமமாக கருதப்படுகிறது. அவ்வளவு தான். உங்களுடைய ராசிக்கு ஏற்ற பொதுவான மைத்ரேய முகூர்த்த நேரம் எது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

மேஷம்: வியாழக்கிழமை காலை 9:00 மணியிலிருந்து 10.30 முப்பது மணி வரை.
ரிஷபம்: வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் 10.30 முப்பது மணி வரை.
மிதுனம்: புதன் கிழமை காலை 7:30 மணி முதல் 9.00 மணி வரை.
கடகம்:திங்கட்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை.
சிம்மம்: ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியிலிருந்து 12.30 மணி வரை.
கன்னி: வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணியிலிருந்து 6:30 மணி வரை.
துலாம்: சனிக்கிழமை காலை 10:30 மணியிலிருந்து 12:00 மணி வரை.
விருச்சிகம்: வியாழக்கிழமை மாலை 3:00 மணியிலிருந்து 5:30 மணி வரை.
தனுசு: செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணியிலிருந்து 12:00 மணி வரை.
மகரம்: சனிக்கிமை காலை 8:00 மணியில் இருந்து 10:30 மணி வரை.
கும்பம்: திங்கட்கிழமை மாலை 3:00 மணியிலிருந்து 5:30 மணி வரை.
மீனம்: வியாழக்கிழமை காலை 3:00 மணியிலிருந்து 10:30 முப்பது மணி வரை
உங்களுக்கு எந்த கிழமை, எந்த நேரம் கொடுக்கப்பட்டு இருக்கின்றதோ, அந்த நேரத்தில் உங்களுடைய கடன் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும். நகை கடனாக இருக்கட்டும், கைமாத்தாக வாங்கிய பணமாக இருக்கட்டும். வங்கி கடனாக இருக்கட்டும், வீட்டு லோன், கார் லோன், எதுவாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட இந்த நேரத்தில் போனில் ஆன்லைன் மூலம் டிரன்சாக்சன் செய்தாலும் பரவாயில்லை. இந்த நேரத்தில் கடன் தொகையை திருப்பிக் கொடுத்து விட்டீர்கள் என்றால், கடன் சுமை இல்லாமல் உங்கள் கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையத் தொடங்கும். நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக கடன் இல்லாத நல்லதொரு வாழ்க்கையை வாழ முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =

Most Popular