வேறு யார் ? சாட்ஷாத் கண்ணபிரான் தான்.
இல்லாததை இருப்பதாகவும் இருப்பதை இல்லாததாகவும் உண்மையை பொய்யாகவும் பொய்யை மெய்யாகவும் எடுத்து உரைப்பதில் வல்லவனாயிற்றே அவன் .
சகாதேவன் ஜாதக சாஸ்திரத்தை அறிந்தவன் என்பதால் துரியோதனன் அவனிடம் வந்து “” யுத்தத்தில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டான். அமாவாசை நாளை குறித்து கொடுக்க வேண்டும் என்று கேட்டான். அமா வாசை நாளை குறித்து கொடுத்து வெற்றி உங்களுக்கே என்றான் சகாதேவன்.
இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த பரமா த்மாவுக்கு வந்ததே கடும் கோபம். துரியோத னன் , நம்மிடம் போர் செய்வதற்காகத் தான் தேதி குறிக்க சொல்கிறான் .நம்மை வெல்வத ற்காகத்தான் நல்ல நாள் பார்த்து தர சொல்லி கேட்டு இருக்கிறான். அப்படி இருக்கும் போது எப்படி தேதி கொடுக்கலாம் நீ? சரி அந்த தேதி பொய்யான நாள் தானே? தப்பான நேரத்தை தானே குறித்து கொடுத்தாய்? என கண்ணன் கேட்டான்.
சகாதேவன் மெல்லியதாக சிரித்தபடி ஜோதிட சாஸ்த்திரத்தை பொய்யாக எடுத்து உரைப்பது பாவம் .அப்படிச் சொல்வது ஜோதிடத்தையே அவமதிப்பதாகிவிடும் . ஒரு நாளும் அப்படி யொரு ஸதவற்றை நான் செய்யமாட்டேன் . எனவே நான் குறித்து கொடுத்த தேதியில் அமாவாசை திதியில் யுத்தம் செய்தால் துரி யோதனன் நிச்சயம் வெல்வான் .
நானும் என் சகோதரர்களும் தோற்கலாம் . ஆ னால் ஜோதிடத்தை நம் லாப நட்டங்களுக்காக பயன்படுத்தி கொள்ள கூடாது. ஜோதிட சாஸ்திரத்தில் இருந்து வழுவாமல் இருப்பது இந்த சகாதேவனின் வேலை . கள்ளத்தனம் செய்து தகிடுதத்தம் பண்ணி ஜெயிக்க செய்வ து உன்னுடைய வேலை! அதை நீ பார்த்து கொள். என்றான் சகாதேவன்.
சிரித்து கொண்டே கண்ணன் 14 ஆம் நாளான சதுர்த்தசி அன்று ஆற்றங்கரைக்கு சென்று தர்ப்பணம் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டா ன் .அதை கண்ட அனைவரும் அதிர்ந்து போ னார்கள். “இதென்ன குழப்பம், தர்ப்பணம் செய்கிறாரே என்று பிரகஸ்பதியிடம் கேட்டா ர்கள்.அதே நேரத்தில் சூரியனும் சந்திரனும் குழம்பிப்போன நிலையில் ஒன்று கூடினா ர்கள்.புலம்பி தீர்த்தார்கள் ஒன்றும் புரியாமல் தவித்தார்தள்.
கிருஷ்ணரிடம் போய் அமாவாசை அன்று தானே தர்ப்பணம் செய்ய வேண்டும். என்று கேட்டார்கள். கிருஷ்ணன் அமாவாசைக்கு அர்த்தம் என்ன? என்று கேட்டார். உடனே சூரியனும் சந்திரனும் சந்தித்து கொள்வது தான் அமாவாசை திதி.
உடனே கிருஷ்ணர் அதுதானே அமாவாசை இப்போது நீங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டு ஒன்றாக தானே இருக்கிறீர்கள் என்வே இந்த நிதி அமாவாசை திதி தானே ? அதனால் தான் தர்ப்பணம் செய்கிறேன். என் அனுஷ்டானத்துக்கு இடையூறு செய்யாதீர்கள். நான் அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டு ம் என்று குறும்பாக சொல்லி விட்டு தர்ப்பணம் செய்வதில் ஈடுப்பட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.
பஞ்ச பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும் என் பதற்காக ஒரு அழகான பொய்யை சொல்லி அதை உண்மையாக ஆக்கி விட்டான் கண்ண ன். இப்படியெல்லாம் செய்து கிருஷ்ணன் தன் பக்தர்களை காப்பாற்றினான் .
இந்த உலகம் இருக்கும் வரை கிருஷ்ணனுக் கும் இந்த லோகத்துக்கும் பந்தம் இருக்கும். கோவிந்தா என்று ஒரு சொல்லை கேட்டு பாஞ் சாலிக்கு உதவ அவன் எப்படி ஒடி வந்தான் என்று தெரி யும். இதெல்லாம் அவனுக்கு லோகபந்து , லோகநாதன் என்று பெயர்கள் வந்த காரணங்கள் போலும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்….
இந்த உலகிலேயே மிக பெரிய பொய்யை சொல்லியது யார் தெரியுமா?
RELATED ARTICLES
