Saturday, October 28, 2023
HomeAanmeega Thagavalgalநவக்கிரக தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில் - பகுதி 3!

நவக்கிரக தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில் – பகுதி 3!

நவக்கிரக தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில் – பகுதி 3!

8. அருள்மிகு முண்டக கண்ணியம்தான் – ராகு ஸ்தலம்

கபாலீஸ்வரர் கோயில் கோபுர வாசல் வழியாக வடக்கு மாட வீதியை அடைந்து அங்கிருந்து செங்கழுநீர் விநாயகர் தெரு வழியாக கச்சேரி சாலையைக் கடந்து சென்றால் அருள்மிகு முண்டக கண்ணியம்மன் ஆலயத்தின் அலங்கார வளைவைக் காணலாம். மயிலையின் மருத்துவச்சி எனப் போற்றப்படும் முண்ட கண்ணியம்மனே ராகுவின் அம்சமாக திகழ்கிறாள்.

Also Read This: நவக்கிரக தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில் – பகுதி 1!

அங்கிருந்து சுமார் 1 கிமீ சென்றால் மாதவ பெருமாள் திருக்கோயிலின் பின்புறம் அமைந்திருக்கிறது. இங்குள்ள புற்று மற்றும் நாகர் சிலைகளும் ராகு பரிகாரங்களும் பிரசித்தமானது மருத்துவத்திற்கு ராகுவின் அருள் இருக்க வேண்டும். இந்த மருத்துவச்சியை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

9. அருள்மிகு கோலவிழி அம்மன் – கேது ஸ்தலம்

காரணீஸ்வரர், விருபாக்‌ஷீஸ்வரர் மற்றும் வாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது அருள்மிகு கோலவிழியம்மன் ஆலயம். துர்கை மற்றும் மாரியம்மனை ராகுவின் அம்சமாகவும் காளியை கேதுவின் அம்சமாகவும் கூறப்படுகிறது. எல்லை காளியான கோலவிழி அம்மன் கேதுவின் அம்சமாக திகழ்கிறாள்.
இந்த அம்மனை வணங்கி வர அனைத்து தடைகளும் நீங்கும். மேலும் புத்திர தோஷம், திருமண தோஷம் ஆகியவை நீங்கும். தீராத வியாதிகளும் திருஷ்டி தோஷங்களும் நீங்கும்.

அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயில்

10. சென்னையின் சிறப்பு மிக்க திருமயிலையில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ளது தன்னிகர் இல்லா திருத்தலம் அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோயில். அடியார்கள் எல்லோரும் மக்கள் நன்மை பெற்றிட வேண்டும் என்று எண்ணற்ற தத்துவங்களை இறைவனிடம் பெற்று மக்களுக்கு வழங்கி உள்ளனர். அவற்றுள் ஞான தெளிவு பெற்றிடல் என்பது மிகவும் தனிப்பெருமை வாய்ந்தது அவ்வாறு ஞானவைராக்கிய அடைந்திட சித்தர்களை வழிபட வேண்டியது அவசியம் ஆகின்றது.

சைவ அடியார்களுள் ஒருவரான ஸ்ரீ அப்பர் சுவாமிகள், 1851 ஆம் ஆண்டு ஆனி மாதம் பரணி நட்சத்திரத்தில் பிரம்ம சமாதி அடைந்தார். அவர்களின் ஆத்ம சீடரான திருசிதம்பர சுவாமிகள், அருள்மிகு அப்பர் சுவாமிகளின் ஜீவசமாதிக்கு மேல் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து 1855-ம் அண்டு அவரது நினைவாக 16-கால் மண்டபம் ஒன்றை சிறப்பாகக் கட்டினார்.

பிறகு அவற்றைத் திருக்கோயிலாக மாற்றி அமைத்தார். பொதுவாக ஜீவ சமாதிகள் பிரம்ம சமாதிகள் பிருந்தாவனங்கள் போன்ற இடங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் மூர்த்திகளுக்கு விஸ்வநாதர், என்னும் அம்பாள் சன்னதிகளில் இருக்கும் அம்பாளுக்கு விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள் விசாலாட்சி என்றும் பெயர் பெற்று அருள்பாலித்து வருகின்றார். காசியைப் போன்றே இத்தலத்திலும் பைரவர் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இப்படி மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதால்தான், “மயிலையே கயிலை கயிலையே மயிலை” என்ற சிறப்பைப் பெற்றது போலும். சிவ அன்பர்கள் ஏழு சிவன் கோயில்கள் மற்றும் இரண்டு அம்மன் கோயில்கள் இவற்றோடு அப்பர் ஸ்வாமி கோயிலுக்கும் சென்று தரிசித்து நவக்கிரகங்களை மட்டுமல்லாது சப்த விடங்க ஸ்தலங்கள், அட்ட வீரட்டான ஸ்தலங்களை தரிசித்த பலனைப் பெறுவோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight + nine =

Most Popular