1, திருப்பரங்குன்றம் – சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.*
*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம்.*
*முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது முதல்படைவீடாகும். இங்கு மட்டுமே முருகனின் வேலுக்கு அபிஷேகம் நடக்கிறது. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர்.*
*2,திருச்செந்தூர் – அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.*
*அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் திருச்செந்தூர்,தூத்துக்குடி மாவட்டம்.*
*முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது இரண்டாவது படைவீடாகும். இத்தலம் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது.*
*3, பழநி – மாங்கனிக்காக தமையன் விநாயகரோடுபோட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.*
*அருள்மிகு தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில்- பழநி , திண்டுக்கல் மாவட்டம்.*
*இத்தலத்து மூலவர் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த மூலவரை போகர் என்ற சித்தர் பிரதிஷ்டை செய்தார். உற்சவர் முத்துக்குமார சுவாமி. முருகனின் அறுபடை வீட்டில் இத்தலம் மூன்றாம் படை வீடாகும். இத்தலத்ததில் தான் காவடி எடுக்கும் பழக்கம் உருவானது.*
*4, சுவாமிமலை – தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.*
*அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் சுவாமிமலை,தஞ்சாவூர் மாவட்டம்.*
*முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது நான்காவது படைவீடாகும். இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. விபூதி அபிசேகம் செய்யும் போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார்.சந்தன அபிசேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருவார். கருவறையை கூர்ந்து பார்த்தால் சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது தெரியும். இதிலிருந்து சிவனும் முருகனும் வேறு வேறு அல்லர் என்பது புலனாகும். மூலவருக்கு எதிரில் இங்கு மயிலுக்கு பதிலாக யானை இருக்கிறது.இது ஹரிகேசன் என்ற அரக்கனை சுவாமிநாதபெருமானை வணங்கி வென்றதால் இந்திரன் தன் காணிக்கையாக இந்த (ஐராவதம்) யானையை தந்ததாக புராணம் கூறுகிறது.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.*
*5, திருத்தணி – சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.*
*அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்.*
*வருடத்தின் நாட்களைக் குறிக்கும்விதமாக 365 படிகளுடன் அமைந்த கோயில் இது 1 லட்சம் ருத்தராட்சங்களால் ஆன ருத்ராட்ச மண்டபம் இங்கு உற்சவர் சன்னதியாக உள்ளது. முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் 5வது வீடு. அமர்ந்த நிலையில் அருணகிரியார் திருச்செந்தூரில் சூரனை வதம் செய்து விட்டு வந்து அமர்ந்து கோபம் தணிந்த தலம். அசுரனோடு மோதியதன் காரணமாக இத்தலத்து மூலவரின் நெஞ்சில் பள்ளம் (துவாரம்) இன்னமும் இருக்கிறதாம். சுவாமி சாந்த சொரூபம். தெய்வேந்திரன் யானையை(ஐராவதம்) தெய்வானைக்கு கல்யாணப் பரிசாக தந்த தலம். இங்கு மூலஸ்தானத்துக்கு முன்பாக மயிலுக்கு பதிலாக யானை உள்ளது. முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடிபோன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞானசக்திதரராக காட்சி தருகிறார். இவரிடம் மற்ற கோயில்களில் காணப்படும் வேல் கிடையாது. முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. முருகன் இங்கு யானை வாகனத்துடன் காட்சி தருகிறார். அதிலும் இத்தலத்தில் உள்ள யானை வாகனம், சன்னதியின் வெளியே பார்த்தபடி இருப்பது விசேஷமான தரிசனம்.*
*6, பழமுதிர்சோலை – ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது.*
*அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சோலைமலை,அழகர்கோவில் , மதுரை மாவட்டம்.*
*முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது படைவீடாகும். சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம்.*
*முக்கிய கோயில்கள்*
*ஹரிப்பாடு ஹரிப்பாடு முருகன் திருக்கோயில், ஆலப்புழா*
*அரியலூர் பாலசுப்ரமணியன் திருக்கோயில், அரியலூர்*
*கந்தக்கோட்டம் கந்தசுவாமி திருக்கோயில், சென்னை*
*வடபழநி வடபழநி ஆண்டவர் திருக்கோயில், சென்னை*
*குமரன்குன்றம் பாலசுப்பிரமணியர் திருக்கோயில், சென்னை*
*கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சென்னை*
*மடிப்பாக்கம் கல்யாண கந்தசுவாமி திருக்கோயில், சென்னை*
*மேற்கு சைதாப்பேட்டை சிவசுப்ரமணியர் திருக்கோயில், சென்னை*
*பழவந்தாங்கல் திருமால் மருகன் திருக்கோயில், சென்னை*
*சொர்ணமலை குழந்தை வேலாயுதசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்*
*பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்*
*ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்*
*வேல்கோட்டம் முருகன் திருக்கோயில், கோயம்புத்தூர்*
*குமரன் கோட்டம் சுவாமி நாத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்*
*அனுவாவி சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்*
*கிணத்துக்கடவு வேலாயுத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்*
*இரும்பறை ஓதிமலையாண்டவர் திருக்கோயில், கோயம்புத்தூர்*
*செஞ்சேரி வேதாயுத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்*
*சரவணம்பட்டி ரத்தினகிரி முருகன் திருக்கோயில், கோயம்புத்தூர்*
*கிணத்துக்கடவு முத்துமலை முருகன் திருக்கோயில், கோயம்புத்தூர்*
*மருதமலை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்*
*வில்லுடையான் பட்டு சிவசுப்பிரமணியசாமி திருக்கோயில், கடலூர்*
*மணவாளநல்லூர், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் திருக்கோயில், கடலூர்*
*சி.மானம்பட்டி வெற்றிவேல் முருகன் திருக்கோயில், கடலூர்*
*பரங்கிப்பேட்டை முத்துக்குமர சுவாமி திருக்கோயில், கடலூர்*
*புதுவண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கடலூர்*
*குக்கி சுப்ரமண்யா குக்கி சுப்ரமண்யா திருக்கோயில், தட்ஷின கன்னடா*
*குமாரசாமி பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், தர்மபுரி*
*ஆர். வி. நகர் தண்டாயுதபாணி திருக்கோயில், திண்டுக்கல்*
*திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திண்டுக்கல்*
*பழநி தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில், திண்டுக்கல்*
*தாண்டிக்குடி பாலமுருகன் திருக்கோயில், திண்டுக்கல்*
*கதித்த மலை வெற்றி வேலாயுதசுவாமி திருக்கோயில், ஈரோடு*
*கோபி பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், ஈரோடு*
*திண்டல்மலை வேலாயுத சுவாமி திருக்கோயில், ஈரோடு*
*சென்னிமலை சுப்ரமணியசுவாமி திருக்கோயில், ஈரோடு*
*பச்சை மலை சண்முகநாதர் திருக்கோயில், ஈரோடு*
*பவளமலை முத்துகுமார சுவாமி திருக்கோயில், ஈரோடு*
*கொருமடுவு பாலதண்டாயுத பாணி திருக்கோயில், ஈரோடு*
*எழுமாத்தூர் கனகாசல குமரன் திருக்கோயில், ஈரோடு*
*மலையப்பப்பாளையம் முத்துவேலாயுத சுவாமி திருக்கோயில், ஈரோடு*
*உத்திரமேரூர் பாலசுப்ரமணியன் திருக்கோயில், காஞ்சிபுரம்*
*இளையனார்வேலூர் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்*
*செய்யூர் கந்தசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்*
*வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்*
*திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்*
*காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில், காஞ்சிபுரம்*
*குன்றத்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்*
*குமார கோயில் குமார சுவாமி திருக்கோயில், கன்னியாகுமரி*
*தோவாளை சுப்பிரமணிய சாமி (திருமலை அமரர் பதிகாத்த நயினார்) திருக்கோயில், கன்னியாகுமரி*
*மருங்கூர் சுப்பிரமணியர் திருக்கோயில், கன்னியாகுமரி*
*வேலாயுதம்பாளையம் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், கரூர்*
*வெண்ணெய் மலை பாலசுப்பிரமணியர் திருக்கோயில், கரூர்*
*கிடங்கூர் சுப்ரமணியர் திருக்கோயில், கோட்டயம்*
*அகரம் பாலமுருகன் திருக்கோயில், கிருஷ்ணகிரி*
*காட்டினாயனப்பள்ளி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கிருஷ்ணகிரி*
*ஹார்விபட்டி பாலமுருகன் திருக்கோயில், மதுரை*
*நேதாஜி ரோடு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மதுரை*
*திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை*
*புத்தூர், உசிலம்பட்டி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை*
*சோலைமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை*
*நாகப்பட்டினம் குமரன் திருக்கோயில், நாகப்பட்டினம்*
*பெரம்பூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்*
*எட்டுக்குடி எட்டுக்குடி முருகன் திருக்கோயில், நாகப்பட்டினம்*
*சீர்காழி பழநியாண்டீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்*
*பேளுக்குறிச்சி பழனியப்பர் திருக்கோயில், நாமக்கல்*
*குருசாமிபாளையம் சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், நாமக்கல்*
*கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், நாமக்கல்*
*அலவாய்ப்பட்டி பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நாமக்கல்*
*மோகனூர் பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், நாமக்கல்*
*செட்டிகுளம் தண்டாயுதபாணி திருக்கோயில், பெரம்பலூர்*
*விராலிமலை சண்முக நாதர் திருக்கோயில், புதுக்கோட்டை*
*குமரமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில், புதுக்கோட்டை*
*தபசுமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில், புதுக்கோட்டை*
*மேலக் கொடுமலூர் சுப்பிரமணியசுவாமி (குமரக்கடவுள்) திருக்கோயில், ராமநாதபுரம்*
*குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி திருக்கோயில், ராமநாதபுரம்*
*ராமநாதபுரம் வழிவிடும் முருகன் திருக்கோயில், ராமநாதபுரம்*
*சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலை பால சுப்பிரமணியர் திருக்கோயில், சேலம்*
*கஞ்சமலை பாலமுருகன் திருக்கோயில், சேலம்*
*உடையாபட்டி கந்தாஸ்ரமம் திருக்கோயில், சேலம்*
*குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோயில், சேலம்*
*வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் திருக்கோயில், சேலம்*
*கோவனூர் சுப்பிரமணியர் திருக்கோயில், சிவகங்கை*
*குன்றக்குடி சண்முகநாதர் திருக்கோயில், சிவகங்கை*
*சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்*
*தெப்பம்பட்டி மாவூற்று வேலப்பர் திருக்கோயில், தேனி*
*கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி ஆறுமுக நயினார் திருக்கோயில், தேனி*
*சுருளிமலை சுருளிவேலப்பர் திருக்கோயில், தேனி*
*குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்சி*
*மணக்கால் சுப்ரமண்யசுவாமி திருக்கோயில், திருச்சி*
*ஆண்டார்குப்பம் பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருவள்ளூர்*
*வானகரம் சுவாமிநாத பாலமுருகன் திருக்கோயில், திருவள்ளூர்*
*சிறுவாபுரி, சின்னம்பேடு பாலசுப்பிரமணியர் திருக்கோயில், திருவள்ளூர்*
*திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், திருவள்ளூர்*
*அம்மையார்குப்பம் சுப்ரமணியர் திருக்கோயில், திருவள்ளூர்*
*ஸ்ரீவைகுண்டம் நதிக்கரை முருகன் திருக்கோயில், தூத்துக்குடி*
*திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், தூத்துக்குடி*
*கழுகு மலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில், தூத்துக்குடி*
*கொழுந்துமாமலை பாலசுப்ரமணியர் திருக்கோயில், திருநெல்வேலி*
*இலஞ்சி இலஞ்சிக்குமாரர் திருக்கோயில், திருநெல்வேலி*
*ஆய்க்குடி பாலசுப்பிரமணியர் திருக்கோயில், திருநெல்வேலி*
*பண்பொழி திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி*
*சிவகிரி பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி*
*செங்கம், வில்வாரணி சுப்பிரமணியர் திருக்கோயில், திருவண்ணாமலை*
*எண்கண் சுப்ரமணியசுவாமி திருக்கோயில், திருவாரூர்*
*எல்க் மலை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நீலகிரி*
*மஞ்சூர் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நீலகிரி*
*குன்னூர் சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நீலகிரி*
*கோத்தகிரி வெற்றிவேல் முருகன் திருக்கோயில், நீலகிரி*
*காங்கேயநல்லூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வேலூர்*
*ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயில், வேலூர்*
*வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வேலூர்*
*திருத்தங்கல் கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், விருதுநகர்.*
