Monday, October 23, 2023
HomeAanmeega Thagavalgalநவராத்திரி ஸ்பெஷல் !

நவராத்திரி ஸ்பெஷல் !

அந்த தேவி உபாசகர் ஒரு முறை, செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி , குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பமும் இட்டிருந்தார் ….

.ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை !… ஒரு நாள் அவர் பூஜையறையில் அம்பிகையை தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்த அக்கணம் .

..கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க .. அந்த தேவி உபாசகர் வெளியே வராததால் …கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட. ஆரம்பித்தார் !

அப்போது உள்ளிருந்து அந்த தேவி உபாசகரின் மனைவி வெளியே வந்து
” உங்களுக்கு பணம் தானே வேண்டும் ? ..கூச்சல் போடாதீர்கள் !..அரை நொடியில் பணத்துடன் வருகிறேன் …” மிிடுக்காக சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தவள் , சொல்லி வைத்தாற்போல் அரை நொடியில் வந்தாள் , ஒரு சிறு பை சகிதம் .;
.. .பின் புன்னகையுடன் அந்த பையை அவரிடம் நீட்டியவாறே,

” இதோ பாருங்கள் ..இந்த பையில் நீங்கள் கடனாக கொடுத்த பணமும் அதற்குண்டான , வட்டியும் உள்ளன ! பூஜை முடிந்ததும் நீங்கள் அவர் கையினால் பிரசாதம் பெற்றுக்கொண்டு ,பின் இந்த பத்திரத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள் ! ”….

புன்னகை மாறாத முகத்துடன் சொல்லி விட்டு அந்த அம்மாள் உள்ளே செல்ல ..

செல்வந்தரும் பை, பத்திரம் சகிதம் வீட்டுதிண்ணையிலேயே அமர்ந்து கொண்டார் .. சற்ற்றைக்கெல்லாம் பிரசாத தட்டுடன் வெளியே வந்த அந்த தேவி உபாசகர் , அங்கே அமர்ந்திருந்த செல்வந்தரை கண்டு வியப்பு மேலிட ,

” அடடே …உங்களை கவனிக்க வில்லை ….மன்னியுங்கள் !”
பிரசாத தட்டை நீட்டியவாறு மெல்லிய குரலில் பேசியவரை பேச விடவில்லை அந்த செல்வந்தர் .. ‘முதலில் இந்த பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள் ! ”…
அவரின் வார்த்தைகள் கேட்டு தேவி உபாசகருக்கு ஏகத்துக்கு ஆச்சரியம் !.புருவம் முடிச்சிட ,

.” நான் இன்னும் உங்கள் கடனை அடைக்கவில்லையே ?..”
‘பரிதாமாக கூறியவரை புன்னகையுடன் ஏறிட்டார் செல்வந்தர் ; உங்கள் மனைவி சற்று முன்பு வந்து மொத்த கடனையும் அடைத்துவிட்டு , பத்திரத்தையும் உங்களிடம் கொடுக்க சொன்னார் !”
ஆச்சரியத்தில் ஆழ்ந்த தேவி உபாசகர் , பின் மனைவியை அழைத்து ,

” நீ இவரது கடனை அடைத்ததாக கூறுகிறாரே …உண்மையா ?…..”
என்று வினவ …. அந்த அம்மையாரோ திகைப்புடன் ,
” அய்யோ …நான் பூஜையறையில் உங்களுடன் தானே இருந்தேன்…?..இது எப்படி சாத்தியம் ? ”
என்று அரற்றிய அக்கணம் …

பூஜையறையிலிருந்து ஒரு அசரீரி !
” நான் தான் பணம் கொடுத்தேன் !”..
குரல் கேட்டு பூஜையறைக்கு அனைவரும் விரைய,அங்கே அம்பிகையின் உருவத்தை தவிர வேறு எதுவும் இல்லை!

இப்போது சகலமும் புரிந்து போயிற்று அந்த தேவி உபாசகருக்கு ;
கடனை அடைக்க , தன் மனைவி உருவில் வந்தது சாட்ஷாத் அம்பிகையே என்றுணர்ந்த அவரின் கண்களில் இப்போது தாரை தாரையாய் கண்ணீர் ! அருகே திக்பிரமையுடன் அவரது மனைவி ! உங்கள் மேன்மை தெரியாமல் தவறாக பேசி விட்டேன் …மன்னியுங்கள் !”
கண்கள் பனிக்க , செல்வந்தர் அவரின் கால்களில் விழுந்தார் !

அந்த தேவி உபாசகர் வேறு யாருமில்லை ..
லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய பாஸ்கரராயர் தான் !

அவரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது ! தஞ்சை மாவட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே ,காவேரி ஆற்றங்கரையில் வசித்தவர் இவர் !

தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் , பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.!

தேவி சரணம் ! ஸ்ரீ மாத்ரே நமஹ !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + four =

Most Popular