எந்தெந்த திதிகளில் சுபகாரியங்கள் செய்யலாம் என்று தெரியுமா?
திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தொலைவு என்று அர்த்தம். குறிப்பாக திதி என்பது வானவெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஏற்பட்ட தூரத்தின் பெயராகும்.
மொத்தம் திதிக்கு எத்தனை உள்ளது?
1. பிரதமை, 2. துவிதியை, 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி, 13. திரயோதசி, 14. சதுர்த்தசி, 15. பவுர்ணமி (அ) அமாவாசை என்று மொத்தம் 15 திதிகள் உள்ளன.
அமாவாசை, பவுர்ணமி ஆகிய இரண்டு திதிகள் தவிர மற்ற பதினான்கு திதிகளினால் சில சுப அசுபப் பலன்கள் ஏற்படக்கூடும். அதேபோல் சில கிழமைகளில் சில திதிகள் வந்தால் சுபப் பலன்களும், அசுபப் பலன்களும் ஏற்படும் என்பார்கள் .
நற்பலன் தரும் கிழமைகளும் அதில் வரும் திதிகளும் என்னைன்ன:
ஞாயிறு அன்று வரும் – அஷ்டமி திதி, திங்கள் அன்று வரும் – நவமி திதி, செவ்வாய் அன்று வரும் -சஷ்டி திதி , புதன் அன்று வரும் – திரிதியை திதி; வியாழன் அன்று வரும் – ஏகாதசி திதி, வெள்ளி அன்று வரும் -திரயோதசி திதி, சனி அன்று வரும் -சதுர்த்தசி திதி. இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.
சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள் என்னைன்ன:
ஞாயிறு அன்று வரும் – சதுர்த்தசி திதி, திங்கள் அன்று வரும் – சஷ்டி திதி, செவ்வாய் அன்று வரும் – சப்தமி திதி, புதன் அன்று வரும் -துவிதியை திதி, வியாழன் அன்று வரும் – அஷ்டமி திதி, வெள்ளி அன்று வரும் – நவமி திதி, சனி அன்று வரும் -சப்தமி திதி.
மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது அவசியம் ஆகும் . ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது. வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு. இத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் நலம் சேர்க்கும்.
