Monday, October 23, 2023
HomeAanmeega Thagavalgalதாடேப்பள்ளி ப்ரஹம்ம ஸ்ரீ நாராயண சாஸ்திரிகளுக்கு அம்பிகை அனுக்ரஹம் செய்த லீலை:!!

தாடேப்பள்ளி ப்ரஹம்ம ஸ்ரீ நாராயண சாஸ்திரிகளுக்கு அம்பிகை அனுக்ரஹம் செய்த லீலை:!!

நவராத்ரி ஸமயம் எல்லோரும் பரபரப்பாக தேவீக்கு ஆகவேண்டிய பூஜா கார்யங்களை செய்து கொண்டிருந்தனர்!! நாராயண சாஸ்திரிகளோ க்ருஹத்தின் ஓரிடத்தில் தேவீயின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தவாறு நிர்விகல்ப ஸமாதி நிலையிலிருந்தார்!! ஆயிரம் சிஷ்யர்கள் இருந்தாலும் ஸ்ரீ சக்ர பூஜையை நாராயண சாஸ்திரிகள் அவர் கையால் செய்தால் தான் அவருக்கு த்ருப்தி!! ஆவரண பூஜை செய்யும் நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது!! ஆனால் சாஸ்திரிகளோ இன்னும் இருக்கும் இடத்தை விட்டு எழவில்லை!! சிஷ்யர்களுக்கு எழுப்பவும் மனமில்லை!!
சாஸ்திரிகளோ நவராத்திரி, பூஜை என்பதையெல்லாம் மறந்தவறாய் ப்ரஹம்மமாய் அமர்ந்திருந்தார்!! இப்போது என்ன செய்வது என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும் போதே க்ருஹத்தின் முன்பு ஏதோ ஸப்தம்!!
சிஷ்யர்கள் சென்று பார்க்க பச்சை பட்டாடையுடன் ஒன்பது வயது சிறுமி ஒருத்தி ஸர்வாலங்கார பூஜிதையாக நின்றுகொண்டிருந்தாள்!!
யெவரம்மா நுவு?! தெலுங்கில் நாராயண சாஸ்திரிகளின் சிஷ்யர் ஒருவர் கேட்க்க பதில் கூறினாள் அந்த சிறுமி!!
நா பேரு “ஞானப்ரஸுன்னா..!!
அந்தாருக்கு “பாலா” னி செப்பத்தானே தெலிசிந்தி!!
மாயம்மா பேருக் கூட “லலிதா..!! அந்தருக்கி காமாக்ஷீ!! அட்லானே
தெலுசு..!!
என்று விளையாடிக்க கொண்டே பதில் கூறிக்கொண்டிருந்தாள் அந்த சிறுமி!! சரி..!சரி..!! என்ன விஷயம் கடிந்தார் சிஷ்யர்!! அது ஒன்னுமில்லை என் மாதா நாராயண தாத்தாவுக்கு ப்ரஸாதம் தந்தனுப்பினா அத குடுத்துட்டு போகத்தான் வந்தேன்!! என்று கூறி சிரித்தாள் பாலா!! சரி கொடு!! நான் கூடுத்துடறேன்!! சிஷ்யர் ஒருவர் கைநீட்ட தரமறுத்தனள் பாலா!! இல்ல இது தாத்தா கையிலதான் தரனும்!! என்று கூறி சிரித்துக்கொண்டே க்ருஹத்தினுள் நுழைந்தாள்!! சாஸ்திரியோ கண்களை மூடி தேவித்யானத்தில் இருந்தார்!! தாத்தா..தாத்தா சாஸ்திரிகளின் அருகிலேயே சென்று விட்டாள் பாலா!! சிஷ்யர்களோ என்ன நடக்கப்போகிறதோ என்ற பயத்தில் நின்றுகொண்டிருந்தனர்!! தாத்தா தூங்கறயோ!! சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஓஹோ!! தாத்தா நீ இன்னும் நவராத்ரி பூஜை பண்ணலயோ!! சரி வா இன்னைக்கு நாம பண்ணுவோம்!! என்றபடி விறுவிறுவென்று சாஸ்திரிகளின் கையை பிடித்து பூஜா மண்டம் வரை அழைத்து கொண்டு வந்துவிட்டாள் பாலா!! சாஸ்திரிகளோ ஏதுமறியதவர் போல் த்யானம் கலைந்து சிறுமியின் பின்னாலே சென்று பூஜாமண்டபத்தில் அமர்ந்து கொண்டார்!!
தாத்தா..!! நீ பூஜை பண்ணு நான் உனக்கு பரிஜாரகம் பண்றேன் என்று கூறியவள் பூஜா புஷ்பங்களிலிருந்து “விசேஷார்க்யாம்ருதம்” சரி செய்வது வரை அத்தனை வேலையையும் அச்சிறுமி ஒருவளே செய்வது கண்டு ஆச்சர்யப் பட்டுக்கொண்டிருந்தனர் சிஷ்யர்கள்!! ப்ரதமாவரணம் தொடங்கி நவமாவரணம் வரை முடிந்தாயிற்று!! சரி அடுத்து கன்யா, ஸுவாஸிநீ பூஜை தான்!! ஏற்பாடு பண்ண மாமியும் அவ கொழந்தையும் இன்னும் வரலையோ?! சிஷ்யர் ஒருவர் வாசலை பார்த்து கத்த கலகலவென சிரித்தாள் பாலா..!! அந்த லலிதா மாமி என் அம்மா தான்!! நான் ஆத்துல பூஜை பன்னிட்டு வரேன் நீ போய் தாத்தாக்கு ஒத்தாசை பண்ணுனு என்ன அனுப்பினா!!
அந்த சிறுமி பாலாவுக்கே விசேஷமாக கன்யா பூஜை நடந்தது!! ஏனோ என்றைக்குமில்லாமல் அன்று சாஸ்திரிகளுக்கு சொல்லவொன்னா ஆனந்தம்!! சரி தாத்தா..!! எல்லாம் நல்லாயிருந்தது!! நேக்கு தூக்கம் வர்றது சத்த உங்க மடியில கண்ணயரட்டுமா?! பாலா கேட்க்க சாஸ்திரிகளோ வாடீ என்தங்கமே!! என்றபடி அணைத்து மடியில் தூங்கவைத்துக் கொண்டு தானும் தூங்கிபோனார்!! இன்னும் ஸுவாஸிநீ பூஜை ஆகலையே!! சிஷ்யர் ஒருவர் கூற ப்ரக்ஞை வந்தவராய் எழுந்தால் சிறுமி இல்லை!! அதற்குள் பூஜைக்கு வரித்த ஸுவாஸிநீயும் வந்தாயிற்று!!
க்ஷமிக்கனும் மாமா..!! ஆத்து பூஜையில சித்த நாழியாயிடுத்து..!! இதோ நானும் குழந்தையும் வந்துடோம்..!! பூஜையை ஆரம்பிக்கலாமே என்றவளை பார்த்துவிட்டு நீ தான் உன் கொழந்தைய அனுப்பினயே அவளே நேக்கு அத்தனை ஒத்தாசையும் பண்ணா கன்யா பூஜையும் வாங்கிண்டு என்மடிலதானே தூங்கினா எங்க அவோ?! என்று சாஸ்திரிகள் கேட்க அவளோ என்ன சொல்றேள் நானும் என் பெண்ணும் இப்போதானே வர்றோம்!! அவ இத்தனை நாழி என்னோட தான் இருந்தா என்று கூறி சாஸ்திரிகளை பார்த்தனள் அந்த மாமி!!
அப்போது தான் சாஸ்திரிகளுக்கு புரிந்தது!! அப்போ வந்தது!! அம்பா..!! என் தங்கமே..!! பாலாத்ரிபுரஸுந்தரீ!! அழகுபொம்மே..!! என கண்களில் ஜலம்பெருக பாலாம்பிகையின் விக்ரஹத்தை அணைத்துக்கொண்டார் சாஸ்திரிகள்!! அழாதே நாராயணா என சொல்லாமல் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள் “லீலாவிநோதினியான பாலா!!”
ஜய ஜகதம்ப ஸிவே!!
ஜய ஜய காமாக்ஷீ!!!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =

Most Popular