மனித வாழ்க்கையில் புண்ணியம் மிகுந்த சிவராத்திரி

198

(மகாசிவராத்திரி) நண்பர்களே தயவு செய்து ஒரு முறை படியுங்கள் இந்த பதிவை ,,இந்த பதிவை வெளியிட்டதால் எனக்கு புண்ணியம் கிடைப்பது போல் படிப்பவர் அனைவருக்கும் புண்ணியம் கிடைக்கும் —-(கௌதம மகரிஷி ஜனக -மகாராஜர் நடத்தும் யாகத்தில் கலந்து கொள்ள ஒரு காட்டின் வழியே தன் சீடர்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தார் … எல்லோருக்கும் சற்று களைப்பு தெரியவே ஒரு அரசமரத்தின் நிழலில் ஒய்வு எடுத்தனர் அனைவரும் ,,,அப்பொழுது மிகவும் கோரமாக ஒரு மூதாட்டி வெயிலில் நடக்க முடியாமல் நடந்து வந்து ,,வெயிலின் உக்கிரம் தாளாமல் அந்த மூதாட்டி நிலை -தடுமாறி சுருண்டு கீழே விழுந்து இறந்து போனாள்,,,இதை பார்த்து பதைபதைத்து போன கௌதம மகரிஷி அந்த மூதாட்டியின் அருகே வந்தார் ,,,,அதே நேரம் வானில் இருந்து தங்க விமானம் ஒன்று தரையிறங்கியது அதிலிருந்த சிவ கணங்கள் இருவர் அந்த மூதாட்டியின் உயிரற்ற உடலை தூக்கி தங்க விமானத்தில் ஏற்றினர் ,,அதை பார்த்து வியப்படைந்த கௌதம மகரிஷி ,,,அவர்களை நோக்கி சிவ கணங்களே இந்த கிழவியை பார்க்கும் போது எந்த ஒரு மேற்பட்ட சக்தியும் இருப்பதாக தெரியவில்லையே அப்படி இருக்க இவளுக்கு எப்படி சிவலோகத்தில் இடம் கிடைத்தது என்று கேட்டார் ,,,,சிவகணங்கள் —ஸ்வாமி இவளது வாழ்வின் கதை விசித்திரமானது சொல்கிறோம் கேளுங்கள் –என்று கூறி கதையை சொல்ல ஆரம்பித்தனர் சிவகணங்கள் ) ,,,,(கோகர்கணம் என்ற ஊரில் மக்கள் எல்லோரும் தர்ம நெறியை தவறாது கடைபிடித்து வாழ்ந்து வந்தனர் ஒரு சின்ன உயிர் சேதம் கூட அங்கு இல்லை மக்கள் எல்லோரும் ஒழுக்கத்தை உயிரென மதித்து வாழ்ந்தனர் ,,,,ஆனால் என்னதான் சுடர்விட்டு பிரகாசமாக விளக்கு எரிந்தாலும் அதன் அடியில் கருமை படர்வது போல் ,,சௌதாமினி என்னும் பேரழகி அவ்வூரில் வசித்து வந்தாள்,,பேரழகியான அவள் வசதி வாய்ப்பிலும் குறையாது செல்வதோடு வாழ்ந்து வந்தாள்,,,,அவளுக்கு செல்வச்செழிப்போடு இருந்த ஒரு இளைஞனை மனம் முடித்து வைத்தனர் ,,,இருவரும் மிக்க மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர் ,,ஆனால் விதி வசத்தால் சௌதாமினி கணவன் இறந்து போனான் ,,,கணவன் இறந்த துக்கத்தில் இருந்து மீளாமல் இருந்த அவள் நாளைடைவில் தன் இளமையை அடக்க முடியாமல் தவித்தாள் ,செல்வ செழிப்பிலும் ,,,,,கேட்க ஆள் இல்லாத காரணத்தினாலும் தவறான வழியில் செல்ல துவங்கினாள்,,,,,,,,மது,,,,,அழகான ஆண்களை தன் வயப்படுத்துதல் ,,,இப்படியாய் தவறான பாதையில் செல்ல துவங்கினாள் ,,,,,,நாளைடைவில் இவளது அக்கிரமத்தை பொறுத்து கொள்ளமுடியாத ஊர் மக்கள் சௌதாமினியை அடித்து ஊரை விட்டு விரட்டினர் ,,,,ஊரை விட்டு விரட்ட பட்ட அவள் காடு வழியே வரும் போது ஒரு வேடனை சந்தித்தாள்,,,அவன் இவள் யார் என்னவென்று கனிவோடு கேட்க ,,,,எல்லோரும் அவளை அடித்து விரட்டியதால் கலங்கிய அவளது உள்ளம் ஆறுதல் சொல்ல ஒரு அடைக்கலம் கிடைத்ததும் மடை திறந்த வெள்ளம் போல் எல்லா விஷயத்தையும் கொட்டி தீர்த்தாள் வேடனிடம் அவளை ஆறுதலாக அணைத்த வேடன் இனி தவறு ஏதும் செய்யாதே என்று கூறி தன்னோடு வைத்து அவளை மனம் முடித்தும் கொண்டான் ,,,,அவளுக்கு எந்த குறையும் நேராமல் பார்த்து கொண்டான் ,,,,ஆனால் திக்கற்று அலையும் போது பக்குவ பட்ட அவளது உள்ளம் அடைக்கலம் கிடைத்ததும் மாற துவங்கியது ,,,பழையபடி அவளது உள்ளம் மதுவை நாடியது ,,,,,இதற்க்காக தருணம் பார்த்திருந்த அவள் எண்ணத்தை ஈடேற்றும் விதமாக அவளது கணவன் வெளியூர் சென்றான் ஒரு நாள் ,,,,இவள் அந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கொண்டு மது குடிக்க துவங்கினாள் அதற்கு உணவாக ஈன்று ஆறு மாதமே ஆன பசுங்கன்றை வெட்டி கறி சமைத்து உண்டும் விட்டாள் பின் போதை தெளிந்து நிதானத்துக்கு வந்த பின்தான் தான் செய்த தவறை உணர்ந்தாள் ,,ஐயோ கணவர் வந்து கன்று எங்கே என்று கேட்டாள் என்ன சொல்வது என்று பதைபதைத்து ,,,பின் யோசனை வந்தவளாய் அந்த கன்றின் எலும்பினை வெட்டி வீட்டின் பின் பக்கத்தில் போட்டு வைத்தாள்,,,கணவன் வந்து கேட்டதும் புலி அடித்து கொன்று உணவாக்கி விட்டது என்று பொய்யுரைத்தாள்,,அவனும் அதை நம்பிவிட்டான் ,,,,,பின் காலம் கடந்த பின் ஒரு நாள் இறந்து எமலோகம் அழைத்து வரப்பட்டாள்,,,இவளை பார்த்ததும் எமன் அழகென்ற ஆணவத்தில் பல பாவங்கள் செய்து இறுதியாக பசுவின் கன்று என்றும் பாராமல் அதை கொன்று தின்று பெரும் பாவம் இழைத்து விட்டாய் உன் பாவத்திற்கு இந்த எமலோகத்தில் கூட இடம் கிடையாது ,,இப்போதே பூலோகத்தில் வறுமை உள்ள குடும்பத்தில் அழகற்ற அருவெறுப்புள்ள பெண்ணாக பிறக்க கடவது என்று சாபம் கொடுத்து விட்டார் ,,,எமன் வாக்கு பலிக்காமல் போகுமா ,,,பூலோகத்தில் வறுமை உள்ள குடும்பத்தில் பிறந்த இவள் இளம் வயதிலே தாய் தந்தையரை இழந்து அனாதையாகி பிச்சை எடுத்து கிடைப்பதை உண்டு வாழ்ந்து வந்தாள் ….இப்படிஇருக்க ஒரு நாள் சிவராத்திரி அன்று சிவனடியார்கள் அங்கே உள்ள சிவன் கோயிலுக்கு பூஜை செய்ய வந்தனர் ,,அவர்களோடு கலந்த இவள் பசிக்கு சோறு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அறியாமல் அவர்களோடு சேர்ந்து நமசிவாய என்று சொல்லி கோயில் வாசல் வரை வந்தாள் ,,,,கோயில் வந்ததும் இவளை இனம் கண்டு கொண்ட சிவனடியார் ஒருவர் கேலியாக பசிக்குதா இந்தா இதை சாப்பிடு என்று மூன்று வில்வ இலைகளை கொடுத்தார் அதை தன் மங்கலான பார்வை உடைய இவள் வாங்கி சாப்பிட முடியாத ஒரு இலையை கொடுத்து கேலி செய்கிறான் என்று நினைத்து அந்த வில்வ இலையை கோபத்தில் தூக்கி எறிந்தாள் அது காற்றினில் பறந்து போய் அங்கே மரத்தடியில் உள்ள சிவலிங்கத்தின் மேல் விழுந்தது ,,,,ஸ்வாமி தெரிந்தே எத்தனையோ மன்னிக்க முடியாத பாவங்கள் செய்த இவள்,,,,அன்று தெரியாமல் செய்த சிவராத்திரி பூஜையால் சிவன் பெரிதும் மகிழ்ந்து இவளை சிவலோகம் அழைத்துவர சொன்னார் என்று கூறி தங்கம் விமானம் ஏறி சிவலோகம் சென்றனர் ,,,,,,(நண்பர்களே தெரியாமல் செய்த பூஜைக்கே இப்படி ஒரு பலன் இருக்கும் போது ,,தெரிந்து ஈசனை அறிந்து அன்பாக உங்கள் இல்லங்களில் சிவாய நம என்று பூஜை செய்யுங்கள் மகிழ்வோடு வாழுங்கள் நன்றி ,,,,,,அன்பே நமசிவாயம் ,,,அருளே நமசிவாயம்,,,,,,,இனிய மத்திய வணக்கத்துடன் அணவர்தம் முருகா–ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே எங்கள் ஆதிசக்தி நாயகியின் துணை பெறுவோமே –வேதம் கூறும் நாயகனை மனம் நினைப்போமே —தொண்டு செய்த அடியவர்களின் புகழுரைப்போமே.

ஓம் நமசிவாய