ராகு திசை ஒருவருக்கு 18 ஆண்டுகள் நடைபெறும். இந்த 18 ஆண்டுகளில் ராகு நல்ல நிலையில் இருந்தால் அவரை மிகப்பெரிய செல்வந்தராக மாறுவார். குப்பை மேட்டில் இருப்பவரைக் கூட கோபுரத்தில் அமரவைப்பார். அந்த அளவிற்கு ராகு கொட்டிக்கொடுப்பவர்.
திடீர் பணவரவு எதிர்பாராத யோகத்திற்கு சொந்தக்காரர் ராகுதான்.ராகுவைப் போல கொடுப்பாருமில்லை,கேதுவைப் போல கெடுப்பாருமில்லை என்பார்கள்.
ராகு எதைக் கொடுத்தாலும் அள்ளிக் கொடுப்பார். அதே நேரத்தில் ராகு பலமிழந்து இருந்தால் எதற்கெடுத்தாலும் தடையை ஏற்படுத்துவார். திருமண தடை, குழந்தை பாக்கியத்தில் தடை, வசதி வாய்ப்பில் தடையை ஏற்படுத்துவார்.
ராகு ஒருவரின் ஜாதகத்தில் சுப கிரகங்களுடன் இருந்தால் சுப பலன்களை தருவர். அதே நேரத்தில் செவ்வாய், சனி தொடர்பு ஏற்படும் போது சாதகமற்ற பலனை தருவார்.
ராகு பிரம்மிக்கத் தக்க கிரகம். கொடுப்பவரும் அவரே தடுப்பவரும் அவரே! அவரை புரிஞ்சுக்கவே முடியாது. மேஷம் விருச்சிகம், தனுசு மீனம், கடகம் சிம்மம், ஆகிய ஆறு லக்னங்களுக்கு சாதகமான பலன்களை தருவதில்லை.
அவர் நல்லது செய்ய வேண்டுமெனில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ராகு ஆகிய வீடுகளில் இருக்கும் ராகு நல்லதை செய்வார். தான் இருக்கும் வீட்டின் அதிபதியை போல ராகு செயல்படுவார்.
சுபத்துவமான ராகு ஒருவருக்கு ராஜயோகத்தை அள்ளித்தருபவர். ஒருவருக்கு ராகு பலன் தர வேண்டும் என்றால் இயற்கை சுபரின் வீட்டில் இருக்க வேண்டும். திடீர் பிரபலம் ராகுவினால் நடக்கும். சினிமா, அரசியல் என பிரபலம் அடைய ராகுதான் காரணம். குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் வீட்டில் அமரும் போது அவர்களின் காரகத்தை செய்வார்.
மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஐந்து இடங்களில் இருக்கும் ராகு சுயமான நன்மை செய்வார். சுபர் தொடர்பு இருந்தால் மேன்மையான பலன் கிடைக்கும். ராகுவை குரு பகவான் பார்த்தால் அவர் கெடுதல் செய்ய மாட்டார்.
ராகு திசை நடந்தால் கடல்கடந்து வெளியே செல்லுதல். வெளிநாடு செல்லும் யோகத்தை தருவார். வெளிமாநிலம் போய் பொருள் தேட வைப்பார். புத்திசாலித்தனமான தன லாபத்தை தருவார். உங்களுக்கு வருமானத்தை கொட்டுவார். அந்த அளவிற்கு கொடுத்து உங்களை திக்கு முக்காட வைப்பார்.
நல்லவன் கெட்டவன் என்று ராகு பார்ப்பதில்லை. பூர்வ புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் எந்த வயதில் அனுபவிக்கப் போகிறீர்கள் என்று உணர்த்துபவர் ராகுதான். பணம் கூரையை பிச்சிச்கொண்டு கொண்டும் என்று சொல்வது அவருக்கு சரியாக இருக்கும்.
ராகுபகவான் ஒருவரின் ஜாதகத்தில் பலமிழந்து தீயவர்களின் சேர்க்கை பெற்று இருந்தால் இருந்தால் குழந்தை பருவத்தில் ராகு திசை நடைபெற்றால் உடல் நல பாதிப்பு ஏற்படும். பெற்றோர்களுக்கு உடல்நலம் பாதிக்கும். கல்வியில் தடையும், தீயவர்களின் நட்பும் ஏற்படும். சிலருக்கு திருமண தடையும் அவப்பெயரும் ஏற்படும்.
பரிகார ஆலயங்கள்.
திருநாகேஸ்வரம்,திருப்பாம்புரம்,ஸ்ரீகாளகஸ்தி.
