ராகவேந்திரரின் மகிமை

283

ஒன்றுக்கு உதவாத மனிதர்களை, மண்ணுக்கு சமம் என்று குறை கூறுவது வழக்கம்.
தான் வாழ்ந்த விதத்தால் மிருத்திகை எனப்ப டும் மண்ணுக்கும், மக்கள் அனைவரும் வண ங்கும் மகத்தான இடத்தை அளித்தவர் ராகவே ந்திரர். அவர் மண்ணுலகை வலம் வந்த கால த்திலும், இன்றும், ஏன் என்றுமே ராகவேந்திர பக்தர்க ளுக்கு மிருத்திகை என்னும் மண்ணா னது குரு ராகவேந்திரரின் பிரசாதம்தான்.
அவர் கைபட்ட மண் செய்த மகோன்னத லீலை ஒன்று இதோ….
மடத்தில் ஒரு சமயம் ஏழைச் சிறுவன் ஒருவன் சிஷ்யனாக வந்து சேர்ந்தான். பண்டிதர்கள் வரிசையில் சேர்க்க முடியாவிட்டாலும், பண்பா ளனாகவும், குரு பக்தியில் தோய்ந்த தொண்ட னாகவும் அவன் விளங்கினான்.
கல்விக்கான பருவம் முடிந்ததும் அவனது தாய் தந்தையர் அவனுக்கு மணம் செய்ய ஏற்ற பெ ண்ணைத் தேடினார்கள். ஏழைக்கு யார் தன் மகளை மணமுடித்துத் தருவார்கள்? அதனால் சிஷ்யன் குருவுக்கு பணிவிடைகள் செய்தவா றே காலத்தைத் தள்ளிக் கொண்டிருந்தான்.
எல்லாம் தெரிந்த மகானுக்கு இந்த விவரங் கள் தெரியாதா? கார்மேகம் போன்ற அவரது கருணை, சிஷ்யனின் பொறுமையையும், குரு பக்தியையும் கண்டு அவன் மீது மழையாகப் பொழிய தக்க தருணத்துக்காக காத்திருந்தது.
எந்தச் சூழ்நிலையிலும், எந்த இடத்திலும் பிரதி உபகாரம் செய்யாமல் பலனை மட்டும் சன்யாசிகள் அனுபவிப்பது இல்லை. அதே விதமாக ஆற்றிலும், குளத்திலும் குளிக்கச் செல்லும் துறவிகள் நீராடி முடித்து விட்டு, கரையேறும் போது, நீர் நிலையில் இருந்து ஒரு பிடி மண்ணை அள்ளி வந்து வெளியில் சேர்ப்பது வழக்கம்.
ஒரு நாள் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ராக வேந்திரர், நீராடுவதற்குத் தனக்கு உதவிய சிஷ்யனிடம், அதே மண்ணை ஒரு பிடி அள்ளி த்தந்து ”இதை எடுத்து கொண்டு போய் விவா கம் செய்து வாழ்வாயாக” என ஆசீர்வாதம் செய்தார்.
குரு தந்த மண்ணை மாபெரும் பாக்கியமாக எண்ணி, பயபக்தியு டன் அதை ஒரு துணியில் முடிந்து, தலையில் வைத்து.கொண்டு, சொந்த ஊருக்கு சிஷ்யர் பயணமானார்.
நெடும் தொலைவு பயணத் துக்குப் பிறகு ஒரு நகரத்தை அடைந்தார். களைப்பு காரணமாக ஒரு வீட்டின் திண்ணை யில் கண்ணயர்ந்தவர் நடுநிசியில் பேரரவம் கேட்டு விழித்தார்.
ஒரு பிரம்மராக்ஷசன் அந்த வீட்டிற்குள் செல்ல முயன்று, அது முடியாமல் போராடிக் கொண்டி ருந்தான். பிரம்மராக்ஷசனை உள்ளே செல்ல முடியாமல் தடுத்துக் கொண்டிருந்தது கோபா க்னியாக ஒரு வேலி.
சிஷ்யரின் மூட்டையிலிரு ந்த ராகவேந்திரரின் பிரசாதமான மண் தான் அது. ராக்ஷசனை வீட்டுக்குள் செல்லாமல் தடுத்த அதே மண் தான், அதை அழிக்கவும் வல்ல மாற்று மருந்து என்று சிஷ்யருக்குத் தோன்றியது. குரு ராக வேந்திரரை மனதில் தியானித்தபடி, அவரது திருநாமத்தை நெஞ்சில் நிறுத்தி பிரசாத மண்ணை, சிஷ்யர் பூதத்தின் மேல் வீச, அது பிரம்ம ராக்ஷசனை பஸ்பமாக்கியது.
பூதத்தை எரித்த அந்த அக்னியிலிருந்து, சாப விமோசனம் பெற்ற தேவன் ஒருவன் திவ்ய மங்கள உருவத்துடன் தோன்றினான். சிஷ்ய ருக்கு ஆசிகள் பலவற்றுடன் அளவிட முடியாத பொன்னையும், பொருளையும் தந்து தன் இருப்பிடம் சேர்ந்தான்.
அந்த வீட்டின் சொந்தக்காரர் ஓர் அந்தணர். இந்த காட்சிகளைக் கலவரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது வீட்டில் பிறந்த பல சிசுக்களை பிரம்ம ராக்ஷசன் இதுவரை தின்று முடித்திருந்தான். இன்றும் நிகழ இருந்த பிரசவத்திலிருந்து குழந்தையைத் தின்பதற் காகவே அந்த பூதம் அங்கு வந்தது.
பூதம் மடிந்து, சுகப் பிரசவத்தில் தனக்கு வாரி சும் கிடைக்க, அதற்குக் காரணமாக விளங்கிய மிருத்திகை மற்றும் ராகவேந்திரரின் அருளை அவர் போற்றினார். தன் குறைகளைத் தீர்த்த சிஷ்யருக்குத் தன் சகோதரியை மணம் முடித் துவைத்தார். ராகவேந்திரர் கையால் கொடுத்த மண் சீடருக்கு பொன்னையும், பொருளையும், வாழ்க்கைத் துணையாகப் பெண்ணை யும் தேடித் தந்தது.
குரு ராகவேந்திரரை நம்பியவருக்கு, வாழ்வில் ஒரு நாளும் இடர் என்பதே இல்லை..
.