Thursday, October 19, 2023
HomeAanmeega Thagavalgalஆதி விநாயகர் கோயில் சிறப்புகள்!

ஆதி விநாயகர் கோயில் சிறப்புகள்!

ஆதி விநாயகர் கோயில் சிறப்புகள்!

யானை முகம் இன்றி மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர் கோயில் சிறப்புகள்!

திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் அருகே சிதிலபதியில் உள்ளது முக்தீஸ்வரர் ஆலையம். மனித முக விநாயகர்: இந்த கோயிலில் அருள்பாலிக்கும் விநாயக பெருமான் மனிதம் உகத்துடன் ஆதி விநாயகர் என்ற பெயரில் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார்.

இத்தலத்தில் ஓடும் அரசலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. இது போன்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாயும் நதி, ஆறுகள் அருகே அமைந்துள்ள கோயிகள் பரிகாரத்துக்கும் வழிபாட்டுக்கும் மிகச் சிறந்தவை. சத்குரு வேங்கடராம சுவாமிகள் கூறியதாவது: திலதைப்பதி ஆலயத்தின் முன் பிள்ளையாரப்பர் மனிதமுகத்துடன், நரமுக விநாயகராக, ஆதிவிநாயகராக மிகவும் அபூர்வமான தோற்றத்துடன் அருள்கின்றார். வேறெங்கும் இத்தகைய திவ்ய ஸ்ரூபத்தைக் காண இயலாது.

ஸ்ரீ அகஸ்தியர் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் தூல, சூக்கும வடிவுகளில் நேரடியாகவே வழிபடும் பிள்லையார் மூர்த்தி இவர். குடும்பத்தில் பெற்றோர்கள், பிள்ளைகள், புதல்விகள், பேரன், பேத்திகள் இடையே சுமூகமான, சாந்தமான உறவு நிலை ஏற்பட்டிட வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த விநாடக மூர்த்தி. குழந்தைகளுக்கு , பள்ளி பருவத்தினருக்கு நல்ல ஞாபக சக்தியை அளிக்க வல்ல மூர்த்தி.

பனமலைபேட்டை தாளகிரீஸ்வரர் ஆலயதரிசனம்.

தமிழ்நாட்டிலுள்ள, விழுப்புரம் மாவட்டம், பனமலை என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில்.

அமைவிடம்

இவ்வாலயம் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ள பனமலை கிராம பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. பனமலை, செஞ்சியிலிருந்து 23கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

வரலாறு

“தாள் ” என்ற எழுது பனை மரத்தை குறிக்கும். பனை மரத்தை தலமரமாக கொண்ட சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. இராசசிம்மன் என அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்ம பல்லவன் பல்லவ மன்னர்களுள் ஒருவன். மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், கைலாசநாதர் கோயில், பனமலை தாளகிரீசுவரர் கோயில் இவ்வரசனால் கட்டப்பட்டைவை.

பல்லவர் கால சுவர் ஓவியம்

எழில் மிகு சோமஸ்கந்தர் தேவியுடன் இருக்கும் ஏழாம் நூற்றாண்டு கலையழகு மிக்க சுவர் ஓவியம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இந்திய தொல்லியல் ஆய்வகம் மூலமாக அதிகாரப்பூர்வமாக அங்கிகரிக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களில் இந்த ஓவியம் ஒன்று.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 1 =

Most Popular