Thursday, October 19, 2023
HomeAanmeega Thagavalgalத்ரிமூர்த்திகளும் காண முடியாத லலிதையின் பாதத்தைக்கண்ட அகஸ்தியர்

த்ரிமூர்த்திகளும் காண முடியாத லலிதையின் பாதத்தைக்கண்ட அகஸ்தியர்

“ஓ!! அச்வானன!! மேரு மஹா கிரியில் ஶ்ரீதேவி லலிதா த்ரிபுரஸுந்தரியின் ஸ்தானம் உள்ளதாக தாங்கள் கூறுவது, எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது!! ஹே!! ஹயவதன தயாநிதே!! ஶ்ரீராஜராஜேச்வரி தர்பார் அங்குள்ளதாக கூறும் தாங்கள் அறியாதது உண்டோ!! ஸுமேரு பர்வதத்தில் நான் அறியாத இடம் என்று ஒன்றுமே கிடையாது!! அங்ஙனமிருக்க ஶ்ரீலலிதையின் ஸ்தானம் அங்குள்ளதை நான் காணவில்லையே!! இது வெகுவாஸ்சர்யம்!!” அகஸ்த்யர் இயம்பி நிறுத்தினார்.

“லோபாமுத்ரை மணாளா!! மேரு சிகரதத்தின் நடு உச்சியில் ஶ்ரீவித்யோபாஸனையின் பயனால் விச்வகர்மாவினால், அம்ருத ஸாகர மத்யத்தில் விளங்கும் ஶ்ரீநகரம் போன்றே, ஸ்தாபிக்கப்பட்ட ஶ்ரீநகரம் ஒன்று உண்டு!! கேளாய்!! கும்பமுனி!! பவானியின் மஹிமையைக் கேட்டு அவளை உபாஸித்தோர் மட்டுமேயன்றோ, அவள் புவனத்தைக் காண முடியும், நாராயணணான எனக்கும், சங்கரனுக்கும் கூட அவள் தர்சனம் எளிதன்று!! கடும் உபாஸனையினால் மட்டுமே காணத்தக்கவள் அம்பிகை. ஆதலால் நான் கூறும் முறைப்படி. ஶ்ரீசக்ரோபாஸனை செய்து, அவளது ஸாக்ஷித்காரத்தை அடைவாய்!!” ஹயக்ரீவ ஸ்வாமி இயம்பினார்.

ஶ்ரீகாஞ்சி நகரத்தில் காமாக்ஷி த்ரிபுரஸுந்தரியின் ஆலயத்தில் ஶ்ரீஅகஸ்த்யர் பகவான் உபதேசித்த ஶ்ரீவித்யா மஹாமந்த்ர ஜபத்தில் ஈடுபட்டு தன்னை மறந்தார். லலிதையேயான காமாக்ஷியைக் கண்டு ஆனந்த பாஷ்பம் பெருக அவளை நமஸ்கரித்தார்.

அம்ருத ப்ரவாஹத்தையொத்த ஆனந்த லஹரியானவளும், அங்குசம், பாசம், இக்ஷுதனுஸ், புஷ்ப பாணம் ஆகியவைகளை கரங்களில் ஏந்தினவளும், லக்ஷ்மி ஸரஸ்வதிகளால் சாமரம் வீசப்படுபவளும், காமேச்வரனின் பரமானந்தமானவளும், மலையரசனின் வம்சத்திற்கு நீங்கா புகழளித்தவளும், ஸதி எனும் நாமத்திற்கே பொருளானவளும், சந்த்ரசூர்யாக்னிகளை மூன்று நேத்ரங்களாய் உடையவளும், கோடிக்கணக்கான தசாவதார மூர்த்தங்களை கை நகநுனியினால் ச்ருஷ்ட்டித்தவளும், லீலையாக பல வடிவங்களை தாங்குபவளும், மந்த்ரினியால் ஸேவிக்கப்படுபவளும், தண்டநாதையால் கட்டியம் கூறப்படுபவளும், சஞ்சலமான கண்களால் தேவர் கூட்டத்தை கடாக்ஷித்து அபயமளிப்பவளுமான ஶ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகை அகஸ்த்யருக்கு காக்ஷியளித்தாள்.

த்ரிமூர்த்திகளும் காண முடியாத லலிதையின் பாதத்தைக் கண்டு புளகாங்கிதம் அடைந்து, ஸாஷ்டாங்கமாய் லலிதையை நமஸ்காரம் செய்தார் அகஸ்தியர்.

“ஓ!! அகஸ்த்ய!! எனது புவனத்தின் தர்சனம் அளித்தோம்! அஞ்ஞானம் துளியளவு இருந்தாலும் ஶ்ரீபுர தர்சனம் இராது!! ஸுத்த ஞானமே மயமான என் ஸங்கல்பத்தில் தோன்றியதால் ஶ்ரீபுரம் ஞானமே மயமானது. உனது தீவ்ரமான பக்தியால் மகிழ்ந்தோம்!!” என்றுரைத்த பராசக்தி அகஸ்த்யருக்கு ஶ்ரீபுரத்தில் ஶ்ரீமஹா ராஜராஜேச்வரியாக, லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியாக, மஹாபராபட்டாரிகையாக தான் வீற்றிருக்கும் காக்ஷியளித்தாள்.

ஸதா அகஸ்த்யரும் பரமேச்வரியை சரணமடைந்து அவளையே பூஜித்து வந்தார்.

நாமும் அம்பாளை ஸ்மரித்து அவள் கடாக்ஷத்திற்கு பாத்ரமாவோம்.

ஶ்ரீகாமாக்ஷீ சரணம் மம

ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 20 =

Most Popular