கல்வி, குழந்தை அருளும் கோயில்கள்!
கல்வி வளம் பெருக:
மாதவரம் கரிவரதராஜப் பெருமாள் கோயில்
கூத்தனூர் சரஸ்வதி தேவி கோயில்.
செட்டிபுண்ணியம் வரதராஜப் பெருமாள் கோயில்
திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில்.
குழந்தைப்பேறு கிடைக்க
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோயில்
தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்.
திருச்சி தாயுமானசுவாமி கோயில்.
தென்காசி ஆயக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்
திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோயில்.
நீண்ட ஆயுள் கிடைக்க:
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்
பரமக்குடி அடுத்த எமனேஸ்வரத்தில் உள்ள எமனேஸ்வரமுடையார் கோயில்
கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோயில்
காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தசுவாமி கோயில்
சென்னை வேளச்சேரியில் உள்ள தண்டீஸ்வரர் கோயில்
ஞீலிவனேஸ்வரர் கோயில். திருப்பைஞ்ஞீலி.
வாஞ்சிநாதசுவாமி கோயில், வாஞ்சியம்,
விநாயகப்பெருமான் ஆறுபடை வீடுகள்:
முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதுபோல, விநாயகப்பெருமானுக்கும் ஆறுபடை வீடுகள் அமைந்திருக்கின்றன. திருநாரையூர் கோவிலில் வீற்றிருக்கும் பொல்லாப் பிள்ளையார்.
திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஆழத்து விநாயகர்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வீற்றிருக்கும் சித்தி விநாயகர்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்குள் இருக்ககள்ளவாரண பிள்ளையார்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள ‘அல்லல் தீர்த்த விநாயகர்
காசி எனப்படும் வாரணாசியில் உள்ள துண்டி ராஜகணபதி. இந்த 6 ஆலயங்களும்தான், விநாயகப்பெருமானுக்குரிய ஆறுபடை வீடுகளாகும்.
உத்திரகோசமங்கை மங்களநாதர் கோயில்:
ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள மிக பழமையான பொதுவாக, ஒரு கோயிலுக்கு சென்றால் ஒருமுறை வணங்கி விட்டு, உடனேயே திரும்பி விடுகிறோம். ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையத்தக்க வகையிலான கோயில் ஒன்று ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் உள்ளது.
வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது. மார்கழி திருவாதிரை அன்று மட்டும் இதற்கு பூஜை உண்டு. மற்ற நாட்களில் சந்தனக்காப்பு சார்த்தப்பட்டிருக்கும். ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும் தான் இறைவனுக்கு தாழம்பூ சார்த்தலாம் என்பது சிறப்பான செய்தி. ஏனெனில் இறைவனின் முடியைக் கண்டதாக தாழம்பூவின் சாட்சியுடன் பொய் சொன்ன பிரம்மா இத்தலத்தில் வணங்கி சாப விமோசனம் பெற்றார்.
இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது. உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோயில் பழம்பெருமை மிக்கது. ராவணனின் மனைவியான மண்டோதரிக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது. உலகிலேயே சிறந்த சிவபக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என அவள் அடம் பிடித்தாள். ஈசனை தியானித்தாள். சிவபெருமான் தான் பாதுகாத்து வந்த வேத ஆகம நூல் ஒன்றை முனிவர்களிடம் ஒப்படைத்து, “”நான் மண்டோதரிக்கு காட்சிதர செல்கிறேன். திரும்ப வரும் வரை இதை பத்திரமாக வைத்திருங்கள்,” என கூறிச்சென்றார்.
மண்டோதரியின் முன்பு குழந்தை வடிவில் காட்சி தந்தார். அப்போது ராவணன் அந்த குழந்தை சிவன் என்பதை புரிந்து கொண்டான். சிவனைத் தொட்டான். அந்த நேரத்தில் இறைவன் அக்னியாக மாறி ராவணனை சோதித்தார். உலகில் அனைத்தும் தீப் பற்றி எரிந்தன. சிவன் முனிவர்களிடம் விட்டு சென்ற வேத ஆகம நூலுக்கும் ஆபத்து வந்தது. முனிவர்கள் அதைக்காப்பாற்ற வழியின்றி, சிவன் வந்தால் என்ன பதில் சொல்வது என்ற பயத்தில், தீர்த்தத்தில் குதித்து இறந்தனர்.
அது “அக்னி தீர்த்தம்’ என பெயர்பெற்றது. அங்கிருந்த மாணிக்கவாசகர் மட்டுமே தைரியமாக இருந்து அந்த நூலை காப்பாற்றினார். பிறகு ராவணனுக்கும் மண்டோதரிக்கும் திருமணம் நடக்க சிவன் அருள்பாலித்தார். மாணிக்கவாசகருக்கு தன்னைப்போலவே லிங்கவடிவம் தந்து கவுரவித்தார். இப்போதும் இத்தலத்தில் மாணிக்கவாசகர் லிங்கவடிவில் காட்சி தருகின்ற தலமாக திகழும்
உத்திரகோசமங்கை என்னும் கிராமத்தில் ஊரின் மையபகுதியில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்தரும் மங்களநாயகி அம்பாள் சமேத அருள்மிகு மங்களநாதர் சுவாமி ஆலயத்தை தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் ஈசன் அடியேனுக்கு அளித்துள்ளார்.
