பௌர்ணமி விரதத்தின் மகிமைகள்!
பெளர்ணமி தினத்தில் சந்திரன் தனது பிரகாச ஒளியை பரிபூரணமாக வழங்குவதைப் போல, பெளர்ணமி விரத வழிபாடு பரிபூரண பலனைத் தரவல்லது. பெளர்ணமி தினத்தில் எந்த தெய்வத்தை நினைத்து விரதமிருந்து வழிபட்டாலும் நாம் எதை நினைத்து வழிபடுகிறோமோ அது நிறைவேறும். குறிப்பாக, பௌர்ணமி திருநாள் என்பது பெண் தெய்வங்களுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சந்திரன் தேய்த்து மீண்டும் வளர்ந்து வருவது பௌர்ணமி நாள் ஆகும். இந்த பௌர்ணமி தினத்தன்று நாம் விரதம் இருந்தால் பல நன்மைகள் கிடைக்கும். பெளர்ணமி விரதம் எப்படி இருப்பது? என்பதைப் பற்றி கீழ்வரும் வழிமுறையில் காண்போம்.
பெளர்ணமி விரதம்:
காலையில் எழுந்தவுடன் குளித்த பிறகு உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து வணங்கி அதன்பின் அம்மனுக்கு நெய் வேத்தியம் காட்ட வேண்டும், இந்த பூஜையை விட்டில் கூட செய்யலாம் அல்லது அருகில் உள்ள அம்மன் சன்னதிக்கு சென்று வணங்கலாம்.
பவுர்ணமி தினத்தன்று இந்த ஸ்லோகத்தை எத்தனை முறை துதித்து வந்தாலும் துதிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள், மிகுந்த செல்வம், எதிரிகள் இல்லாத நிலை, மரண பயமின்மை, தெய்வங்களின் அருள் போன்ற பேறுகள் கிடைத்து இறுதியில் மோட்ச நிலையை அடைவார்கள்.
ஓம் கமலவர்ணனே போற்றி ஓம் சித்திரை உருவே போற்றி ஓம் பயம் போக்குபவனே போற்றி ஓம் கால உருவே போற்றி ஓம் அந்தக நண்பனே போற்றி ஓம் ஞான உருவே போற்றி ஓம் கருணாகரனே போற்றி ஓம் கணக்கனே போற்றி ஓம் தர்மராஜனே போற்றி ஓம் தேவலோக வாசனே போற்றி ஓம் ஆயுள் காரணனே போற்றி ஓம் மேன்மை தருபவனே போற்றி ஓம் குழந்தை வடிவினனே போற்றி ஓம் குளிகன் உருவினனே போற்றி ஓம் புண்ணிய தோற்றமுடையாய் போற்றி ஓம் சித்திரகுப்தனே போற்றி…
இந்த ஸ்லோகத்தை சொல்ல இயலாதவர்கள், விளக்கு ஏற்றி மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டு இறைவியை வணங்க வேண்டும். மனதில் 108 முறை தெயவ மந்திரங்களை அல்லது ‘ஓம்’ என்ற மந்திரத்தை சொல்லி வரவேண்டும். பின் விரதத்தை முடித்து கொள்ளும் முன் இரவில் சந்திரனை தரிசித்து வீட்டில் உள்ள பூஜை அறையில் அம்மனுக்கு பூஜை செய்து உணவை உட்கொண்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.
எனவே, ஆனி மாதம் வரும் பெளர்ணமி தினத்தில் விரதமிருந்து இறைவனை வழிபடுதலும், இரவில் சந்திர தரிசனம் செய்தலும் மிக அற்புதமான பலனைத் தரவல்லது.
