Thursday, October 19, 2023
HomeAanmeega Thagavalgal64 திருவிளையாடல்களும் பாடல் வடிவில்

64 திருவிளையாடல்களும் பாடல் வடிவில்

மீனாட்சி சொக்கர் அருளிடச் செய்த
அறுபத்தி நான்கு திருவிளையாடல்
மதுரையில் நடத்திட மாபெரும் தவம் செய்தோம்
மகிழ்ந்தே பாடி துதித்திடுவோமே

(1) இந்திரனைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் சுந்தரரை துதிக்க விலகியதே
(2)வெள்ளை யானையின்சாபம் தீர்த்து
(3)குலசேகரர்க்கருள் செய்து மதுரையை அமைத்தார் (1)

(4)மலயத்துவசன் காஞ்சனமாலைக்கு தடாதகைப் பிராட்டி அவதரித்தார்
(5)திக்விஜயம் செய்த பிராட்டியாரை சிவபெருமான் திருமணம் செய்தாரே (2)

(6)அனைவரும் மகிழ பொன்னம்பலத்தில் திரு நடனமாடி அருளினாரே
(7)திருமண விருந்தில் மிஞ்சிய உணவை உண்ண குண்டோதரனின் பசி தூண்டினாரே (3)

(8)அன்னக் குழியையும் வைகையையும் அமைத்து குண்டனின் பசி, தாகம் தீர்த்து வைத்தார்
(9)காஞ்சன மாலை தீர்த்தமாடவே ஏழு கடல்களையும் மதுரைக்கு வரவழைத்தாரே (4)

(10)காஞ்சனமாலைக்கும் மலயத்துவசனுக்கும் மோட்சமளித்து அருளினாரே
(11)உக்கிரகுமாரன் அவதாரப் படலம்
(12)உக்கிரகுமாரன் திருமணப் படலம்(5)

(13)வேற்படை எரிந்து மதுரையைக் காத்தார்
(14)இந்திரனை வென்று மழை பொழியச் செய்தார் (6)

(15)வீரபாண்டியனின் அவதாரப் படலம்
(16)மேருவைச் செண்டாலடித்த படலம்
(17)தட்சிணாமூர்த்தி என குருவடிவாகி சிவனே, வேதமென அருளிய பாடம் (7)

(18)வர்ணன் ஏவிய கடல் நீரை தடுத்து மதுரையைக் காத்தார் சிவபெருமான்
(19)மேகங்களால் நான்மாடக் கூடலமைத்தார்
(20)எல்லாம்வல்ல சித்தர் ஆனாரே (8)

(21)கல்யானையை கரும்புண்ண வைத்தார்
(22)சமணர்களை வென்று அருள்i புரிந்தார்
(23)கௌரிக்கு அருள் செய்தார்
(24)கால்மாறி ஆடினார்
(25)வேடனுக்கு ஏற்பட்ட கொலை பழி தீர்த்தார் (9)

(26)மாபாதகம் அகல வகை செய்தாரே
(27)குரு துரோகியின் அங்கம் வெட்டிய படலம்
(28)சமணர்கள் ஏவிய நஞ்சினைத் தடுத்தார்
(29)மாயப்பசுவை வதைத்தருள் செய்தார்(10)

(30)சிவ பக்தன்சுந்தர சாமந்தனுக்கு மெய்காட்டிய திருவிளையாடல்
(31)பாண்டியனுக்கு உலவாக்கிழியருளினாரே
(32)வளையல் விற்ற திருவிளையாடல்(11)

(33)அஷ்டமாசித்திகளை உபதேசித்து
(34)விடையிலச்சினை இட்ட திருவிளையாடல்
(35)தண்ணீர் பந்தலமைத்தருள் செய்து
(36)பொன்னனையாளுக்கு இரச வாதம் செய்தார்(12)

(37)சோழனை மடுவில் வீழ்த்தியே வென்றார்
(38)உலவாக் கோட்டை அமைத்து தந்தார்
(39)மாமதுரை வந்து வழக்கு தீர்த்து வைத்தார்
(40)வரகுணனுக்கு சிவலோகம் காட்டினார்(13)

(41)விறகு விற்ற திருவிளையாடல்
(42)திருமுகமென்றும் ஓலை கொடுத்து
(43)நின்றிசை பாட பலகையருளி
(44)இசை வாது வென்ற திருவிளையாடல்(14)

(45)பன்றிக் குட்டிகளின் பசியைப் போக்கியே
(46)பன்றிக்குட்டிகளை மந்திரிகளாக்கிய
(47)கருங்குருவிக்கு உபதேசம் செய்து
(48) நாரைக்கு முக்தி கொடுத்தாரே(15)

(49)திருவாலவாய்க் கண்ட படலம்
(50)சுந்தரப் பேரம் செய்த படலம்
(51) சங்கப் பலகை கொடுத்த படலம்
(52)தருமிக்குப் பொற்கிழியளித்த படலம்(16)

(53)கீரனை கரையேற்றியே வைத்தார்
(54) இலக்கண உபதேசம் செய்தாரே
(55)சங்கத்தார் கலகத்தை தீர்த்து வைத்ததுடன்
(56)இடைக்காடன் பிணக்கையும் தீர்த்தாரே(17)

(57)சுறா மீனா வலை வீசியே பிடித்தார்
(58)வாதவூர் அடிகளுக்கு உபதேசித்தார்
(59)நரியை பரியாக்கி
(60)பரியை நரியாக்கி
(61)பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடல்(18)

(62)பாண்டியனின் சுரந்தீர்த்து
(63)சமணரைகழுவேற்றி திருவிளையாடல் செய்தாரே
(64)வன்னி, கிணறு, சிவலிங்கம் மூன்றையும் சாட்சியாக அழைத்தருள் செய்தார்.(19)

சோம சுந்தரரின் திருவிளையாடலை
பாடினாலும் பாட – கேட்டாலும்
துன்பங்கள் மறைந்தே இன்பமுண்டாகும்
மனதில் மிகுந்த சாந்தியுண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 5 =

Most Popular