Wednesday, October 18, 2023
HomeAanmeega Thagavalgalகடன், அனைத்து தோஷங்களும் விலக மூன்று நரசிம்மர் தரிசனம்!

கடன், அனைத்து தோஷங்களும் விலக மூன்று நரசிம்மர் தரிசனம்!

கடன், அனைத்து தோஷங்களும் விலக மூன்று நரசிம்மர் தரிசனம்!

உங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபடுங்கள , லட்சுமி நரசிம்மர் உங்கள் குடும்பத்திற்கு வரும் இன்னல்கள், பிரசனைகள் தீர்த்து நல்வழி காட்டுபவர்! ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருவடிகள் சரணம்

ஒரே நாளில் மூன்று நரசிம்மர் தரிசனம் காலையில் சிங்கிரிகுடி, பகலில் பூவரசன்குப்பம், இறுதியில் பரிக்கல் என்ற வரிசைப்படி தரிசிக்க வேண்டும். விழுப்புரம் டு சிங்கிரிகுடி தூரம் எவ்வளவு புதுச்சேரி – விழுப்புரம் பாதையில் புதுச்சேரியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் ஆலயம் உள்ளது.

பூவரசன்குப்பத்தில் இருந்து சிங்கிரிக் குடி 26 கி.மீ. பெருமாளின் திருநாமம்: ஸ்ரீலட்சுமி நரசிம்மர்
பரிக்கல் தலத்தில் இருந்து பூவரசன் குப்பம் தலம் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
சிங்கிரிக்குடி புதுச்சேரியில் இருந்து இந்த தலம் மிக அருகில் உள்ளது. எனவே ஒரே நாளில் 3 நரசிம்மரை வழிபட விரும்புபவர்கள், புதுச்சேரியில் இருப்பவர்கள் இங்கிருந்து நரசிம்மர் வழிபாட்டைத் தொடங்கலாம். சிங்கிரிக்குடியில் வீற்றிருக்கும் நரசிம்ம மூர்த்தியின் திருநாமம், ‘லட்சுமி நரசிம்மர்’ . இங்கு இவர் உக்கிர நரசிம்மராக அருள்கிறார்.

தாயாரின் திருநாமம் கனகவல்லி ஆகும். திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த உக்கிர நரசிம்மரை வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும். பூவரசங்குப்பம் சிங்கிரிக்குடியில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த ஊரை அடையலாம். நேர்கோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் தலங்களில் நாம் 2-வதாக வழிபட வேண்டியது இது.

இந்த ஆலயத்திலும் இறைவன், ‘லட்சுமி நரசிம்மர்’ என்ற திருநாமத்துடனேயே அருள்பாலித்து வருகிறார். தாயாரின் பெயர், அமிர்தவல்லி என்பதாகும். இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை வழிபாடு செய்து வந்தால், உடல்பிணி மற்றும் சகலவிதமான தோஷங்கள் நீங்கும். பரிக்கல் பூவரசங்குப்பத்தில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் இருக்கிறது. நரசிம்மர் ஆலயத்தில் மூன்றாவதாக வழிபட வேண்டிய கோவில் இது.

இந்த ஆலய இறைவனின் பெயரும், ‘லட்சுமி நரசிம்மர்’தான். தாயாரின் பெயர் கனகவல்லி என்பதாகும். பதவி உயர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள், பதவி இழந்தவர்கள் அந்தப் பதவியை மீண்டும் பிடிப்பதற்கும் இங்கு வந்து வழிபாடு செய்யலாம். காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த ஆலயம் திறந்திருக்கும். விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் விழுப்புரத்தில் இருந்து சுமார் 21 கிலோமீட்டரில் பரிக்கல் இருக்கிறது.

ஒரே நாளில் தரிசிக்கக்கூடிய வகையில் மூன்று நரசிம்மர் ஆலயங்கள் அமைந்துள்ளன. பரிக்கல், பூவரசங்குப்பம், சிங்கிரிக்குடி ஆகிய மூன்று தலங்களே அவை. இந்த மூன்று தலங்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கடன், குடும்பப் பிரச்னைகள் மற்றும் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =

Most Popular