துன்பங்களிலிருந்து விடுபடுவது எப்படி ?

264

பல சந்தா்ப்பங்களில் நாம் செய்யும் தவறுகள் நமக்குத் தொிகின்றன. ஆயினும் , எனக்கு ஏற்பட்ட சூழ்நிலையில் இதை நான் செய்தேன் என்று நமது மனோசாட்சியைத் திருப்திப்படுத்தி விடுகிறோம். இன்னும் சொல்லப்போனால் , நாம் செய்யும் தவறுகளுக்கு காரணம் கண்டுபிடித்து, நம்மையும் பிறரையும் ஏமாற்றிக் கொண்டு இருக்கிறோம்.

திருந்தவேண்டும் என்னும் எண்ணம் அடிக்கடி நமக்கு ஏற்படும். ஆனால் , திருந்துவதற்க்கான வழி தொியாமையால் திருத்தம் பெறாமல் திரும்பத் திரும்பத் தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறோம். அவற்றின் பயனாகிய துன்பங்களையும் அனுபவித்துக்கொண்டும் இருக்கிறோம். நமக்கு ஏற்படுகின்ற இந்த நிலைகளையெல்லாம் இறைவன் நன்றாக அறிந்து வைத்தே இருக்கிறான்.

திருந்த விரும்பும் ஒவ்வொருவரும் , துன்பங்களிலிருந்து விடுப்படுவதற்கு விரும்பும் ஒவ்வொருவரும் , திருந்தி மகிழ்ச்சியாக வாழும் பொருட்டே இறைவன் அருளாளா்களை , இப்பூவுலகிற்கு அனுப்பி , அவா்களைக் கொண்டு அருள்வாக்குகளை வழங்கச் செய்திருக்கிறான். அந்த அருள் வாக்குகளை வழங்கச் செய்திருக்கிறான். அந்த அருள்வாக்குகள் , நமது அறியாமையைப் போக்கி , நம்மைத் தீவினைகள் செய்வதிலிருந்து காப்பாற்றி , நம்மைத் தீவினைகள் செய்வதிலிருந்து காப்பாற்றி , நம்மைத் சிறிது சிறிதாக திருந்தச் செய்கின்றன. கொலைகாரா்களும் குணங்கெட்டவா்களும் கூட , அந்த அருள் வாக்குகளைப் பாராயணம் செய்வாா்களாயின் , நல்லவா்களாகி விடுவாா்கள்.

இறை வடிவமாக வழிபடப் பெறும் திருவுருவங்களைக் கல், மரம் என்பதும், ஆசாரியனைச் சாதாரண மனிதன் என்பதும், அடியார்களை பழித்துப் பேசுவதும் , துளசித் தீர்த்தத்தை வெறும் நீர் என்பதும் கூடாதவையாகும். பழமையான உயர்ந்த ஆசாரியர்களின் உபதேசங்களில் நம்பிக்கை கொள்ள வேண்டும். விரதங்களை மிகவும் புனிதமானதாக நாம் எண்ணுதல் வேண்டும். விரதங்களை, சம்பிரதாயங்களை, நாமே அலட்சியமாக எண்ணும் தீய பழக்கங்கள் நம்மை விட்டுப் போதல் வேண்டும். ” ~ ஸ்ரீ ராமானுஜர்”.

உலகம் இயற்கையாகவே இயங்குவது போல் தோன்றினாலும், இதனை இயக்கும் அருட்சக்தியைத் தான் பகவான் என்று குறிப்பிடுகிறோம். பகவான் இன்றி உலகில் எச்செயலும் நடைபெறுவதில்லை. மண் இல்லாமல் எப்படி மண்குடம் உண்டாகாதோ, எப்படி தங்கம் இல்லாமல் ஆபரணம் உண்டாகாதோ அதுபோல கடவுள் இல்லாமல் உலகம் உண்டாவதில்லை.

பிராணிகள் கூட கடமையிலிருந்து ஒருபோதும் விலகுவதில்லை. நாய் வீட்டைக் காக்க தவறுவதில்லை. பசு பால் தர மறுப்பதில்லை. ஆனால், நாம் மட்டும் ஏனோ நம் கடமையிலிருந்து தவறி விடுகிறோம்! கடல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதில் எவ்வளவு நீர் நிறைந்திருந்தாலும் அந்த நீர் நம் தாகத்தைத் தணிப்பதில்லை. ஆனால், ஊற்று நீர் சிறியதாக இருந்தாலும், நம் தாகத்தைத் தணித்து விடும். அதுபோல, வாய்பேசும் பண்டிதனைக் காட்டிலும், ஞானியின் ஒரு வார்த்தை கூட நமக்கு நல்வழிக் காட்டும் தன்மையுடையது.

ஒவ்வொரு நாளும் பாடம் நடத்தும் ஆசிரியர் முதல்நாள் விட்ட இடத்திலிருந்து பாடத்தைத் தொடங்குவது போல, நாமும் சென்ற பிறவியின் தொடர்ச்சியையே இப்பிறவியில் தொடர்கிறோம். தோலால் ஆன பர்ஸ் அழகாக இருந்தாலும், அதில் பணமிருந்தால் மட்டுமே மதிப்பு உண்டாகும். அதுபோல சரீரம் என்னும் இந்த ‘பை’ எத்தனை அழகாக இருந்ததாலும், உயிர் இருந்தால் மட்டுமே உடம்புக்கு மதிப்புண்டு.

கடலில் ஒரு அலை முடிந்ததும் மற்றொரு அலை கிளம்பிக் கொண்டே இருக்கும். அதுபோல அஞ்ஞானம் குடி கொண்டவர்களின் உள்ளத்தில் பலவிதமான சந்தேகங்கள் கிளம்பியபடியே இருக்கும். அதை தீர்த்து வைப்பது என்பது சமுத்திரத்தை கட்டுப்படுத்துவது போலத்தான். இருப்பினும், தளராது, முகம் கோணாது, ஞானப் பிரவாகமாக இருந்து, தெளிவு பெறும் வரை உபதேசிக்கும் ஆசார்யர்களுக்குத் தான் எத்தனை காருண்யம்! அத்தனை ஆசார்யர்களுக்கும்
அனந்த கோடி நமஸ்காரங்கள்.

ஸ்ரீ குருப்யோ நமஹ !

குருவடி திருவடி சரணம் !